For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

kodeeswari: ஸ்கூட்டி வாங்கி அதுல என் அப்பாவை உட்கார வச்சு ஓட்டணும்...!

Google Oneindia Tamil News

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட திவ்யா அய்யாசாமி, ஜெயிக்கற பணத்தில் ஸ்கூட்டி வாங்கி அப்பாவை அதுல உட்கார வச்சு ஓட்டணும் என்கிற தனது ஆசையை கூறினார்.

35 வருஷமா ஒரே சைக்கிள் மிதிச்சுக்கிட்டு இருக்கும் அப்பாவுக்காக, அவரை சொகுசாக வண்டியில் உட்கார வச்சு ஓட்டணும் என்பதற்காக இந்த ஆசையை கூறினார் திவ்யா.

தன்னை 15 கிலோ மீட்டர் சைக்கிள் மிதிச்சு எக்ஸாம் எழுத அப்பா அழைச்சுட்டு போனார் என்று கூறி, நெகிழ வைத்த திவ்யா, தான் ஒரு விவசாயி ஆக வேண்டும் என்பதுதான் ஆசை என்றும் கூறினார்.

2 லட்சம் விதை நெல்

2 லட்சம் விதை நெல்

இந்தியாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விதை நெல் ரகம் இருக்கிறது. இப்படிப்பட்ட விவசாயத்தை மீட்டெடுக்க விலை நிலங்கள் வைத்து இருக்கும் எல்லாரும் நல்ல விவசாயம் செய்ய வேண்டும் என்பதே தனது ஆசை என்று கூறினார்.தான் ஒரு விவசாயி என்பதில் தான் பெருமைப்படுவதாகவும் கூறிய திவ்யா பிஎட் படிச்சு இருக்கார். டீச்சராகவும் ஆசை இருக்கிறது என்று கோடீஸ்வரி நிகழ்சசியை நடத்தும் ராதிகாவிடம் கூறினார்.

azhagu serial: பரவால்லியே...அழகு சீரியலில் ரேவதியும் நடிக்கறாங்க போல!!azhagu serial: பரவால்லியே...அழகு சீரியலில் ரேவதியும் நடிக்கறாங்க போல!!

டீச்சர் விவசாயி

டீச்சர் விவசாயி

பிஎட் படிச்சு இருக்கும் நீங்கள் டீச்சர் வேலை வாய்ப்பு வந்தால் செய்வீர்களா என்று ராதிகா சரத்குமார் கேட்டார். கண்டிப்பா செய்வேன் மேடம் என்று சொல்லிய திவ்யாவிடம், விவசாயி ஆக வேண்டும் என்றும் ஆசைப்படுகிறீர்கள்.. டீச்சர் வேலையையும் செய்ய வேண்டும் என்கிறீர்கள். இரண்டையும் எப்படி செய்ய முடியும் என்று ராதிகா கேட்டார். செய்யணும் நினைச்சா முடியாதது எதுவும் இல்லை மேடம் என்று சொல்லி அசத்தினார் திவ்யா.

இருக்கும் நேரம்

இருக்கும் நேரம்

ஒரு விவசாயி காலையில் எழுந்து காட்டுக்கு போய் பயிர்களை பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலையை செய்வார். ஸ்கூல் 9:30 மணிக்குத்தான் ஆரம்பமாகுது. அதற்குள் காலையில் சீக்கிரம் எழுந்து காட்டில் பயிர்களை பார்த்துட்டு, மாலை வரை டீச்சர் வேலையை பார்க்கலாம். மீண்டும் காட்டுக்கு போயும் விவசாயம் பார்க்கலாம் மேடம். செய்யணும்னு நினைச்சா எல்லாம் முடியும் மேடம் என்று சொன்னார் திவ்யா. ராதிகாவும் அதுதான் என் பாலிசியும் கூட என்று கூறினார்.

தானே புயல்

தானே புயல்

தானே புயல் வந்தபோது மின்சாரம் இல்லை. பஸ் போக்குவரத்து, ஒரு ஆட்டோ போக்குவரத்து கூட இல்லாமல் மரம் அங்கங்கு விழுந்து கிடந்துச்சு மேடம். அப்போ எனக்கு எக்ஸாம். என் அப்பாதான் 15 கிலோ மீட்டர் என்னை சைக்கிளில் உட்கார வச்சு மிதிச்சு எக்ஸாம் எழுத கொண்டு போய் விட்டார். கடந்த 35 வருஷமா ஒரே சைக்கிளை வச்சு ஒட்டிக்கிட்டு இருக்கார். ஒரு ஸ்கூட்டி வாங்கி அதுல அவரை உட்கார வச்சு ஒட்டிக்கிட்டு போகணும்னு ஆசை மேடம் என்று கூறினார் திவ்யா. அதோடு, 35 வருஷங்களுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சிக்கு வர பேண்ட் ஷர்ட் போட்டு வந்திருக்கார் அப்பா என்றும் கூறினார்.

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை பற்றி நிறையே பேர் பேசுகிறார்கள். ஆனால், இதற்கு தீர்வுதான் என்ன என்று ராதிகா கேட்டபோது, ஒரு விவசாயி தான் விளைவிச்ச பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது போவதுதான் தற்கொலைக்கு காரணம் மேடம். சொசைட்டி கடன் கட்ட முடியாமல் போகும் அவலம் ஏற்படுகிறது. விவசாயி தான் விளைவிச்ச பொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்யணும் மேடம். அப்போதுதான் விவசாயி தற்கொலை தடுக்க முடியும் என்றும் கூறினார். ஒரு விவசாயி இழப்பு என்பது அந்த குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல, நாட்டின் இழப்பும் கூட என்று ராதிகா கூறினார்.

English summary
Divya Ayyasamy, who was attending a kodeeswari show on Colors Tamil TV, expressed her desire to buy a scooty for win money and to sit on with her father.Divya, who has been riding a bicycle for 35 years, said that she wanted him to sit in the luxury toe scooty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X