For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசரடிக்கும் கவிதாலயா யூடியூப் சானல்.. பழசெல்லாம் பார்த்து மெய் மறக்க ஓடியாங்க!

Google Oneindia Tamil News

சென்னை: இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களின் கவிதாலயா நிறுவனம் யூடியூப் சானல் ஆரம்பிச்சு, கேபியின் படைப்புக்களை அப்டேட் செய்து வருகிறார்கள். நிறுவனத்தை கே.பி.சாரின் மகள் புஷ்பா கந்தசாமி கவனித்துக்கொள்கிறார்.

கவிதாலயா என்று திரையில் வரும்போதே திருவள்ளுவர் சிலை மெதுவாக திரும்பும். அகர முதல எழுத்தெல்லாம் என்கிற திருக்குறள் ஒலிக்கும்.. பின்னர் கவிதாலயா புரடக்ஷன்ஸ் என்று போடுவார்கள்.

கே.பி சாரின் மறைவுக்குப் பிறகு கவிதாலயாவின் அந்த போஸ்டை மாற்றி இன்றைய யூத் ரசிக்கும்படி மாற்றி அமைத்து இருக்கிறார்கள். முதன் முதல் யூடியூப் சானல் ஆக்டிவேட் ஆகும்போது...கவிதாலயா அமேசான் இணைய தளத்துடன் இணைந்தார்கள்.

கவிதாலயா அமேசான்

கவிதாலயா அமேசான்

கவிதாலயா அமேசான் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை வைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் மரபு சார்ந்த இசையை அலசும் ஒரு ஆல்பம் தயாரித்து வெளியிட்டார்கள். இதை கடந்த வருடம் கே.பி.சாரின் நினைவு நாளில் வெளியிட்டு முதன் முதலாக இணைய தளத்தில் தடம் பதிப்பதை அறிவித்தார்கள்.

கேபி செல்போனிலும்

கேபி செல்போனிலும்

கேபி சார்... பெரியத் திரை சின்னத் திரைக்கு மட்டும் அல்ல, கையடக்க ஸ்க்ரீன் இருந்தாலும் அதற்கும் என்னால் படம் எடுக்க முடியும் என்று ஒரு முறை சொல்லி இருந்தார். கே.பி அவர்களின் வார்த்தைக்கு ஏற்ப இப்போது செல்போனிலும் கே.பி சாரின் படைப்புக்களை கண்டு மகிழ கவிதாலயா யூடியூப் சானல் மூலம் இணைய தளத்தில் தடம் பதிக்கிறது என்று கூறினார் புஷ்பா கந்தசாமி.

ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்

ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்

ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஆல்பத்தின் மூலம் கவிதாலயா யூடியூபில் கால் பதித்தது. இப்போதும் ஆக்டிவேஷனில் இருக்கும் கவிதாலயா யூடியூபில் கேபி அவர்களின் சின்னத்திரை படைப்புக்கள் அத்தனையையும் இந்த மார்ச் மாதம் வரை அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது கவிதாலயா யூடியூப் சானல்.

மர்ம தேசம் மரபு கவிதைகள்

மர்ம தேசம் மரபு கவிதைகள்

மர்மம் ஒரு வித பயத்தை கொடுக்கும் என்று 90ஸ் கிட்ஸை பயத்துடன் பார்க்க வைத்த மர்ம தேசம் சீரியலை மீண்டும் கவிதாலயா யூடியூபில் பார்க்கலாம். சன் டிவியில் முதன் முதலில் தினம் தினம் என்று ஆரம்பித்த சீரியல் மர்மதேசம்தான். இப்படி கே.பி சார் சின்னத் திரைக்கு என்று பாகுபாடு பார்க்காமல் கொடுத்த ஹிட் சீரியல்கள் அனைத்தையும் இந்த சானல் அவ்வப்போது அப்லோட் செய்து வருகிறது .

டிராமா டைப்

டிராமா டைப்

மீண்டும் டிராமா டைப் சீரியல்கள் எடுப்பது இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி இருக்கிறது. அவர்கள் கற்றுக்கொள்ள என்று கேபி அவர்களின் டிராமா பாணி சீரியல்கள் நிறைய கொட்டிக் கிடக்கும் கவிதாலயா யூடியூப் சானல் விஸ் காம் படிக்கும் மாணவர்கள்.. நாடக கலையில் விருப்பம் உள்ளவர்களுக்கு வழிக்காட்டியாக இருக்கும்.

English summary
Director K. Balachander's Kavithalaya company YouTube Channel Launches, Updates Kb's Works The company is taken care of by Kb Sir's daughter Pushpa Kandasamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X