For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Kodeeswari: வைத்தியன்கிட்டே குடுக்கறதை வணிகன்கிட்டே குடுக்கலாம்...!

Google Oneindia Tamil News

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ரோஸ்மேரி, வைத்தியன் கிட்ட கொடுக்கறதை விட வணிகன்கிட்டே கொடுக்கலாம் என்பதுதான் என் பாலிசி என்று கூறினார். உண்மையில் இவர் பேசிய பல கருத்துக்கள் பலருக்கும் பயனாக இருந்தது.

கோடீஸ்வரி நிகழ்ச்சிக்கு பல துறைகளையும் சார்ந்த பெண்கள் போட்டியாளராகத் தேர்தெடுக்கப்பட்டு, அவரவர் தனித்திறமை மூலம் கோடீஸ்வரியின் ஹாட் சீட்டில் உட்கார்ந்து ராதிகாவுடன் நேருக்கு நேரான கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார்கள்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துக்காக பணத்தை வென்று அதை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ரோஸ்மேரி கஷ்டத்தில் இதுற்கும் குடுமப்த்தை மேல் தூக்கிவிட இந்தப்போட்டியில் கலந்துக்கொள்ள வந்து இருக்கார்.

 ராதிகா கட்டிப்பிடி வைத்தியம்

ராதிகா கட்டிப்பிடி வைத்தியம்

ரோஸ்மேரி ராதிகாவைக் கண்டு ரொம்ப எக்ஸைட்டாகி சீட்டில் இருந்து எழுந்து ஓடிவிட்டார். ராதிகாவிடம் ஓடிச் சென்று என்னை கட்டிப்பிடிச்சுக்கோங்க மேடம்னு சொல்லி அவரை கட்டிக்கொண்டார். ராதிகா கட்டிப்பிடித்துவிட்டு போதுமா என்று அவரை விலக்கிவிட, மேரியின் தொண்டை வறண்டுவிட்டது போலும். ஆரம்பத்தில் ரொம்ப நெர்வஸாகத்தான் இருந்தார் மேரி.

Agni Natchathiram Serial: இந்த சாமியாருங்க பரிகாரம் செய்யறது செம ஜாலியா இருக்கு!Agni Natchathiram Serial: இந்த சாமியாருங்க பரிகாரம் செய்யறது செம ஜாலியா இருக்கு!

 என்ன முடியலையா?

என்ன முடியலையா?

மேரி மென்று விழுங்குவதை பார்த்த ராதிகா என்ன ஒன்னும் முடியலையா என்று கேட்டார். ஆமாம் மேடம்..என்று மேரி சொல்ல, கொஞ்சமா தண்ணி குடிக்கிறீங்களா என்று கேட்டார் ராதிகா. சரி மேடம் தண்ணி வேணும் என்று சொல்லி தண்ணீர் கேட்டு வாங்கி குடித்தார் மேரி. பின்னர் வாங்க மேடம் போயி உட்காரலாம் என்று ராதிகாவை அழைத்து செல்ல, இருங்க.. ஸ்மைல் பண்ணுங்க என்று சொன்னார். ஸ்மைல் பண்ணுங்க இது நம்ம கோடீஸ்வரி என்று சொன்னார் மேரி.

 பாடல் பாடினார்

பாடல் பாடினார்

உலகம் உலகம் என்கிற உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆர் பட பாடலை மேரி குதூகலமாக பாடினார். பின்னர் அவரை ராதிகா ஹாட் சீட்டில் உட்கார வைத்தார்.குடும்பத்தை சமாளிக்கிறது எவ்ளோ சிரமமா இருக்கு என்று ராதிகா கேட்டார். நாங்க எதெது செய்து குறைச்சுக்கணுமோ அதை குறைச்சுக்குவோம் என்று சொன்னார். அவரையும் சேர்த்து பட்டினி போட்டாலும் போடுவேனே தவிர, பிள்ளைங்க சாப்பாட்டில் கை வைக்க மாட்டோம் என்று கூறினார்.

 வைத்தியன் வணிகன்

வைத்தியன் வணிகன்

கொசு பத்திய மாட்டனும்னா கூட, இந்த மாசத்துல இன்னும் ஒரு பத்து நாளைக்கு தாங்கணும்னா ஒரு 7 மணிக்கு மேல கொசு பத்திய மாட்டுங்க. அல்லது தூங்கின பிறகு கொசுபத்திய போடுங்கடான்னு சொல்லுவோம். என்னோட பாலிசி என்னென்ன வைத்தியன்கிட்டே குடுக்கறதை விட வணிகன்கிட்டே கொடுக்கறது மேல்னு சொல்லுவேன். பிரிதிவி அப்பா, டாக்டர்கிட்டே 100 ரூபாய் குடுத்துட்டுத்தான் வைத்தியம் பார்க்கறோம். புளிச்ச பாலை கீழே ஊத்திடுங்கன்னு சொல்லுவேன் என்று அதிரடியாக ஆனால், அனைவரும் கடைப்பிடிக்கும்படி பேசினார்.

பிரிவென்க்ஷன் ஈஸ் பெட்டர் தென் கியூரனு அவங்க நம்பறாங்க என்று சொன்னார் ராதிகா.

English summary
Rosemary, who participated in the Kodeeswari show on Colors Tamil TV, said that my policy is to give a business card rather than a doctor. In fact, many of his comments have benefited many.The women from various fields of the Kodeeswari show have been selected as a contestant, and by her own distinction she sits on the hot seat of Koteshwari and joins Radhika in a face-to-face question and answer session.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X