• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யூடியூப்... வெப் சீரிஸ் இதெல்லாம் இயக்க ஆசை இருக்கு... கே.பாக்யராஜ்

|

சென்னை: ஜெயா டிவியின் உள்ளே வெளியே நிகழ்ச்சியில் இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டார். ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. நிகழ்ச்சியை மாலா மணியன் நேரலையில் தொகுத்து வழங்குகிறார்.

அப்போது பேசிய பாக்யராஜ், இப்போதான காலக்கட்டங்களுக்குத் தகுந்த மாதிரி யூடியூப் சானல் துவங்க, வெப் சீரீஸ் இயக்க ஆசை என்று கூறினார். அப்டேட்டில் எப்போதும் கலைஞன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

யாருக்கு எப்போது எது நடக்கும் என்பது யாராலும் கணித்து சொல்ல முடியாது.. இப்படியும் நடக்கலாம் என்பதை உணர்த்துவதாக நமது பாரம்பரிய பழமொழிகள் இருக்கிறது. இதை பின்பற்றித்தான் நான் பாக்யா இதழில் கேள்விகளுக்கு கதையாக சொல்லி பதில் அளித்து வந்தேன் என்று கூறினார்.

கதை எப்படி

கதை எப்படி

கேள்விகளுக்கு எப்படி சார் குட்டிக் குட்டி கதைகள் மூலம் பதில் சொன்னீங்க என்றும், இப்போது அது எல்லாரும் கடைப்பிடிக்கும் ட்ரெண்டாகவும் மாறிவிட்டது என்று கேட்டார்.சின்ன பிள்ளையிலேர்ந்து வீட்டில், வெளி இடங்களில் பெரியவங்க எதாவது பழமொழி சொல்லிகிட்டே இருப்பாங்க. இதெல்லாம் சின்ன பிள்ளைங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி எனக்கும் பிடிச்சு, அது என் மனதில் பதிஞ்சு போச்சு. இப்படி பழமொழிகளை கதையாக சொல்லி பாக்கியாவில் பதில் அளித்து வந்தேன் என்று சொன்னார்.

Roja Serial: ஞாயிறு ஒளி மழையில்...ரோஜா! கண்டு களிக்க வந்தாள்!

பாம்பு கடிச்சு கல்லு குத்தி

பாம்பு கடிச்சு கல்லு குத்தி

பாம்பு கடிச்சு பிழைச்சவனும் இருக்கான்.. கல்லு குத்தி செத்தவனும் இருக்கான்னு நண்பர் ஒருவர் ஒரு பழமொழி சொன்னார் படம் எடுத்துக் கொண்டு இருந்தபோது..அப்புறம் ஒரு புரடியூசர் பணப் பற்றாக்குறையால் இருந்தார். இவர்கிட்டே கேட்டப் பாருங்க சார்னு நான் ஒரு ஐடியா குடுத்தேன். அதுக்கு ஏம்பா மூத்திரத்தில் மீன் பிடிக்கணும்னு நினைச்சா முடியுமான்னு பழமொழி சொல்லி உண்மையை உணர்த்தினார். இப்படித்தான் சுவாரஸ்யமா இருக்கணும்னு நினைச்சு கதை சொல்லி பதில் கொடுத்து வந்தேன்னு சொன்னார்.

குருநாதர் கண்களுக்கு

குருநாதர் கண்களுக்கு

எனக்கு நடிக்கணும்னு படிக்கும்போது ஆசை இருந்தது. டிராமாவில் நடிச்சப்போ ஆசிரியர்கிட்டே இப்படி இருந்தா நல்லாருக்கும் அப்படி இருந்தா நல்லாருக்கும்னு நான் சொன்னதை ஆசிரியர் ஏத்துக்கிட்டார். அப்போலேர்ந்து கிரியேட்டராகவும் ஆக முடியும்னு தெரிஞ்சுகிட்டேன். புதிய வார்ப்புக்கள் படம் பண்ணும்போது கடைசி வரைக்கும் ஹீரோ கிடைக்கலை. டைரக்டர்தான் நீதான்பா இந்தப் படத்துக்கு ஹீரோன்னு சொன்னார்.சார் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு, இப்போ தயாரிப்பாளர் ஆகி இருக்கீங்க.. பார்த்து செய்ங்க சார்னு நான் சொன்னேன்.

நடிப்பு சொல்லி

நடிப்பு சொல்லி

நான் படப்பிடிப்பில் நடிப்பு சொல்லிக் கொடுக்கும்போதே அவர் என்னை கவனிச்சு இருக்கார். அப்போதே நான் நடிகனாகவும் ஆக முடியும்னு அவருக்கு தோனி இருக்கு. அதனால், புதிய வார்ப்புகள் படத்தில் என்னை ஹீரோவாக்கினார். ஆனால், அந்த சமயத்தில் நான் அவர்கிட்டே இருந்து வெளியில் வந்துட்டேன். கதை சரியா வரலேன்னு என்னை கூப்பிட்டார். அதுக்கு போன போதுதான் நீயே இருந்து எழுதிக் குடுத்துடுன்னு சொன்னார். பிறகு கதாநாயகனாகவும் நடிக்க வச்சுட்டார் என்று கூறினார்.

எப்போதும் பாஸிட்டிவா

எப்போதும் பாஸிட்டிவா

சினிமா உலகத்துல இருப்பவங்களுக்கு எப்போதும் நான் ஒண்ணே ஒண்ணுதான் சொல்லுவேன். எப்போதும் பாசிட்டிவ்வா இருங்கன்னு. ரோஜா செடியில் முள்ளு இருக்கேன்னு நினைக்காம முள்ளு செடியில் ரோஜா இருக்கேன்னு நினைச்சு பாஸிட்டிவா இருக்கணும். நாம் சம்பாதிச்ச பணம் எல்லாத்தையும் கூட இழக்க நேரிடலாம். எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும் விடாம இருக்கணும் என்று கூறினார். அப்போதுதான் தனக்கு யூடியூப் சானல் ஆரம்பிக்கணும், வெப்ஸீரில் எடுக்கணும் என்கிற எண்ணம் இருக்கிறது என்று கூறினார் கே.பாக்யராஜ்.

 
 
 
English summary
Director K Bhagyaraj attended the ulle veliye of Jaya TV. It will air live on Sunday at 10am. The event is hosted by Mala Manian live.Speaking at the time, Bhagyaraj said that the ideal model for the current era of YouTube channel is the desire to start the web series. He also said that there should always be an artist in the update.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X