For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Kodeeswari : கணவரை படிக்க வைக்கணும்.. குடும்ப செலவை பார்த்துக்கணும்!

Google Oneindia Tamil News

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தூத்துக்குடி சத்யா, கணவரை படிக்க வைக்கணும், குடும்ப செலவை பார்த்துக்கணும் என்று சிக்கன் கடையில் வேலை பார்க்கிறார்.

அம்மா, அப்பா,தம்பி, நான், என் கணவர் என்று ஐந்து பேர் இருக்கிறோம் என்று சொன்னார் சத்யா.எம்எஸ்சி படித்து இருக்கும் சத்யாவுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கிடைத்த வேலையான சிக்கன் கடையில் வேலைப் பார்க்கிறார்.

இப்போது 8 மாத கர்ப்பிணியான சத்யா கோடீஸ்வரி ஹாட் சீட்டில் அமரும் வாய்ப்பை தனது திறமையால் பெற்று இருக்கார்.

மக்கள் இரக்கம்

மக்கள் இரக்கம்

சிக்கன் கடையில் 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் நான் வேலை பார்ப்பதை பார்த்து எல்லாரும் இறக்கப்படுகிறார்கள். ஆனால், என் சூழ்நிலைக்கு நான் வேலைக்கு போயே ஆகணும். கணவர் பகுதி நேரம் வேலை பார்த்துகிட்டு மேலே படிக்கிறார். எப்போதும் படிப்பு படிப்புன்னு அவர் இருப்பார். குடும்ப செலவு பாதியை அவர் பார்த்தாலும்,மீதியை நான் பார்க்கணும்.

Aranmanai Kili Serial: உங்களுக்கே பயம் வருதுல்ல... எதுக்கு அந்த சீன்ஸ் வைக்கறீங்க?Aranmanai Kili Serial: உங்களுக்கே பயம் வருதுல்ல... எதுக்கு அந்த சீன்ஸ் வைக்கறீங்க?

கணவர் படிக்க

கணவர் படிக்க

கணவரை மேல படிக்க வைக்கணும், வீட்டில் அம்மா, அப்பா தம்பியை பார்த்துக்கணும். இதுக்கெல்லாம் நான் வேலைக்கு போனால்தான் முடியும். வீட்டில் இருக்கும் நேரத்தில் என்னால் முடிஞ்ச அத்தனை சிறு தொழில்களையும் செய்து வருமானம் ஈட்ட பார்ப்பேன். முழுக்கு வர்த்தி செய்யறது.. தீப்பெட்டி செய்யறது... இப்படி எதையாவது செய்துகிட்டே இருப்பேன்.

நன்றாக பாடுவேன்

நன்றாக பாடுவேன்

நன்றாக பாடுவேன்.. பாட்டு கத்துக்கிட்டது எல்லாம் இல்லை. கேள்வி ஞானத்தில் பாடுவேன். இப்படி சானல், கச்சேரி என்று யாரவது கூப்பிட்டால் போயி பாடுவேன்,. அதிலும் கொஞ்சம் காசு கிடைக்கும் என்று கூறும் சத்யாவின் திருமணம் காதல் திருமணமாம். முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது என்கிற பாடலை மிக அருமையாகப் பாடி கணவரை வெட்கப்பட வைத்தார் சத்யா.

சொந்த தொழில்

சொந்த தொழில்

கணவர் படிக்க ஊக்குவிச்சுக்கிட்டே இருப்பேன்.. அவரை நல்லா படிக்க வைப்பேன் என்று கூறும் சத்யா, சிறு வயதில் இருந்து ரொம்ப கஷ்டப்பவங்க என்று சொல்கிறார் அவரது கணவர். சொந்தமா தொழில் செய்யணும், எல்லார் மாதிரியும் வீடு வாசல் குழந்தை என்று வாழணும்னு சத்யாவுக்கு ஆசை என்றும் கூறினார்.பார்க்கலாம் இவர் இன்னொரு கோடீஸ்வரி ஆவாரா என்று.

English summary
Tuticorin Satya, who attended a kodeeswari TV show on Colors Tamil TV, is working at a chicken shop to educate her husband about family expenses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X