For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Kalyana Veedu Serial: அடடே திருமுருகன் செய்த தவறுக்கு பரிகாரம்!

Google Oneindia Tamil News

சென்னை: டிவி சீரியல்களில் மட்டும்தான் பெண்களின் இன்னொரு முகத்தை காண்பிக்கிறார்கள் என்று பல ஆண்கள் சொல்வதுண்டு. ஆனால், உண்மை அதுவல்ல..

பெண்களுக்கு எல்லா எமோஷன்களையும் அவ்வப்போது காண்பித்துவிடும் ஒரே முகம்தான்.சிரிப்பு, அழுகை, கோவம் என்று கொட்டித் தீர்த்துவிட்டு வேலையைப் பார்க்க சென்று விடுவார்கள்.

கிட்டாதாயின் வெட்டென மற என்று எதிலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளும் குணமும் பெண்களிடம் அதிகம் உள்ளது.

கெட்ட குணங்கள்

கெட்ட குணங்கள்

சீரியல்களில் பெண்களின் நல்ல குணங்களையும், கெட்ட குணங்களையும் பூத கண்ணாடி வைத்து பெரிதாக்கி ஷூட் செய்து காண்பித்து வருகிறார்கள். தொலைக்காட்சிகளுக்கு சீரியல்கள் என்பது முக்கியமாகி விட்டதுதான்.ஏன் அதில் நல்ல கதைகளை எடுத்து கொண்டு போக கூடாதா?

இவளை அழிக்க

இவளை அழிக்க

அவளை கவிழ்க்க திட்டமிடுவதும், இவளைக் கவிழ்க்கத் திட்டமிடுவதும் என்றுதான் முக்கால் வாசி கதைகள் போகின்றன. இயக்குநர் திருமுருகன் கூட இதற்கு விதி விலக்கல்ல. இவர் சன் டிவியின் மெட்டி ஒலி சீரியலில் கோபி கிருஷ்ணன் வேடத்தில் நடித்து கோபி கோபி என்று புகழ்பெற்று இருந்தார்.

கோபி கிருஷ்ணன்

கோபி கிருஷ்ணன்

இப்போது சன் டிவியில் தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் கல்யாண வீடு சீரியலிலும் கோபி கிருஷ்ணன் வேடத்தில் நடிக்கிறார். வழக்கம் போல இவரைப்பார்க்கும் பெண்கள் இவரை புகழ்வதும், இவருக்கு இரண்டு பெண்கள் ஆசைப்படுவதும் என்று கோகுலத்தின் கண்ணன் போல தனது கதா பாத்திரத்தை வடிவமைத்து உள்ளார்.

சின்ன சம்பந்தி

சின்ன சம்பந்தி

கோபியின் தங்கைகளை கல்யாணம் செய்து கொடுத்த இரண்டாவது சம்பந்தியையும், மூன்றாவது சம்பந்தியையும் என்னவோ ராட்சச பெண்கள் போல காண்பிப்பதும், பிள்ளையும் மருமகளும் ஹனிமூன் போக கிளம்பும்போது குடும்பமே பொறாமைப் பட்டு கிளம்புவதும் என்று எரிச்சலாக இருக்கிறது.எந்த வீட்டில் இந்த சிறு பிள்ளைத்தனம் நடக்கிறது என்று தெரியவில்லை.

சூரியா ஸ்வேதா

சூரியா ஸ்வேதா

கோபி சூரியாவை காதலிப்பது தெரிந்தும், ஸ்வேதா ஒரு பெண் குழந்தையுடன் கணவனால் கை விடப்பட்டு, இப்போது கோபி மீது ஆசைப்படுவதும் என்று அபத்தமாக இருக்கிறது. இதில் டெல்லிக்கு போன இடத்தில் சமைக்க ஸ்வேதாவுக்கு உதவி செய்வதும், அப்போது பெண்களின் பெருமையை பற்றி பேசுவதும் நிஜமா எடுபடலீங்க.

பெண் பெருமை

பெண் பெருமை

என்னவோ பெண்களை இழிவு படுத்தும் காட்சிகளை மிக நீளமாக எடுத்து ஒளிபரப்பி அதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டு, இப்போது அதற்கு பரிகாரம் தேடுவது போல இருக்கிறது ஸ்வேதாவுக்கு சமைப்பதிலுதவி பெண்ணின் பெருமை பேசுவது.

ஸ்வேதாவின் கதாபாத்திரமும், கோபியின் கதாபாத்திரமும் சூர்யாவை பற்றி நினைக்காமலும் குற்ற உணர்ச்சி இல்லாமலும் இருப்பது என்ன பெண் பெருமை?!

English summary
Many men are saying that women only show another face in TV serials. But, that's not true .. The only face that shows all the emotions to women from time to time is the laughter, the crying, the anger and the excitement of going to work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X