For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது புள்ளீங்கோ ஹேர் கட்டிங்காமே... குட்டிச் சுட்டீஸ் அசத்தல்!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சியில் 4 வயசே ஆன சிறுவன் தன் தலைமுடி கட்டிங்கை புள்ளீங்கோ கட்டிங் என்று சொல்லி அசத்தினான்.

குட்டிச் சுட்டிடீஸ் நிகழ்ச்சியை நடிகை கோவை சரளா ரொம்ப மென்மையா நடத்திக்கிட்டு வர்றார்.

குழந்தைங்களுக்கு இவரை ரொம்ப பிடிக்கும் என்பதால் நிகழ்ச்சி ரொம்ப சுவையாக இருக்கிறது.

 யுகேஜி சிறுவன்

யுகேஜி சிறுவன்

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட யுகேஜி சிறுவன், உட்கார்ந்து இருக்கும் ஸ்டைலே படு அசத்தலாக இருந்தது. அவன் தலை முடி கட்டிங் வித்தியாசமாக இருக்க, இது என்ன கட்டிங் என்று கேட்டபோது புள்ளீங்கோ கட்டிங் என்று சொன்னான். கோவை சரளா பின்னர் அவன் பாஷையிலே அவனுடன் பேச ஆரம்பித்தார்.

 விரலை காண்பித்தான்

விரலை காண்பித்தான்

புள்ளீங்கோ ஸ்டைலில் இரட்டை விரலை காண்பித்தான் இந்த படு சுட்டி.எங்கே என்னை பார்த்தே என்று கோவை சரளா கேட்டபோது காஞ்சனா படத்தில்னு சொன்னான். எத்தனை தடவை படம் பார்த்தேன்னு கேட்டபோது மூணு தடவை என்று ஐந்து விரல்களை காட்டினான்.இதிலும் குழந்தைத்தனம் கொஞ்சி விளையாடியது...

 காந்திஜி பார்த்திருக்கியா?

காந்திஜி பார்த்திருக்கியா?

காந்திஜியை பார்த்து இருக்கியான்னு கேட்டபோது, பார்த்து இருக்கேன்னு சொன்னான்.. எங்கேன்னு கேட்டபோது காசுல இருப்பாங்கன்னு அழகாக சொன்னான். இப்படி கொஞ்சி விளையாடும் குழந்தைகளின் சுட்டித் தனத்தைப் பார்க்கும்போது நம்மையும் அறியாமல் மனம் லேசாகிறது.

 கூண்டில் ஏற்றி

கூண்டில் ஏற்றி

ஒரு ஐந்து வயது குழந்தைக்கு காந்திஜியைத் தெரியவில்லை. அப்பா அம்மா எனக்கு சொல்லித் தரவில்லை என்று அந்த குழந்தை சொல்ல, உடனே கூண்டில் ஏற்ற வேண்டும் என்று குழந்தையின் அப்பா அம்மாவை கூண்டில் ஏற்றினார்கள். அவர்கள் இருவரும் உனக்கு சொல்லித் தந்தோம்.. அதை நீ மறந்துட்டே.. இனிமேலும் சொல்லித் தருகிறோம் என்று சொன்னார்கள்.

முதலில் இந்த கூண்டை பெண்களை குழாயடி சண்டை போட வைத்து, அப்பா அம்மாவை பாட்டுக்கு டான்ஸ் ஆட வைத்து என்று இப்படி எது எதற்கோ என்று உபயோகப் படுத்திக்க கொண்டு இருந்த இந்த நிகழ்ச்சி, இப்போது சற்றே மாறி இருப்பது ஆறுதல்.

English summary
The Ukg boy, who was present at the concert, was stylistically uncomfortable sitting. When he asked what it was cutting, he said, "pulleengo cutting," to which his hair was different. Kovai Sarala then started talking to him in his language.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X