For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெஞ்சைப் பிளந்து ராமரை காட்டி பக்தி எனில் இதுதான் என உணர்த்திய அனுமன் !

Google Oneindia Tamil News

சென்னை: சுமேரு நாட்டின் அரசன், அரசிதான் அனுமனின் தந்தை, தாய். தாய் அஞ்சனை. அனுமன் மீது அதீத பிரியம் கொண்டவள். சுட்டி சிறுவனான அனுமனுக்கு வாலி மிகப் பெரும் எதிரியாக இருந்தாலும், அனுமன் வாலியை அண்ணா அண்ணா என்று அழைத்து பாசத்துடன் பழக்க கூடியவன்..

தன்னைவிட பலசாலியாக வளரும் அனுமனை தீர்த்துக்கட்ட எவ்வளவோ முயன்றும் இதுவரை முடியவில்லை.இந்த சமயத்தில்தான் துர்வாச முனிவர் தமது சகாக்களோடு சுமேரு நாட்டுக்கு வருகிறார்.

அனுமனின் தந்தையை சந்தித்து, சொர்க்கத்தில் இருக்கும் கற்பகத்தரு மரத்தை கொண்டு வந்து பூலோகத்தின் நட்டு வைத்து, மரத்தடியில் அமர்ந்து தாம் தவம் செய்ய விரும்புவதாகவும், தனக்கு சரியான வீரன் துணை வேண்டும் என்றும் கூறுகிறார்.

புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோன்னா அது எதுக்குங்க.. நடிகை நீலிமா பொளேர் கேள்வி புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோன்னா அது எதுக்குங்க.. நடிகை நீலிமா பொளேர் கேள்வி

சிறந்த வீரன்

சிறந்த வீரன்

அரசர் விழித்து நிற்க, அனுமனே சிறந்த வீரன், அனுமனை எனக்கு பணிவிடை செய்ய தேர்ந்தெடுத்து இருக்கிறேன். சுமேருவில் சிறிது நாட்கள் நானும் என் சிஷ்யர்களும் தங்கி ஓய்வெடுக்க விரும்புகிறோம். அதுவரை எங்களுக்கு அனுமன் பணிவிடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

மகிழ்வுடன் சம்மதம்

மகிழ்வுடன் சம்மதம்

தந்தையும், தாயும் விக்கித்து நிற்க, ஆகட்டும் சுவாமி, தங்களுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளை செய்யத் தயாராக இருக்கிறேன் என்று துடிப்புடன் .கூறுகிறான் சிறுவனான அனுமன்.

வணங்கி வருகிறோம்

வணங்கி வருகிறோம்

இதுவரை கூட அனுமனின் தாய் தந்தை தங்களது பிள்ளையால் இத்தனை பெரிய பணிவிடைகளை துர்வாச முனிவரின் மனம் கோணாமல் செய்ய முடியுமா, ஏதாவது தவறு நேர்ந்தால் முனிவர் சாபம் விட்டுவிடுவாரே என்று பயந்து மவுனம் காக்கிறார்கள். முனிவரோ, சிறுவனின் வார்த்தைகளை நம்பி, சரி நாங்கள் அனைவரும் நீராடி, சூரியனை வணங்கி வருகிறோம். அதற்குள் உணவுகள் தயார் செய்து வை அனுமன் என்று கூறிவிட்டு, துர்வாச முனிவர் சிஷ்யர்களுடன் நீராட சென்றுவிடுகிறார்.

அனுமன்

அனுமன்

இங்கு அனுமன் தனியாளாக பதார்த்தங்களை தேவையான அரிசி, தானிய மாவுகளை கையால் அரைக்கும் திருவையில் அரைத்து எடுத்து, வித விதமான உணவுகளையும் தயார் செய்து விடுகிறான். கல்பகத் தரு மரத்தை அனுமனிடம் துர்வாச முனிவர் தரக்கூடாது என்று துர்வாச முனிவரின் மனதில் இருந்த திட்டத்தை அறிந்துகொண்ட வாலி, சூழ்சசி செய்யும் விதமாக தன பணியாளை ஏவிவிட்டு உணவில் மண்னைத் தூவ செய்கிறான்.

கோபம்

கோபம்

நீராடி விட்டு வந்த முனிவருக்கு மட்டும் இருக்கை அமைத்த அனுமன், சிஷ்யர்களுக்கு இருக்கைகள் அமைக்க மறந்துவிடுகிறான்.என்ன அனுமன், உனக்கு மரியாதை தெரியாதா, மற்றவர்களும் முனிவர்கள்தானே, எனக்கு மட்டும் இருக்கை அமைத்து இருக்கிறாய். இது அவமரியாதை என்று உனக்குத் தெரியாதா என்று முனிவர் கோபம் கொள்கிறார். மன்னிக்க வேண்டும் சுவாமி, இதோ ஒரு நிமிடத்தில் அனைவருக்கும் இருக்கை அமைத்து விடுகிறேன் என்று பம்பரமாக சுழன்று அத்தனை பேருக்கும் இருக்கை அமைத்து அமர வைத்து உபசரித்து, சற்று நேரத்தில் உணவு எடுத்து வருவதாக சொல்கிறான்.

அம்மா

அம்மா

அனைத்து உணவுகளும் வீணாகிவிட்டனவே, என்ன செய்வது என்று அனுமனின் தாய், மற்றும் அனைவர்களும் விக்கித்து நிற்க, தாயே துர்வாச முனிவர் பசியோடு காத்திருக்கிறார். அரசர், உடனடியாக உணவை எடுத்து வர சொல்லி இருக்கிறார். என்ன செய்யப் போகிறீர்கள் என்று பணியாள் கேட்க, தாயும் கண்ணீர் விடுவதைக் கண்ட அனுமன், அம்மா எதற்காக கலங்குகிறீர்கள், நீங்கள்தானே சொல்லிக் கொடுத்தீர்கள், இக்கட்டான நேரத்தில் பொறுமையைக் கடைபிடித்து, என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும் என்று.எனக் கூறுகிறான். அம்மா நீங்கள் சொன்னது போல பக்தியுடன் பிரபுவை நினைத்தால், பிரபுவும், பார்வதி தாயும் என்னைக் கைவிட மாட்டார்கள் அம்மா என்று கூறி, சிவன்-பார்வதியை வணங்குகிறான்.

அன்னமிடுவது புண்ணியம்

அன்னமிடுவது புண்ணியம்

திக்கு தெரியாமல் இருக்கும் அனுமனுக்கு கட்டாயம் உதவ வேண்டும் தேவி, அதுவும் பசியென வந்திருப்பவர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் புண்ணியம். அன்னபூரணியாக சென்று நீதான் உதவ வேண்டும் என்று சிவன் பார்வதியை அனுப்பி வைக்கிறார். முனிவர்களுக்கு உணவு படைப்பதாக அறிந்தேன், நானும் உதவி செய்துவிட்டுப் போகலாமே என்று வந்தேன் என்று எளிய பெண் உருவம் எடுத்து வந்திருக்கும் பார்வதி தேவியை அனுமன் மட்டுமே அடையாளம் காண, சிவனுக்கு வைத்திருக்கும் உணவு மட்டும் கெடாமல் இருக்கிறது.

பரிமாறலாம்

பரிமாறலாம்

இதை பிரபுவுக்கு படைத்து பின் பரிமாறுங்கள் என்று பார்வதி கூற, இது போதுமா என்று அஞ்சனை கலங்குகிறாள்.பரமன் சாப்பிட்டாலே அனைவருக்கும் தேவையான உணவு கிடைத்துவிடும் என்று கூற, அது போலவே அனுமன் பரிமாற பரிமாற தட்டில் இருக்கும் உணவு சற்றும் குறையவில்லை. உணவு உண்ட முனிவர் அனுமனிடம் தண்ணீர் கேட்டுவிட்டு, இரவு படுக்கைக்கு சென்று விடுகிறார். தண்ணீரோடு அறைக்குள் அனுமன் வந்தபோது முனிவர் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருக்க, எழுப்பினால் முனிவரின் தூக்கம் கலைந்துவிடும் என்று தண்ணீரோடு காத்து நிற்கிறான் அனுமன்.

பார்த்த முனிவர்.

பார்த்த முனிவர்.

ஒரு வழியாக விடியலின் போது எழுந்த முனிவர் என்ன அனுமன் உன்னை நான் அழைக்கவே இல்லையே, பின் எதற்காக என் அறையில் அதிகாலையில் காத்து இருக்கிறாய் என்று கேட்கிறார்.இல்லை சுவாமி, தாங்கள் நேற்று படுக்கைக்கு செல்லும் முன் குடிக்க தண்ணீர் கேட்டீர்கள். ஆனால், கொண்டு வருவதற்குள் உறங்கி விட்டீர்கள். எப்போது விழிக்கிறீர்களோ அப்போது தங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்றால் என்ன செய்வது என்று, இரவிலிருந்து இப்படியே நிற்கிறேன் என்று அனுமன் கூற, ஆஹா என்னே உன் பக்தி என்று வியக்கிறார் முனிவர்.

உண்மையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஜெய் அனுமான் சீரியலைப் பார்க்கும்போது நமக்கும் மெய் சிலிர்க்கத்தான் செய்கிறது.பக்திக்கும், பொறுமைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியது அனுமனின் பக்தி குறித்த இந்த எபிசோட்.

English summary
Actually, on Sun TV, Jai Hamman is doing the serial, and we are doing a real devotion..This episode about Lord Hanuman's devotion was the example of patience and patience.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X