புகழ் பற்றிய உண்மையை உடைத்த ஐக்கி..இப்படி எல்லாம் சொல்லி இருக்கிறாரே...குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: ஐக்கி பெர்ரி தற்போது புகழை பற்றிய தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
புகழ் மற்றும் ஐக்கி பெர்ரி இருக்கும் புகைப்படத்தை ஐக்கி பதிவிட்டதைப் பார்த்ததும் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

விஜய் டிவி பிரபலங்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் போது சில நிகழ்ச்சிகள் ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்று விடும். அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்த ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் ஐந்தில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட ஐக்கி தற்போது சமூக வலைத்தளத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான புகழைப்பற்றி தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இவர்கள் இருவரும் விஜய் டிவி பிரபலங்களாக இருந்தாலும் தற்போது இவர்களின் போட்டோக்கள் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
ஐக்கி பெர்ரி ஒரு தமிழ் பெண்ணாக இருந்தாலும், பார்ப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டு பெண் என்று நினைத்து விடும் அளவிற்கு தான் தன்னுடைய மொத்த அழகையும் மாற்றி வைத்திருக்கிறார். முதன்முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாவதற்கு முன்பு பலருக்கும் பரிச்சயம் ஆகாமல் இருந்தாலும் தற்போது பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். இவர் ஒரு ராப் பாடகர் ஆக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய கேரக்டர் ரசிகர்கள் பலருக்கும் பிடித்துவிட்டது. இவருடைய வெளியேற்றத்தால் ரசிகர்கள் பலர் பீல் பண்ணி வந்தனர்.

வைரலாகும் புகைப்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து பல நேரங்களில் குறிப்பாக நன்றி கூறி வந்தாலும், தற்போது இவர் தன்னுடைய பாடல் துறையில் ஜொலிக்க தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் இவர் எழுதி பாடிய ஏலே பாடல் அதிகமாக வைரலானது. இந்த நிலையில் தற்போது விஜய் டிவி பிரபலமான புகழை இவர் சந்தித்து அவரோடு புகைப்படம் எடுத்திருக்கிறார். ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐக்கி தான் சந்திக்கும் பிரபலங்களின் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவது வழக்கம்தான். அந்த மாதிரிதான் தற்போது கூட செய்திருக்கிறார். ஆனால் இது ரசிகர்கள் அதிகமாக பாராட்டப்பட்டு வருகிறது.

காரணம் இதுதானாம்
ஆரம்பகாலத்தில் எத்தனையோ பேர் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து போராட்டங்களோடு போராடிக்கொண்டு இருந்தாலும் தற்போது வெற்றி அடைந்ததும் பலரும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க தொடங்கிவிடுகிறார்கள். அந்த வகையில் தான் தன்னுடைய மனதை கவர்ந்த ஒரு மனிதர் என்று, டவுன் டூ எர்த் ஆளுமை என புகழை ஐக்கி பெர்ரி குறிப்பிட்டிருக்கிறார். பல் மருத்துவரான தன்னுடைய ஆசை மற்றம் கனவு நிரூபிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய திறமைகளை நிரூபித்து கொண்டிருந்தாலும் அவரைப்போல கடின உழைப்போடு இருக்கும் நபர்களை பார்க்கும் போது ஐக்கிக்கு மோட்டிவேஷன் ஆக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் இவர்கள் இருவரும் புதியதாக ஏதேனும் நிகழ்ச்சியில் அறிமுகமாக இருக்கின்றார்களா?? அல்லது படங்களில் ஒன்றாக நடிக்கிறார்களா??என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.