• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

கிழிந்த பேன்ட்டோடு.. சுவரில் ஏறிய ஜனனி.. இப்படியா பண்ணுவது.. கொந்தளித்த ரசிகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : என்னமா இப்படி பண்றீங்களேம்மானு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த ஜனனியின் வீடியோ தான் இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருது.

ரிஸ்க் எடுக்கிறேன் என்கிற பெயரில் மரண பீதி அடைந்த ஜனனியை ஓட்டும் நெட்டிசன்கள் அலும்பு வேற லெவல் தான்.

ஏற்கனவே கிழிஞ்சு இருக்கும் பேண்ட்டை போட்டுக்கிட்டு எதுக்கு சுவரில் ஏறி பயமுறுத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் ஓட்டுகிறார்கள்.

ஆசைக்காக இப்படியா

அதாவது மாடியில் உள்ள சுவரில் ஏறி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் ஜனனி. அதுவும் பயந்தபடி. இந்த மாதிரி இடத்துல போட்டோ எடுக்குறதே தப்பு. இதுல ஹீல்ஸ் வேறயா....??? என்றும் ரசிகர்கள் கலாய்க்கின்றனர். நண்பேன்டா, ஏமாளி உட்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியின் மாப்பிள்ளை, மௌனராகம், மற்றும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான செம்பருத்தி போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானவர் ஜனனி அசோக்குமார்.

அடுத்த புராஜெக்ட்க்கு ரெடி

அடுத்த புராஜெக்ட்க்கு ரெடி

இப்போ விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் நடித்து வருகிறார். நல்லா நீளமா இருக்குற முடியை ஷார்ட் பண்றதும் கர்லிங் பன்றது தான் இப்ப ட்ரெண்டிங் என்பதனாலோ என்னவோ இப்போது தனது முடியையும் குட்டையாக வெட்டியுள்ளாராம். உண்மையில் காலேஜ் படித்தபோது இந்த ஆசை இருந்ததாம். அப்ப முடியலை.. இப்ப பண்ணிருக்காங்களாம்.

ரோல்மாடல் நீங்கதானே

ரோல்மாடல் நீங்கதானே

ஜனனி இப்ப போட்டு இருக்க வீடியோ லைக்கை விட விமர்சனங்களையே அதிகமாக பெற்று வருகிறது. பொதுவாக செலிபிரிட்டி என்றாலே அதிகமான பாலோயர்ஸ்களை பெற்றிருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது தங்களுக்கு பிடித்த செலிபிரிட்டிகள் போன்று உடையணிவது ஸ்டைல் பண்ணுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது இப்பொழுதும் நடந்துவரும் ஒன்றுதான் .

அங்க போய் ஏறலாமா

அங்க போய் ஏறலாமா

எனவே செலிபிரிட்டிகள் ஒவ்வொரு போஸ்ட் போடும்பொழுது இதை மனதில் வைத்து வீடியோக்களையும் போட்டோக்களின் போட்டால் அது எந்தவிதமான எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தாமல் இருக்கும். ஆனால் தற்பொழுது ஜனனி ஹை ஹீல்ஸ் செருப்பு போட்டுக் கொண்டு கொண்டு மொட்டை மாடி சுவற்றில் ஏறி போட்டோ எடுப்பது போல் அப்லோடு செய்துள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி இப்படி வேண்டாமே

இனி இப்படி வேண்டாமே

அவரது பாலோயர்ஸ்களையும் அவ்வாறு செய்ய தூண்டுவதற்கான முன்னுதாரணமாக இருந்து விடுமோ என்று நிறைய ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த வீடியோவை பார்க்கும் அவரது ரசிகர்கள் வீடியோவில் அவரது அழகை மட்டும் பார்க்காமல் வீடியோ எடுப்பதில் இருக்கும் ஆபத்தையும் உணர்ந்தால் நலமாயிருக்கும்.

மரண பீதி அள்ளுதே

மரண பீதி அள்ளுதே

இந்த மாதிரியான ஆபத்தான முறையில் போட்டோ ஷூட் எடுப்பது செலிபிரிட்டிகளுக்கு மட்டுமின்றி அவரது பாலோயர்களுக்கும் ஆபத்து தான் என்பதை தெரிந்துகொண்டு இந்த மாதிரியான ஆபத்தான போட்டோஸ் எடுப்பதை தவிர்ப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம். தவிர்க்க வேண்டும் என்று நலம்விரும்பிகள் கூறிவருகின்றனர் . ஆனாலும் சில ரசிகர்கள் என்ன தான் பலரும் கேமரா முன்னாடி அழகாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் இவர் மட்டும் மரண பீதியை அப்படியே காட்டுகிறாரே என்று சப்போர்ட் செய்கின்றனர்.

English summary
TV Actress Janani Ashokkumar's latest photoshoo has created some controversy as the actress has posed in the upstairs side wall with more risk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X