• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொண்டையில் தாழம்பூ.. .நெஞ்சிலே வாழைப்பூ.. இப்ப டிவியில் குஷ்புதான் டாப்பு!

|

சென்னை: நடிகை குஷ்பூ பல கோடி பெண்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டியவர். ஏனோ, அவரது கடின உழைப்பு, தொழிலில் அவர் காண்பிக்கும் அதீத அர்ப்பணிப்பு அவ்வளவாக வெளியில் தெரியாமலே இருக்கிறது.

மும்பையில் பிறந்து வளர்ந்த குஷ்பூ. குழந்தை நட்சத்திரமாக இந்தி படங்களில் அறிமுகமாகி, அதாவது 14 வயதில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்ததாகவும் சொல்வதுண்டு.

ஹிந்தியை அடுத்து தெலுங்கு பட உலகமே அவருக்கு வரவேற்பு அளித்தது. என்றாலும், அவர் தெலுங்கில் நல்ல படங்களில் நடித்தார் என்று பெயர் வாங்க முடியாத அளவுக்குத்தான் அவரது நிலை இருந்தது.

பிரபுவுடன்

பிரபுவுடன்

இந்த நேரத்தில்தான் தர்மத்தின் தலைவன் என்கிற படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகம் அவரை திரைக்கு கொண்டு வந்தது.அந்த படத்தில் ரஜினி சாரும் நடித்திருப்பார்.ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் சுஹாசினி.

டேய்.. போதும்டா உன் நடிப்பெல்லாம். .. ஆப்பிள் வாங்கிட்டு வந்திருக்கியே.. யார் காசுல வாங்கினே!

வருஷம் 16

வருஷம் 16

நடிகர் கார்த்திக்குடன் வருஷம் 16 படம் நடித்தார். ஃபாஸில் இயக்கத்தில் வெளியான வருஷம் 16 பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. இந்த பொண்ணுக்கிட்ட என்னவோ இருக்குன்னு சொல்லிய படத் தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து குஷ்பூ கால்ஷீட்டை வாங்கி ஸ்டாக்கில் வைத்தனர்.

நடிப்பு நடிப்பு

நடிப்பு நடிப்பு

இத்தனை ஷெட்யூலுக்கு இப்படி நேரம் ஒதுக்கித் தரணும்னு மேனேஜரிடம்அட்ஜஸ்ட் செய்து தர சொல்லி, எந்த தயாரிப்பாளரின் மனமும் கோணாதபடி கால்ஷீட் கொடுத்ததில் குஷ்பூ தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மனதையும் தன் வசப்படுத்தினார். இது அவரது இயல்பான குணம். நாம் நடிக்கணும்னு ஒரு தயாரிப்பாளர் விரும்பி வரும்போது, அவர்களிடம் கால்ஷீட் இல்லை என்று கூற குஷ்பூவுக்கு மனமில்லை.

பாரதிராஜா

பாரதிராஜா

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் சார். இயக்குனர் இமயம் பாரதிராஜா, இவர்கள் முதலில் குஷ்பூவை ஒரு கவர்ச்சிக்காகத்தான் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புக் செய்கிறார்கள் என்று அலட்சியமாக நினைத்து குஷ்பூ அலை தமிழகம் முழுவதும் வீசிய போதும் கண்டுக்காமல் இருந்தவர்கள், சின்ன தம்பி படம் திரையுலகையே புரட்டி போட்டு, முந்தானை முடிச்சுக்குப் பிறகு வசூலை குவித்த படம் என்று அறிந்ததில் அப்படியே மாறிப் போனார்கள்.

கேப்டன் மகள்

கேப்டன் மகள்

உடனடியாக குஷ்பூவை இருவரும் புக் செய்தார்கள். இரண்டு பெரிய இயக்குனர்கள் என்று சொல்லி உடனடியாக தேதிகளை அட்ஜுஸ்ட் செய்து கால்ஷீட் தந்தாராம் குஷ்பூ. குஷ்பூ ஒரு தனி அழகு.. அவருடன் யாரையும் ஒப்பிட்டு பேச முடியாது.அவரது வெகுளித் தனம் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தாலும், நல்ல புத்திசாலியும் கூட.. சொல்வதை டக்கென்று பிடித்து நடிப்பவர். இதுவரை அவர் அதிக டேக் எடுத்துக்கொண்டதே இல்லைன்னு இவருடன் பணியாற்றிய அத்தனை இயக்குனர்களும் பெருமையாக சொன்னது.

அதிகம் பயந்தவர்கள்

அதிகம் பயந்தவர்கள்

மும்பை பொண்ணு அதிகம் பேசறார்..இவரை வச்சிட்டு படம் எடுத்தால் எதுவும் வில்லங்கம் வந்திருமோன்னு நினைச்சவங்க குஷ்பூவை புரிந்துகொண்டு, அவருடன் பணியாற்ற விரும்பிய கதைகளும் உண்டு. மனோரமா, ராதா ரவி இவர்கள் இருவரும் குஷ்பூவை மிகவும் பாராட்டி,, அவருக்கு தமிழ் திரையுலகம் வந்தாரை வாழ வைக்கும். நிச்சயமா நீ கொடி கட்டி பறக்கப்போறே பாருன்னு ஆசிர்வதித்தார்களாம். அதே போலத்தான் குஷ்பூ தமிழர்கள் மனதில் பெரும் இடம் பிடித்தார்.

குஷ்பூவுக்கு கோயில்

குஷ்பூவுக்கு கோயில்

திருச்சி ரசிகர்கள் திருச்சியில் குஷ்பூவுக்கு கோயில் கட்டினார்கள். அப்போது கோயிலை பார்க்க கூட நேரமின்றி குஷ்பூ நடிப்பில் முழு நாளையும் செலவிட்ட காலம் அது. சின்னத்தம்பிக்கு பிறகு அண்ணாமலை, நாட்டாமை படங்கள் குஷ்பூவின் மகுடத்துக்கு கல்பதித்தாற் போன்ற படங்கள். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தெலுங்கில் குஷ்பூ நடித்து ஓடாத படங்களை எல்லாம் தமிழில் டப்பிங் செய்ய குஷ்பூக்காக ரசிகர்களை தியேட்டரை நோக்கி வந்தார்கள்.

ஜோடிப் பொருத்தம்

ஜோடிப் பொருத்தம்

குஷ்பூ என்றாலே அந்த அத்தியாத்த்தில் பிரபுவும் இடம்பிடித்துக் கொள்வார். அந்த அளவுக்கு இந்த ஜோடி சிறந்த ஜோடியாகத் திகழ்ந்தவர்கள். சின்னத்தம்பிக்கு பிறகு நடித்த வெற்றிவிழா, உத்தம ராசா போன்ற படங்கள் வெற்றி விழா கண்டன. குஷ்பூ ரொம்ப சின்சியரா எடுத்த காரியத்தை முடித்தே காண்பிப்பார். நடிப்பு என்று வந்துவிட்டால், தன்னால் எந்த கால தாமதமும் இருக்க கூடாது என்பதில் வெகு கவனமாக இருப்பாராம். பொள்ளாச்சி போன்ற அவுட்டோர் ஷூட்டிங்கில் எத்தனை மணிக்கு இரவு பேக்-அப் ஆனாலும், காலையில் 3:30 மணிக்கு எழுந்து விடுவாராம்.

பெர்ஃபெக்ஷன்

பெர்ஃபெக்ஷன்

காஸ்டியூம், மேக்-அப், முடியலங்காரம்னு எல்லாத்திலும் பெர்ஃபெக்ஷன் எதிர்பார்க்கறதுனால, அந்த நேரத்துலயே குளித்து, அனைத்தையும் தானே செய்து கொண்டு, இயக்குனர் ஷாட் ரெடின்னு சொல்வதற்குள் தயாராகி லொக்கேஷன்ல காத்திருப்பாராம். குஷ்பூவும் தான் நடிக்கும் அத்தனை மொழி படங்களின் மொழியையும் கற்றுக்கொள்ள ஆர்வம் காமிப்பாராம். எல்லாரிடமும் அந்த மொழியில் பேசி, அதை கற்றுக்கொள்ள துடிப்பாராம். இருந்தாலும் தமிழ்தான் தன்னை வாழ வைத்த மொழி, இனி வாழப் போவதும் தமிழ் நாட்டில்தான் என்று ஆரம்பத்திலேயே முடிவெடுத்துட்ட குஷ்பூ, தனி ஆசிரியர் வைத்து தமிழ் மொழியை எழுத படிக்க கத்துக்கிட்டாராம்.

வார இதழ்கள்

வார இதழ்கள்

பேப்பர், வார இதழ்களில் தன்னைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதை தானே படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவரிடத்தில் வெகுவாக இருந்ததாம்.அதையும் படித்து, பின்னர் தமிழ் பேப்பர்கள், வார இதழ்களை படிக்க ஆரம்பித்ததாக சொல்கிறார்கள். சின்னத்தம்பி படத்தில் குயிலைப் புடிச்சு கூண்டில் வச்சு பாடல் முடிந்தவுடன், குஷ்பூ ஓடிச் சென்று சின்னத்தம்பியை கட்டிக்குவார். பின்னர் ராதா ரவியின் மார்பில் சாய்ந்தவர் சாய்ந்தபடியே ஒரே டேக்கில் முழு மூச்சாக வசனத்தை ஏற்ற இறக்கத்தோடு பேசி முடிச்சுட்டாராம். ராதா ரவி சொல்ல வார்த்தைகள் இல்லாமல் வியந்து போனார் என்றும் சொல்வார்கள். மனோரமா ஆச்சியும் குஷ்பூ தமிழ் கற்கும் ஆர்வத்தை வெகுவாக பாராட்டி இருக்காராம்

ஜாக்பாட்

ஜாக்பாட்

ஜெயா டிவியில் குஷ்பூ ஜாக்பாட் என்று ஒரு டாக் ஷோ நடத்தினார். இந்த ஷோவை அவர் கொண்டு போன விதமே தனி ஸ்டைல்னு எல்லாரும் பாராட்டும் அளவுக்கு இருந்தது ஒரு ஸ்கூல் டீச்சர் மாதிரிதான் அந்த ஷோவை குஷ்பூ நடத்தினார். அரசியல் பொது வாழ்வு என்று வந்த போதிலும், தனக்கான கடமைகளை இன்றும் விட்டு கொடுக்காமல் செய்து வருகிறார் குஷ்பூ. மனதில் பட்டத்தை பளிச்சென்று கூறிவிடும் அந்த குணம் அவரது டிரேட் மார்க். என்ன வந்த போதிலும் அதை அவர் மாற்றிக் கொள்ளாமல் இருப்பது அவரது கூடுதல் பிளஸ் .

பெரிய திரை-சின்ன திரை

பெரிய திரை-சின்ன திரை

பெரிய திரையில் அனைவரின் மனம் கவர்ந்த அழகியாகவும், சிறந்த நடிகையாகவும் வலம் வந்த குஷ்பூ, இப்போது லட்சுமி ஸ்டோர்ஸ் மூலம் சின்னத்திரையில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.தவிர சொந்த கம்பெனி தயாரிப்பில் உருவாகும் சீரியல் வேறு. எடுத்த எடுப்பிலேயே காலம் காலமாக சன் டிவியில் ராதிகா பிடித்திருந்த இடத்தை குஷ்பூ வந்த வேகத்தில் சட்டென்று கைப்பற்றி விட்டார். சின்ன திரையிலும் இவர் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Actress Khushboo needs to be a roll model for several million women. Because of his hard work, his commitment to the profession is far from being revealed.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more