For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சானிடைசர் இல்லாமல் ஜெயா டிவி செய்திகள் இல்லை...!

Google Oneindia Tamil News

சென்னை: கோவிட் 19 தொற்று பயத்தில் மக்கள் இருந்தாலும், இந்தியா முழுக்க லாக்டவுன் என்றாலும், ஊடகவியலாளர்கள் தங்களது பணியை செவ்வனே செய்துக்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்களை பாதுகாப்பாக தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி சேகரிக்க அனுப்பினாலும், அவர்களில் பலருக்கும் தொற்று இருக்கத்தான் இருக்கிறது.

ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்கள், செய்திகளை வாசிப்பதற்கு முன்னர், கைகளை சானிடைசர் போட்டு சுத்தப்படுத்திக்கொண்டு, செய்திகளை வாசிக்கத் துவங்குகிறார்கள்.

 சன் டிவி ஜெயா டிவி

சன் டிவி ஜெயா டிவி

ஜெயா டிவி ஆரம்ப காலத்தில் சன் டிவிக்கு போட்டியாக இருந்தது. புது படங்களை வாங்கி ஒளிபரப்புவதும், சன் டிவிக்கு போட்டியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் என்று இருந்தது. இதற்குப் போட்டியாகத்தான் சன் குழுமம் கே டிவியைத் துவங்கியது.இப்போது போட்டியில் ஜெயா டிவி இல்லவே இல்லை.

 கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் , தொலைக்காட்சி ஊடகங்கள் தங்களது செய்தியாளர்களுக்கு தொற்று அண்டாத கவச உடைகள், கை உறைகள் என்று கொடுத்து களத்துக்கு அனுப்பி வைக்கிறன.அந்த வகையில் ஜெயா டிவியும் செய்தி வாசிப்பாளருக்கு பாதுகாப்பை வழங்கி வருகிறது.

 சானிடைசர் இல்லாமல்

சானிடைசர் இல்லாமல்

ஜெயா தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் காமிரா முன்னால் உட்கார்ந்து ஒரு சில நொடிகள் சானிடைசரால் கைகளைத் தூய்மையாக்கிய பின்னரே செய்திகள் வாசிக்கத் துவங்குகிறார்கள். இது மக்களுக்கு நல்ல விழிப்புணர்வாக இருக்கிறது.

 ஜெயா செய்தி ஸ்பெஷல்

ஜெயா செய்தி ஸ்பெஷல்

ஜெயா டிவியின் செய்திகளில் இன்று என்று ஒரு செக்மென்ட் உண்டு. அது இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இன்றைய நாளில் 16ம் நூற்றாண்டில் என்ன நடந்தது.. அதற்கடுத்தான ஆண்டின் அதே நாளில் வேறு என்ன நடந்தது. இப்படி வரிசையாக சொல்வார்கள். அதை விடாமல் இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது ஜெயா தொலைக்காட்சி செய்தி.

English summary
news readers on Jaya TV clean their hands with a sanitizer before reading the news and start reading the news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X