For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலை உயர்ந்த பெண்கள்.. தினந்தோறும் அருமையான தகவல்கள்.. டிவியைக் கலக்கும் மகளிர்!

Google Oneindia Tamil News

சென்னை: மார்ச் 8 இன்று உலக மகளிர் தினம்.மகளிர்கள் மட்டுமல்ல, மகளிருக்கு ஆண்களும் வாழ்த்து சொல்லி பெண்களை பெருமைப்படுத்தும் நாள்.

ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக சாதனை செய்த பெண்களை நேர்காணல் செய்து உலகத்துக்கு அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்தி வருகிறார்கள்.

சன் டிவி கொஞ்சம் வித்தியாசமாக இதை செய்கிறது.பட்டிமன்ற புகழ பாரதி பாஸ்கரை வைத்து சாதனை செய்த பெண்களின் குறிப்புக்களை பேசவைத்து நிகழ்ச்சிகளுக்கு நடுவில் ஒளிபரப்பு செய்து வருகிறது.

நாயகி கழுத்தில் ஃ .. அதை மட்டும் கண்டுபிடிச்சுட்டா போதும்... கடையை சாத்தி விடலாம்! நாயகி கழுத்தில் ஃ .. அதை மட்டும் கண்டுபிடிச்சுட்டா போதும்... கடையை சாத்தி விடலாம்!

சிவசங்கரி

சிவசங்கரி

எழுத்தாளர் சிவசங்கரி வாழ்க்கையின் மூட நம்பிக்கை கட்டுப்பாடுகளை உடைத்து எறிந்து தனிப்பெண்ணாக ஜொலித்தவர். எழுத்துலகில் தஞ்சம் புகுந்து எண்ணற்ற நாவல்களை எழுதியவர். மற்ற மொழியின் நல்ல சிறுகதைகளை மொழி பெயர்த்தவர்.

இந்திராகாந்தி

இந்திராகாந்தி

இரும்பு பெண்மணி இந்திராகாந்தியை ஆனந்த விகடன் இதழுக்காக நேர்காணல் செய்து, அவருடன் அவரின் ஒரு நாள் எப்படி இருக்கும் என்பதை ஒரு நாள் கூடவே இருந்து அவரின் அன்றாட செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்து சொன்னவர்.

ஒரு மனிதனின் கதை

ஒரு மனிதனின் கதை

பல நாவல்களை அவர் எழுதி இருந்தாலும், 25 ஆண்டுகளுக்கு முன்பே அவர் எழுதிய ஒரு மனிதனின் கதை நாவல் குடிப்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், எப்படியெல்லாம் சீரழியும் என்பதைத் தரூபமாக சொன்ன கதை.சில வருடங்களுக்குப் பிறகு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இது சீரியலாகவும் ஒளிபரப்பாகியது.

நாயகன்

நாயகன்

இதில் உண்மையாகவே குடிக்கு அடிமையான சூப்பர் நடிகர் ரகுவரன் நடித்திருந்தார். அதனால்தானோ என்னவோ மிக நேர்த்தியான நடித்திருந்தார். கேரக்டருக்கு கனக்கச்சிதம். கடைசியில் அவர் கதை முடிந்ததும் குடியால்தான்.

தமிழ் உயரும்

தமிழ் உயரும்

இப்படி எழுத்தாளர் சிவசங்கரியின் பேனா தலை தாழ்ந்த போதெல்லாம், தமிழ் தலைநிமிரும்படியான படைப்புகள் நமக்கு கிடைக்கும் என்று கூறினார் பாரதி பாஸ்கர்

English summary
Sun TV is doing this a little differently. Bharathi Bhaskar has been broadcast in the midst of performances of women who made the achievements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X