For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Kaatrin mozhi serial: வாய் பேச முடியாத பெண்ணை... கதைக்கு கூட சாத்தியமில்லையே!

Google Oneindia Tamil News

சென்னை: சில குறைகளை பெரிது படுத்தி சீரியல்களில் காண்பிப்பதை கதையின் முக்கிய பகுதியாகவே செய்து வருகிறது விஜய் டிவி.

காற்றின் மொழி சீரியலில் வாய் பேச முடியாத பெண்ணை... வீட்டில் பாட்டியும், அப்பாவும் வேலைக்காரி மாதிரி நடத்தறாங்க.

என்ன இருந்தாலும் பொம்பளை பிள்ளையாச்சே. அதை பாதுகாப்பா பார்த்துக்கணும்னு இவங்களுக்கு புத்தியில் உரைக்காமல் போனது ஏன்?

சிதம்பரம் வீட்டுக்கு பால்

சிதம்பரம் வீட்டுக்கு பால்

வழக்கமா வட்டிக்காரர் சிதம்பரம் வீட்டுக்கு பால் கொண்டு போகும் கண்மணி அன்று எடுத்து போக மாட்டேன்னு அடம் பிடிக்கறா. பாட்டி திட்ட, அம்மா சமாதானப் படுத்தி பால் கேனை மகளிடம் கொடுத்து அனுப்பறாங்க. அவளும் எடுத்துட்டு போக, சிதம்பரம் மீனுக்கு தூண்டிலுடன் காத்திருப்பவன் போல காத்திருக்கான்.

கோயிலுக்கு பொண்டாட்டியை

கோயிலுக்கு பொண்டாட்டியை

சிதம்பரம் பொண்டாட்டியை கோயிலுக்கு அனுப்பிட்டு, கண்மணிக்காக காத்திருக்க பால் கேனை வெளியில் நின்றே கொடுக்கிறாள் கண்மணி.அவன் இவளை உள்ளே போய் நீ பாலை ஊத்தி வைக்கலே.. உன் பாட்டிகிட்டே சொல்லிடுவேன்னு மிரட்டறான். இவள் உள்ளே போகிறாள், பின்னோடு வரும் அவன் கதவை சாத்திட்டு வர்றான்.

மருந்து ஜூஸில்

மருந்து ஜூஸில்

ஜூசில் மருந்து கலந்து கொடுத்து, அதை அவளைத் தொட்டு குடிக்க சொல்ல, அதை வாங்கி ஊத்திவிட்டு தப்பிச்சு ஓடப் பார்க்கிறாள் கண்மணி. அவன் பிடித்து இழுக்க ஜாக்கெட் கை கிழிஞ்சு போகுது. கீழே தள்ளிவிட்டு விடுகிறான். நெருங்கும் அவனை கடித்துவிட்டு ஓடி வந்துடறா கண்மணி.

பார்க்க முடியலை

பார்க்க முடியலை

இப்படி ஒரு காட்சியை கதை என்றால் கூட பார்க்க முடியலை. மனசு படக் படக்குன்னு அடிச்சுக்குது. வாய் பேச முடியாத அந்த பேதை பெண் என்ன செய்வாள், யாரிடம் வாய்விட்டு இந்த மாதிரி கஷ்டங்களை சொல்வாள்? காட்சிக்கு என்றால் கூட இது மாதிரி வைக்காதீர்கள்.பலருக்கு பிபி எகிறுது.

English summary
Vijay TV is making a major part of the story with some grievances being magnified.A girl who can't speak her mouth in the language of the air ...
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X