For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Kalyana Veedu Serial: கல்யாண வீடு நாயகனுக்கான கதைக் களம்!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் ஒரு நாயகனுக்கான கதை. கோபிகிருஷ்ணன் அவனை சுற்றி இருக்கும் கதாபாத்திரங்கள். கதாநாயகன் கோபி...ஆனால், வில்லத்தனம் செய்வதற்கு மட்டும் வில்லிகள்தான் இருக்கிறார்கள்.

பெண்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் கலா, சகுந்தலா, சிந்தாமணி,சுகந்தி என்று பல கதாபாத்திரங்கள் கல்யாண வீடு சீரியலில் இருக்கின்றனர்.ரோஜா இப்போது திருந்தி வாழ்ந்துக்கொண்டு இருக்கிறாள்.

ஆனால், இந்த சீரியலை விரும்பிப் பார்ப்பது என்னவோ குடும்ப பெண்கள்தான். இவர்கள் இப்படித்தான் பார்ப்பார்கள் என்று கணக்குப் போட்டு சீரியல் எடுப்பது போல இந்த சீரியலை தொடர்ந்து ஷூட் செய்து வருகிறார்கள்.

அம்மா கணக்கு

அம்மா கணக்கு

கோபி கிருஷ்ணன் ரொம்ப நல்லவர்.. தங்கச்சிகளுக்கு அன்பானவர்..அம்மா பேச்சைத் தட்டாத பிள்ளை என்றால், அப்பாவின் இன்னொரு குடும்பத்துக்கு எப்படி நல்லது செய்ய முடியும்? அப்படி என்றால் கோபி நியாயம் தர்மத்துக்கு கட்டுப்பட்டவன் என்று மட்டும் காண்பித்துக் கொள்ளுங்கள். அம்மா பிள்ளை என்கிற கணக்கில் இது எப்படி வரும்?

இது தப்புக் கணக்கு

இது தப்புக் கணக்கு

இன்னொரு குடும்பத்தில் நடக்கும் அவலங்களை ரசிப்பது.. அந்த குடும்பத்தை மேலும் மேலும் சின்னா பின்னமாக்க கலா சிஸ்டர்ஸ் புறணி பேசுவது இதைத்தான் மக்கள் ரசிக்கிறார்கள் என்று தப்புக் கணக்கு போட்டு திருமுருகன் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். வெள்ளந்தியான மக்கள் இதை வெகுளித் தனமாக எடுத்துக்கொண்டு இந்த வேலைகளை செய்ய ஆரம்பித்தால் குடும்பங்கள் நன்றாக இருக்குமா?

அப்பாவி மக்கள்

அப்பாவி மக்கள்

அப்பாவி மக்கள் சீரியலில் வில்லிகளாக நடிப்பவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் அடிக்கப் போகும் கோபத்தில் இருக்கிறார்கள். அவர்களின் இந்த எண்ணங்களைத் தூண்டி விடும் வகையில் காட்சிகளை அமைத்து சீர்கேடுகளுக்கு வழி வகுக்குறீர்கள். அதுவும் பெண்களுக்கு பெண்களையே வில்லிகளாகப் போட்டு. சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் ஆண்களுக்கு பெண்களை வில்லிகளாகப் போட்டு...

எமோஷனை குறைங்க

எமோஷனை குறைங்க

அன்பா பேசினாலும் அனுசூயா கீச்ச் கீச்னு எமோஷனலா கத்துகிறார். கோபமா பேசினாலும் அம்மா சிவகாமியுடன் சேர்ந்து கீச் கீச்னு கத்தறார். எமோஷன் காட்சிகளை சத்தம் இல்லாமல் எடுக்க முடியாதா? மக்கள் பிபி எகிறும் படியான காட்சிகள் வேண்டாம் என்று சொன்னால் காதில் போட்டுக் கொள்வதில்லை. ஒரே டென்சன்.. பிபி எகிறல்...மிஸ்டர் திருமுருகன்.. 7:30 மணிக்கு டிவி முன் உட்காருவதா வேண்டாமா?

English summary
Sun TV's kalyana veedu serial is the story of a hero. Gopikrishnan is the characters around him
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X