For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தை பிறப்பு இயல்பாய் நடக்கட்டும்.. அதுக்கு எதுக்கு பிளானிங்?

Google Oneindia Tamil News

சென்னை: திருமணம் என்றாலே அடுத்து குழந்தை பேறுதான்... இதை தள்ளிப் போடுகிறார்கள், கேட்டால் பிளானிங் என்கிறார்கள். அது இயல்பாய் நடக்கட்டும் எதுக்கு பிளானிங்? இது பற்றி எல்லாம் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கிறார்கள்.

வரும் ஞாயிறு அன்று மதியம் 12 மணிக்கு இந்த விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. வழக்கம் போல நிகழ்ச்சியை கோபிநாத் நன்றாக தொகுத்து வழங்கி இருக்கிறார்.

புதுமண தம்பதியர் மட்டும் இல்லாது அனைவரும் பார்த்து பலரின் இதயப் பூர்வமான உண்மை கருத்துக்களை அறிந்துக்கொள்ள நல்ல வாய்ப்பாகவும் இந்த நிகழ்ச்சி இருக்கும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.

 கல்யாணம் குழந்தை

கல்யாணம் குழந்தை

கல்யாணம் செய்து முடித்துக்கொண்டு உங்களின் குழந்தை பிறப்பு பற்றி நீங்கள் என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள் என்று கோபிநாத் கேட்டார். அப்போது ஒரு பெண், கல்யாணம் ஆன பின்னர் குழந்தை பெத்துக்க ஒரு வருஷம் கேப் எடுத்துக்கறதில் தப்பே இல்லை என்று சொன்னார். அந்த ஒரு வருட இடைவெளியில் என்னோட கேரியர்ல நான் ஸ்ட்ராங்கா இருப்பேன், என் ஹஸ்பெண்ட் மற்றும் எனக்குள் நல்ல பாண்டிங் இருக்கும் என்று ஒரு பெண் சொன்னார்.

சாத்துக்குடியை பிழிவியா.. இல்லை.. ரம்யா பாண்டியன் கிட்ட நல்லா வழிவேன்!சாத்துக்குடியை பிழிவியா.. இல்லை.. ரம்யா பாண்டியன் கிட்ட நல்லா வழிவேன்!

 இரண்டு லட்சமாவது இருக்கணும்

இரண்டு லட்சமாவது இருக்கணும்

எனக்கு குழந்தை பிறக்கும்போது அட்லீஸ்ட் என் கையில் ஒரு இரண்டு லட்சமாவது இருக்கணும் என்று ஒரு பெண் சொன்னார். என்கிட்டே இருக்கறதை வச்சு எனக்கு பெஸ்ட் குடுக்க முடியும்னு நினைக்கற ஒரு தாட் உங்களுக்கு இருந்துச்சுன்னா, இந்த பிளானிங் தேவையில்லை என்று ஒரு பெண் ஆணித்தரமாக சொன்னார். பிளானிங் செய்ததால் நேர்ந்த விளைவு குறித்து ஒரு இளைஞர் சொன்னார்.

 பிளானிங்... விளைவு

பிளானிங்... விளைவு

ஒரு வருஷம் குழந்தை வேண்டாம் என்று பிளானிங் செய்தோம், அதன் விளைவாக நாலு வருஷம் குழந்தை இல்லை. அதனால் ரொம்ப வேதனை அனுபவிச்சோம் என்று கூறினார்.அதை சொல்லவே முடியாது என்றும் அவர் மேலும் உணர்ச்சி வசத்தோடு கூறினார். குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது என்பது நல்லதல்ல, அது இயல்பாக எப்போது நடக்கிறதோ, அது படி விட்டுவிட வேண்டும் என்பதுதான் பலர் கருத்தாக இருக்கிறது.

 கல்யாணத்தோடு பிளானிங்

கல்யாணத்தோடு பிளானிங்

கல்யாணம் செய்துக்கொள்வது என்பது எப்படி பிளானிங் படி நடக்கிறதோ, அப்போதே குழந்தைக்கும் சேர்த்து பிளானிங் செய்துக்கொள்வது பலருக்கும் நன்மை தரும். என்னதான் பிளானிங்செய்தாலும், அதிகரித்து வரும் விலைவாசியில் எல்லாருமே அந்தந்த சூழலில் பொருளாதார ரீதியான சவால்களை சந்திக்கத்தான் வேண்டும். என்றாலும் குழந்தை பெற்றுக்கொள்ள பிளானிங் செய்வோம் என்று வாதிடுவதற்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிமை உள்ளது என்பதுதான் உண்மை.

English summary
After marriage, child birth is a problem ... If you put it off, they say planning. Planning for it to happen naturally? They discuss this on Vijay TV's neeya naana.The talk show airs this coming Sunday at 12 noon. As usual, the show is hosted by Gopinath. There is no doubt that this event will be a good opportunity for all newcomers, not just couples, to learn the heartfelt truths of many people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X