• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

Webseries: லாக்டவுனால் போரடிக்குதா.. இந்த கிரைம் திரில்லரைப் பாருங்க.. திரில்லாய்டுவீங்க!

|

மும்பை: mx player இணைய தளத்தின் காஷ்மகாஷ் வெப் சீரீஸ் சும்மா இருப்பவர்களை சோஷியல் மீடியா பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்கிற அலட்சியமான பார்வையில் பார்க்க வைப்பதைத் துவங்கி பின்னர் அதில் மாட்டிக்கொண்டவர்களின் அல்லலை விவரிக்கிறது.

உண்மை சம்பவங்களை கோர்வையாக வைத்து. இதில் 5 நட்சத்திரங்களை மெயின் கதாபாத்திரங்களாக நடிக்க வைத்து நல்லதொரு வெப் சீரீஸாக விருந்து படைத்து இருக்கிறது mx player.

எப்போதும் எல்லாருமே நமக்கு அட்வைஸ் செய்வது என்பது சோஷியல் மீடியாவில் ரொம்ப ஆக்டிவாக இருக்காதே என்பதுதான்.. வாட்சாப் குரூப்... டிக்டாக். .ஃபேஸ்புக், ட்விட்டர் இதெல்லாம் தேவையா என்று கூட காஷ்மகாஷ் வெப் சீரீஸில் நடக்கும் சம்பவங்கள் நம்மை கேள்வி கேட்டு திணற அடிக்கின்றன.

இல்லத்தரசிகள் மாணவிகள்

இல்லத்தரசிகள் மாணவிகள்

காஷ்மகாஷ் கதையின் ஆணிவேர்களே வெவ்வேறு வயது பிரிவுகளில், துறைகளில் இருக்கும் பெண்கள்தான். மிக முக்கியமாக இல்லத்தரசிகள், மாணவிகள் எப்படி சோஷியல் மீடியாவின் மூலம் எந்த விதத்தில் மாட்டிக்கொள்ள வாய்ப்புக்கள் இருக்கிறது என்பதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து காஷ்மகாஷ் வெப்சீரீஸ் கொடுத்து இருக்கிறது மிக அருமையாக வெப் சீரீஸ் சீரீஸ் குழு

இதுவா அதுவா

இதுவா அதுவா

சோஷியல் மீடியாவின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு குற்றங்களுக்கு பலியானவர்கள் சரியான மற்றும் தவறான வழிக்கட்டுதலுக்கு இடையே மாட்டிக்கொண்டு எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் தேர்ந்தெடுக்கும்போது ஏற்படும் சங்கடங்கள்.. இவை உண்மை சம்பவங்களாக கிடைத்த போது இதை மாதிரியாக எடுத்துக்கொண்டு அருமையாக கதை வடிவம் அமைத்து இருக்கிறது சீரீஸ் குழு. நடிகை நடிகர்களை தேர்ந்தெடுத்து ஷூட் செய்து இருக்கும் விதம் என்று எல்லாமே காஷ்மகாஷை விரும்பி பார்க்க வைக்கிறது.

பிப்ரவரி 25 முதல்

பிப்ரவரி 25 முதல்

இதில் சுப்ரியா சுக்லா, ராஜேந்திர சாவ்லா, விக்கி அஹுஜா, அப்பாஸ் கான் போன்ற மூத்த நடிகர்களும் நடிக்கின்றனர். காஷ்மகாஷ் பிப்ரவரி 25 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தனிமையில் இருக்கும் பெண்கள் பல்வேறு நிலைகளில் அடிமையாதல் மற்றும் தனிமையைக் கையாளும் ஐந்து பெண்கள் சோஷியல் மீடியாவில் சிக்குதல் என்று கதையை கொண்டு போகிறார்கள்.

திருடவும் தூண்டுதல்

திருடவும் தூண்டுதல்

க்ளெப்டோமேனியா என்கிற நோய் இருக்கிறது என்று கண்டறியப்பட்ட 20 வயதிற்குட்பட்ட ஒரு பெண்ணுக்கு திருடவும் கட்டுப்பாடற்ற தூண்டுதல் சோஷியல் மீடியாவின் மூலம் உள்ளது, இதற்கு ஒரு உள்ளூர் வாட்ஸ்அப் குழுவின் நிர்வாகி, சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக மாற்ற போலி செய்திகளை பரப்புகிறார். இது இருக்க...தனிமையை அனுபவிக்கும் ஒரு காவல்துறை அதிகாரியின் மனைவி ஒரு சமூக வலைப்பின்னல் பயன்பாட்டில் தஞ்சம் அடைகிறார், இப்படி வலைவலையாக பின்னப்பட்ட கதையாக நம்மை இழுத்துச் செல்கிறது காஷ்மகாஷ்

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
The mx player website's Kashmakash web series describes the idleness of those who are just beginning to look at social media as a glimpse of what social media can do.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more