For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்களுக்கு HOME WORK தராதீங்க என சொல்லும் ANGRY பெற்றோர்கள் VS ஆசிரியர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பிள்ளைகளுக்கு ஹோம் வொர்க் என்று பெற்றோர்கள் படும் சிரமத்தை பற்றி இங்கு அலசுகிறார்கள்.

ஒரு புறம் பெற்றோர் இன்னொரு புறம் பள்ளி ஆசிரியர்கள் என்று நிகழ்ச்சி களைக் கட்டுகிறது.

வாரா வாரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் மிக நன்றாக நடத்தி வருகிறார். இந்த வரம் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டத்தை விஜய் டிவி அதன் டிவிட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டு உள்ளது.

மூன்று பொருட்கள்

மூன்று பொருட்கள்

பிள்ளைகளின் ஹோம் வொர்க் எது உங்களுக்கு சவாலாக அமைந்தது என்று கோபிநாத் கேட்டார். ஒரு குழந்தையின் அம்மா சொன்னார், மூன்று பொருளை தவிர்த்து மவுன்டெயின் செய்ய சொல்லி இருந்தாங்க சார். அதுக்கு மூன்று கண்டிஷன் போட்டாங்க. அதாவது என்று விளக்கினார்.

Kanmani serial: குழந்தை பொறக்காதுன்னு உடனே சொல்லியாகணுமா சின்னவரே...?Kanmani serial: குழந்தை பொறக்காதுன்னு உடனே சொல்லியாகணுமா சின்னவரே...?

மூன்று பொருட்கள் என்னென்ன?

மூன்று பொருட்கள் என்னென்ன?

மவுன்டெயின் செய்ய சொல்லிவிட்டு டீச்சர் போட்ட அந்த மூன்று கண்டிஷன்.. பிளாஸ்டிக், யூஸ் பண்ண கூடாது, தெர்மாகோல், கட்டை யூஸ் பண்ண கூடாதுன்னு கண்டிஷன் போட்டதாக சொன்னார். இன்னொரு அம்மா சொல்கையில், யுகேஜி குழந்தைக்கு வெஜிடபிள் கார்விங் புராஜெக்ட் சார். இந்த குழந்தையை நான் எப்படி இந்த புராஜெக்ட் உள்ள இன்வால்வ் பண்ண முடியும்னு அந்த அம்மா கேட்டார்.

குழந்தைக்கா பேரண்ட்டுக்கா

குழந்தைக்கா பேரண்ட்டுக்கா

ஃபன் எக்ஸ்பீரியன்ஸ் இல்லை குழந்தைக்கா பேரண்ட்டுக்கா என்று இன்னொரு குழந்தையின் அம்மா கேட்டார். ரொம்ப டிராஜெடி எக்ஸ்பீரியன்ஸா இருக்கு என்கிறார். அவங்க மைண்ட் டைவர்ட் பண்ணனும் என்பதற்காகத்தான் இந்த ஃபன் எக்ஸ்பீரியன்ஸ், எக்ஸ்டரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் என்றார் பதிலுக்கு டீச்சர் ஒருவர்.

பளு கொடுக்கும்

பளு கொடுக்கும்

எங்களுக்கு பளு கொடுக்கும் இந்த ஃபன் எக்ஸ்பீரியன்ஸ் தேவையே இல்லை என்று சொல்கிறார் ஒரு அம்மா. உண்மையில் பள்ளிகளில் கால் பரீட்சை, அரை பரீட்சை விடுமுறை விட்டு இப்படி எக்ட்ரா கரிகுலர் என்று புராஜெக்ட் வொர்க் கொடுத்துவிட்டால் , அதை செய்து கொடுக்க ஃபேன்சி ஷாப்கள் தயாராக இருக்கின்றன.

அதற்கு நாம் காசு மட்டும் கொடுத்து விட்டால் போதும்,. இந்த விஷயம் பள்ளிகளுக்கு தெரியுமா தெரியாதா?

English summary
Parents are worried about the difficulty children will have on their homework on Vijay TV's neeya naana Parents on the one hand are school teachers on the other.Event coordinator Gopinath is doing very well this weekly event. Vijay TV has posted a preview of the event, which will be broadcast on this Twitter web site.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X