For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Lakshmi Stores Serial: ஸ்ஸ்ஸ்... அப்பா.. அரை மணிக்கே கண்ணைக் கட்டுதே!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல், வரும் திங்கள் முதல் சனிகிழமை வரை மட்டும் தினம் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறதாம். சொல்வதற்கு அவ்வளவு கதை உள்ளதாம் (பார்ரா!).

என்னதான் பெரிய கதை என்றாலும் அரை மணி நேரம் என்பதுதான் சீரியலுக்கான நேரம். திரைப்படமே அஞ்சு பத்து நிமிஷம் நேரம்
கூட போனாலே ரசிகர்கள் அலுப்பு உய்னு காதைத் துளைக்குது.

அப்படி இருக்கும்போது அரை மணி நேர சீரியலை ஒரு மணி நேரம் ஆக்கினால் எங்கள் நிலைமை? வேற வழி இல்லை.. சேனலை மாத்திடணும். இது மக்களை கஷ்டப்படுத்தும் வேலை.

ஸ்க்ரீன் கையடக்கம்

ஸ்க்ரீன் கையடக்கம்

பெரிய திரையில் நூறு படங்களுக்கு மேல் இயக்கியவர் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள். சின்னத்திரை என்ன,கையடக்க ஸ்க்ரீன் கிடைச்சாலும் அதில் சுவாரஸ்யமாக சில நிமிட படம் எடுப்பேன்னு சொன்னவர் கே.பி.சார். அவர் ரசிகர்களின் நாடித் துடிப்பை அறிந்தவர். நிறைய சின்னத்திரை சீரியல்கள் கொடுத்தவர். அவரும் சீரியலுக்கு நேரம் எடுத்துக் கொண்டது அரை மணிதான்.

Barathi Kannamma Serial: அட ச்சே! முத்தம் கொடுப்பதற்குள் எத்தனை கற்பனை?Barathi Kannamma Serial: அட ச்சே! முத்தம் கொடுப்பதற்குள் எத்தனை கற்பனை?

பிரிவு கதையாம்

பிரிவு கதையாம்

மக்கள் ப்ரியா கதை, அவளின் பாசம் இல்லாத பிரிவு கதை, பாக்கியலட்சுமி ரவி காதல் கதையை சொல்ல அரை மணி நேரம் போதாதாம். அதனால் ஒரு வார கதையை சொல்ல ஒரு மணி நேரம் தேவைப்படுகிறதாம். இந்த நவீன காலத்திலும் கதையை சொல்ல தெரிந்த விதத்தில் சொன்னால் ஏன் அரை மணி நேரம் போதாது என்று இயக்குநரிடம் தயாரிப்பாளராக குஷ்பூ கேட்க கூடாதா?

நேரத்தை சுருக்க

நேரத்தை சுருக்க

இயக்குநர் சுந்தர் சி, தான் இயக்கும் படங்களில் இரவு காட்சிகள் வைத்தால் ஊதா கலர் பேப்பரை கேமிராவில் வச்சு படத்தை கொஞ்சமும் லாஜிக் இல்லாமல் பட்டப் பகலில் கொளுத்தும் வெயிலில் எடுத்து இருப்பார். அவரும் படம் பார்க்கும் மக்கள் ரசிகர்களைப் பற்றி கவலைப் படுவதில்லை. அவரை மன்னிக்கலாம். அவரது படத்தில் நகைச்சுவைக்கு மட்டும்தான் அவர் கேரண்டி, வாரண்டி எல்லாம்.

குஷ்பூ டிரண்டா

குஷ்பூ டிரண்டா

சீரியலை ஒரு மணி நேரமாக்கி ஒளிபரப்புவது என்பது குஷ்பூ உருவாக்கின டிரண்டா. திருமுருகன் தனது சீரியலில் எதாவது ஒரு புதுமையை புகுத்துவார். ஆனால், அதுவும் அந்த அரைமணி நேரத்துக்குள்தான்.. இனி இப்படி எல்லாரும் டிரெண்டுன்னு சொல்லி சீரியலின் நேரத்தை ஒரு மணி நேரத்துக்கு இழுத்தடித்தால் மக்கள் எப்படி பார்ப்பார்கள்.அவர்களுக்கு சீரியலை பார்ப்பதைத் தவிர வேறு வேலை இல்லை என்பது போல திட்டமிட்டு உள்ளீர்கள் போலும்.

எதற்கும் திறமை

எதற்கும் திறமை

சீரியலே கதி என்று கிடக்கும் மக்களை பலிகடா ஆக்கும் செயல் என்று, சீரியல்களை எதிர்ப்பவர்கள் பேசிக்கொள்கிறார்கள். சீரியல் ஆர்வலர்களை சீரியலே கதி எனும் அளவுக்கு மாற்றி விடாதீர்கள். ஒரு கவிஞன் ஹைக்கூ என்று இரண்டு வரிகளில் ஒரு கவிதையை சொல்லிவிடவில்லையா? திறமை இருந்தால் எதுவும் சாத்தியம்.ஏற்கனவே சீரியல் சீரியல் என்று குடும்ப பெண்கள் குழந்தை, கணவனை நன்றாக கவனிப்பது இல்லை. இது நிதர்சனமான உண்மை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய கடமையும் அவர்கள் மூலம் சம்பாதிக்கும் நமக்கு உண்டு என்பதை அறிந்து செயல்படுங்கள்.

20-20க்கு மாறுங்கப்பா

20-20க்கு மாறுங்கப்பா

கிரிக்கெட் பக்கம் போனால் டெஸ்ட் போட்டிகளை இழுத்து மூடிட்டு 20-20 போட்டிகளை அதிகரிக்கச் சொல்லி அனத்துகிறார்கள். டிவியில் என்னென்னா ஜவ்வு மிட்டாய் இழுவையை அரை மணியிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு மாத்தி உயிரோடு விளையாட திட்டமிடுகிறார்கள். ப்ரியா பிரிவைப் பத்தியும், ரவி,பாக்கியலட்சுமி கல்யாணத்தை பத்தியும் ஒரு வாரத்தில் தெரிந்துக் கொள்வதை இரண்டு வாரத்தில் தெரிந்துக் கொண்டால் அதில் என்ன தப்பு? ஏதோ பார்த்து செய்யுங்கம்மா!

English summary
Sun TV's Lakshmi Stores Serial will be airing only one hour a day from Monday to Saturday. There is so much story to tell.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X