For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Kalyana veedu Serial: ஓ முருகா... வினை விதைப்பானேன்.. தினமும் மன்னிப்பு கேட்பானேன்?

Google Oneindia Tamil News

சென்னை: கல்யாண வீடு சீரியலை திரு பிக்சர்ஸ் சன் டிவியில் ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்த சீரியலில் காணக் கூடாத காட்சிகளையும், பேசக் கூடாத வசனங்களையும் புகுத்தி கதையை விறுவிறுப்பாக கொண்டு போகிறோம் பேர்வழி என்று அநீதி இழைத்து விட்டதாக புகார் வந்தது.

தொலைக்காட்சி கட்டுப்பாட்டு அமைப்பு இதுத் தொடர்பாக சன் டிவிக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

திருமுருகன் சீரியலான கல்யாண வீடு ஒளிபரப்பாவதற்கு முன்னர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளது, தொலைக்காட்சி சேனல்கள் கட்டுப்பாட்டு அமைப்பு.

சர்ச்சையான விஷயத்தை கையில்

சர்ச்சையான விஷயத்தை கையில்

தங்கை ரோஜா தனது அக்காவையே கேங் ரேப் செய்ய செல்வம் உள்ளிட்ட நான்கு நபர்களை தயார் படுத்துவதும், அதே பெண்,அவள்பெண் என்று கெஞ்சுவாள், கதறுவாள்..கண்ணீர் வடிப்பாள். அதை பாவம் என்று நினைத்து நீங்கள் ஒரு போதும் ரேப் செய்யாமல் விட்டுவிடக் கூடாது என்று வசனமும் பேச வைத்திருப்பார்.

Lakshmi Stores Serial: பழமை மாறாத கொல்கத்தா.. அதை விட அழகான குஷ்பு.. !Lakshmi Stores Serial: பழமை மாறாத கொல்கத்தா.. அதை விட அழகான குஷ்பு.. !

ரோஜாவையே கயவர்கள்

ரோஜாவையே கயவர்கள்

ஆனால், அக்காவை ரேப் செய்ய சொன்ன ரோஜாவையே நான்கு கயவர்களும் கேங்க் ரேப் செய்துவிடுகிறார்கள்.அவள் கெஞ்சுகிறாள், கதறுகிறாள்..ஆனால்,அவன்சொல்கிறான்,நீதானே கெஞ்சினாலும், கதறினாலும் விடக் கூடாதுன்னு சொன்னேன்னு சொல்லி,ஒவ்வொருத்தரும் ரேப் செய்ய போவதை இலைமறை காய் மறையாக காண்பித்தும் இருந்தார்.

நமது சைட்டில்

நமது சைட்டில்

நமது ஒன்இந்தியா சைட்டில் திருமுருகன் ஒரு பெரும் விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார். இதை சரியாக கொண்டு போகவில்லை என்றாலும், இதற்கு சரியான தீர்வுகளை சொல்லவில்லை என்றாலும் பெருங்குற்றம். கத்தி மேல் நடப்பது போன்ற விஷயத்தை கையில் எடுத்து இருக்கிறார் என்றும் சொல்லி இருந்தோம்.

வன்கொடுமை கேங் ரேப்

வன்கொடுமை கேங் ரேப்

பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு பாதிக்கப்பட்ட ரோஜாவே தண்டனை தருவது போலவும் காட்சிகளை வைத்துவிட்டு, மறுபடி அதை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார்.இது ஒளிபரப்பானது கடந்த மே மாதம். இது எல்லாமே தவறானது, வீட்டில் டிவி பார்க்கும் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று தொலைக்காட்சி கட்டுப்பாட்டு அமைப்புக்கு புகார் போயிருக்கிறது.

அபராதம் டிவிக்கு

அபராதம் டிவிக்கு

சன் டிவிக்கு தொலைக்காட்சி கட்டுப்பாட்டு அமைப்பு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதோடு,தொலைக் காட்சித் தொடர் ஆரம்பிக்கும் முன்பு, இது மாதிரி காட்சிகள் எடுத்து ஒளிபரப்பியதற்கு சீரியல் ஒளிபரப்பும் முப்பது நொடிகளுக்கு முன்பு இதற்கான வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. 23ம் தேதி முதல் வருகிற 28ம் தேதி வரை இந்த மன்னிப்பு கோரல் இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

நாள் தவறாமல் இப்படி ஒளிபரப்பியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று திருமுருகன் கேட்ட பின்னர்தான், சீரியல் ஆரம்பிக்கிறது. வினையை விதைப்பானேன்.. தினமும் மன்னிப்பு கேட்பானேன்?!

English summary
Kalyani Veedu serial is being broadcast by Mr Pictures on Sun TV. It has been reported that the serial in this serial, inaccessible scenes, and the story is a great deal of injustice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X