For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெத்தவங்க செய்த தவறு பிள்ளைங்களை சேருதே...!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சியின் ஒரு செக்மென்ட் .. பெத்தவங்கள் செய்த தப்பு பிள்ளைங்களை சேருமேன்னு சொல்லும்படி இருந்தது. குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்களை சொல்ல மறந்தோம் என்றால்.. அதன் பின் விளைவுகள் ரொம்ப மோசமாகத்தான் இருக்கும்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பாரதியார் படத்தை காண்பித்தவுடன் பாரதியார் என்று சொல்லத் தெரியவில்லை. ஹிப் ஹாப் தமிழா என்று சொல்கின்றனர். பின்னர் வெகு நேரம் கழித்து ஒரு குழந்தை பாரதியார் என்று சொன்னது.

பாரதியார் என்ன சொல்லி இருக்கார் என்று கேட்டால் குழந்தைகளுக்குத் தெரியவில்லை. ஓடி விளையாடு பாப்பா என்கிற பாரதியார் பாட்டு கூட தெரியாமல் குழந்தைகள் வளர்வது என்பது ஆரோக்கியமான விஷயமாக இல்லை.

அஜீத் சிவகார்த்திகேயன்

அஜீத் சிவகார்த்திகேயன்

அஜீத் படம் காட்டியபோது அஜீத் என்று சொன்னார்கள், நடிகர் சிவ கார்த்திகேயன் படம் போட்டபோது கூட சிவ கார்த்திகேயன் என்று கோரஸாக சொன்னார்கள். இதுவரைக்கும் ஓகே.. இப்போ ஒரு படம் போடுவேன்.. அதுக்கு மட்டும் புள்ளைங்க பதில் சொல்லலைன்னா பெத்தவங்க மேலதான் குத்தம்னு சொன்னார். நீங்கதான் சொல்லிக் கொடுக்கத் தவறிட்டீங்க எண்றும் சொல்லி படத்தை போட சொன்னார்.

பாரதியார் சுபாஷ் சந்திரபோஸ்

பாரதியார் சுபாஷ் சந்திரபோஸ்

பாரதியார் படத்தை போட்டபோது ஹிப்ஹாப் தமிழா என்று சொன்னார்கள். அடுத்து சுபாஷ் சந்திரபோஸ் படத்தை போட்டு காண்பித்த போது போலீஸ் என்று சொன்னார்கள். பார்க்கையில் ரொம்ப கஷ்டமாக இருந்தது.குழந்தைகளுக்கு இதை சொல்லிக் கொடுக்கத் தவறினால் பின்னால் பெரும் சமூக அவலங்களைத்தான் சந்திக்க நேரிடும் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம். இனியாவது பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முக்கியமானதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பிடியுங்கள் பாராட்டு

பிடியுங்கள் பாராட்டு

சைனாவில் இருந்து வந்த கொரானா வைரஸ் பற்றி குழந்தைகளுக்குத் தெரிந்து இருக்கிறது. இந்த விஷயத்தில் குழந்தைகளுக்கு அவேர்னெஸ் கொடுத்து இருக்கும் பெற்றோரைப் பாராட்டலாம். குழந்தைகள் மனதில் இருப்பதை பேசிவிட வேண்டும்.. இதன் மூலம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று செல்லமாக கோவை சரளாவிடம் அம்மா அப்பா அடிப்பதை கூட சொல்லிவிடுகிறார்கள்.

வம்பிழுக்கும் கோவை சரளா

வம்பிழுக்கும் கோவை சரளா

குழந்தைகளின் பெற்றோரை கோவை சரளா வம்பிழுப்பது.. குழந்தையின் அப்பா அம்மா இருவரில் அப்பா ரொம்பவும் பயந்த சுபாவத்துடன் பேசுவது போல நடிப்பது என்று குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருந்தது. இப்படியே நிகழ்ச்சியை யதார்த்தமாக கொண்டு சென்றால் நன்றாக இருக்கும்.

English summary
The children who attended the show did not appear to be Bharatiyar when they showed the picture. They say that hip hop is Tamizha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X