
ஆசிட் அடிப்பதாக மிரட்டுகிறார்... முன்னாள் கணவர் மீது இசைவாணி காவல்நிலையத்தில் புகார்
சென்னை: கானா பாடகியாக இருக்கும் இசைவாணி தற்போது தன்னுடைய முன்னாள் கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இசைவாணி காவல்நிலையத்தில் கம்ப்ளைன்ட் கொடுத்தது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பார்லிமென்ட்லயும் அய்யா போட்டா வச்சாங்க... தெறிக்கவிடும் குரலால் அம்பேத்கர் பாடலை வைரலாகும் இசைவாணி

பிக்பாஸ் மூலம் பிரபலம்
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி பலருக்கும் பரிச்சயமான இசைவாணி தற்போது இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் அவருடைய கானா பாடல்கள் பாடுவதில் பிஸியாக இருந்து வருகிறார். ஏற்கனவே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு கானா பாடகியாக பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தாலும், இவருக்கு பெரிய அளவில் மதிப்பு கொடுத்து அவருடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைத்தது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தான்.

திருமணம் முடிந்து விட்டது
கானா பாடலில் ஆண்கள் மட்டுமே அதிகமாக தங்களது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கும் மேடையில் தன்னுடைய திறமையை நிரூபிக்க முடியும் என்று தனி பெண்ணாக பல இடங்களில் இவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பிறகுதான் இவர்தான் இசைவாணி என்று பல ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு போட்டியாளராக அறிமுகமானதும், பலபேர் இவருடைய பயோடேட்டாவை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தனர். அதில் இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது என்று தெரிந்ததும் பலர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இவர் தன்னுடைய திருமணத்தைப் பற்றியும் அது விவாகரத்து ஆனது பற்றியும் எந்த இடத்திலும் பேசவில்லை.

சொல்ல விரும்பாத கதை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் கடந்து வந்த பாதையில் பல சோகக் கதைகளை கூறிக் கொண்டிருக்கும் போதும் கூட இசைவாணி இந்த கதையைச் சொல்வதற்கு கூட. ..நினைத்துப் பார்ப்பதற்கு கூட மனது இல்லாமல் அதை முழுவதுமாக மறந்துவிட்டார். இந்த நிலையில் தற்போது இவருடைய முன்னாள் கணவர் பல தொந்தரவுகள் கொடுத்துக் கொண்டிருப்பதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் இவருடைய முன்னாள் கணவரான சதீஷ்க்கு டைவர்ஸ் பெற்ற பிறகு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இசைவாணிக்கு தெரியாமல் இசைக்கச்சேரியில் இவரைப் பாட வைப்பதாக கூறி பலரிடமும் பணம் வாங்கியுள்ளாராம். அவர்கள் இசை வாணி பாட செல்லாததால் இசைவாணி இடம் தகராறு செய்து வருகிறார்களாம். இது தன்னுடைய நற்பெயரக்கு தொடர்ந்து களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியிருக்கிறார்.

பரபரப்பு புகார்
மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் அவரிடத்தில் இதைப்பற்றிக் கேட்கும் போது, அப்படி தான் செய்வேன்... உன்னால் என்ன செய்ய முடியும் என்று தகாத வார்த்தைகளால் திட்டியும், நீ கச்சேரிக்கு செல்லும் போது உன் மீது ஆசிட் வீசி விடுவேன், என்றும் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இசைவாணி மற்றும் சதீஷ் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விவாகரத்திற்கு பிறகும் தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி வருகிறாராம், இதனால் நான் மிகவும் மன உளைச்சலில் இருந்து வருகிறேன் அதுமட்டுமல்லாமல் டைவர்ஸ் பெற்ற விஷயங்களை பொய் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.