ஏழை பொண்ணு மனசை இப்படி ஏங்க வைக்கறீங்களே... நியாயமா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியலுக்கு ஃபேன்ஸ் அதிகமாயிட்டே இருக்காங்க. அதனாலதான் இதை சொல்ல வேண்டி இருக்கு..
கல்யாணமாகாத பொண்ணுக்கு செய்ய கூடாததை செய்யணும்னு ஏதேனும் கங்கணம் கட்டிக்கிட்டு வேலை பார்க்கறீங்களா? ஏழை பொண்ணுதான் பாவம்.. அதுக்காக கல்யாணமாகாத ஒரு பையன் கையில தாலி, கூரைப் புடவை குடுக்க சொன்னீங்க அதுவே மகா தப்பு.
இப்போ, அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளையா முறை மாமன் வந்துருக்கானாம். அதனால சந்தோசம் கொண்டாட அந்த பொண்ணுக்கு கண்ணன் கையால அக்கா குங்கும சிமிழ் குடுத்து குடுக்க சொல்லிவிடறாங்க
சினிமாவுல நடிச்சிருந்தா சீரியல்ல நடிக்கும்போது கொம்பு முளைச்சிருமா?
என்ன?
ஏழைப் பொண்ணு இதெல்லாம் குடுத்தா கண்ணனை விரும்ப ஆரம்பிச்சுட மாட்டாளா, குங்கும சிமிழ், கூரைப் புடவை, தாலி இதுக்கெல்லாம் முத்து செல்வி ஏழை பொண்ணு, அதனால, இது யார் கையால வந்ததுன்னு கவலைப்பட மாட்டான்னா தெரியும். தாலி அதுக்கு உரிய ஆசையைத்தான் தூண்டும். குங்குமமும் அப்படித்தான்.
கூத்துல தாலி
போதாததுக்கு கூத்துல தங்க தாலி வேற கண்ணன் கையால கட்டிக்கிட்டா.. (எந்த ஊர் கூத்துல பொய் கல்யாணத்துக்கு இப்படி தங்க தாலி காட்டறாங்கன்னு தெரியலை.) அவ மனசு கண்ணனை நினைக்காமலா இருக்கும். கண்ணனை நினைச்சு அலைபாயுற மனசுக்கு, இப்போ இன்னும் அலைபாயுதே கண்ணா பாடற மாதிரி குங்கும சிமிழ் கொண்டு வந்து கண்ணன் தனது கையால தர கிளம்பறான்.
குங்கும பொட்டு
ஏற்கனவே குங்கும பொட்டு வச்சதையே இன்னும் முத்து செல்வி மறக்கலை. கூத்துல கட்டிக்கிட்ட தாலியை மறைச்சு வச்சு வாழறா.கண்ணனுக்கு மீதி எல்லாம் தெரியுது.. கல்யாணமாகாத ஒரு பொண்ணுக்கு இதெல்லாம் கல்யாணமாகாத ஒரு பையன் தரக்கூடாதுன்னு தெரியாதா..ஜமீன் குடும்பத்து அம்மா விஜயலட்சுமிக்கும் தெரியாதா? இப்படி முத்துச்செல்வி ரசிக குடும்பங்கள் கொதிச்சு போயிருக்காங்க.
கதி
கண்மணி மாமா... மாமான்னு உருகறா. அவளை இந்த கண்ணன் பயலால புரிஞ்சுக்க முடியலையே.. இவன் பாட்டுக்கு தாலி கட்டறான், பொட்டு வைக்கறான், இப்போ குங்கும சிமிழ் தர போறானே... அப்போ மாமனை நினைச்சுகிட்டு இருக்கற கண்மணி கதி என்னன்னு கண்மணி ரசிக குடும்பங்கள் பேசிக்கறாங்க.
வீட்டுல வாழறவங்க
அப்பப்பா.. இந்த மக்கள் சீரியலில் வாழும் கதாபாத்திரங்களை வீட்டுல வாழறவங்க மாதிரி பார்க்கறாங்க. அவங்க கூட ஒரு நாள் சீரியல் பார்த்தா அவங்க புலம்பலை இப்படி எல்லாம் கேட்க வேண்டி இருக்கு.