For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Roja Serial: முன்னே ராசாத்தி.. இப்போ ரோஜாவுக்கா? இழுவை ஜாஸ்தி தான்!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலுக்கு சன் டிவி வரும் ஞாயிற்று கிழமை அன்று ஸ்பெஷலாக ஒரு மணி நேரத்தை ஒதுக்கித் தந்து இருக்கிறது. முன்பு இதே சன் டிவி ராசாத்தி சீரியலுக்கு இது போல ஞாயிறு அன்று ஒரு மணி நேரத்தை ஒதுக்கித் தந்தது.

சன் டிவியில் இரவு 9:30 மணிக்கு ராசாத்தி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடக்க வேண்டிய கல்யாணம் ரொம்ப இழுவையில் இருந்தது. கல்யாணத்தை நடத்து முடிக்க வேண்டி, கடந்த மாதம் சன் டிவி ராசாத்தி சீரியலுக்கு ஞாயிறு அன்று ஒரு மணி நேரத்தை ஒதுக்கித் தந்தது.

இப்போது ரோஜா சீரியலிலும் அணு, அஷ்வின் கல்யாணம், கல்யாணம் என்று இழுவை தாங்க முடியலை. இதனால் சன் டிவி வரும் ஞாயிறு அன்று ரோஜா சீரியலுக்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்கித் தந்துள்ளது.

ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல், கொஞ்சம் கமர்ஷியல் சீரியல் என்கிற ரகத்தில் அவ்வப்போது சினிமா பாணியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. நச் நச்சென்ற வசனம்,ரோஜா- அர்ஜுன் ஜோடியின் ரொமான்ஸ்..கதையில் அழகான ஹீரோ, ஹீரோயின் என்று இத்தனை பிடித்த அம்சங்கள் இருக்க, ரோஜா சீரியலை அனைவரும் விரும்பிப் பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

கடவுளே.. என்னை காப்பாத்து.. என்னாச்சு இந்த குட்டீஸ்களுக்கு?கடவுளே.. என்னை காப்பாத்து.. என்னாச்சு இந்த குட்டீஸ்களுக்கு?

அனாதை ரோஜாவா, அணுவா

அனாதை ரோஜாவா, அணுவா

அர்ஜுன் ஆசைப்பட்டு கல்யாணம் செய்துக்கொண்டு வந்த பெண்தான் அந்த வீட்டு செண்பகத்தம்மா பொண்ணா, இல்லை அணு தன சொல்லிக்கொண்டு திரியற மாதிரி அவள்தான் செண்பகத்தம்மா பொண்ணா எனறு சீரியல் கதை இத்தனை சந்தேகத்தின் அடிப்படையில்தான் சென்றுக்கொண்டு இருக்கிறது.அணு பொய் சொல்கிறாள் என்று தெரிந்தும் அதை நிரூபிக்க அர்ஜுனும், ரோஜாவும் போராடி வருகிறார்கள்.

இழுவை ஜாஸ்தி

இழுவை ஜாஸ்தி

இப்படி சீரியலின் கதை இழு இழு என்று இழுத்துக்கொண்டே ஜவ்வு மாதிரி கதை போவதை சன் டிவியாலுமே தாங்கிக்கொள்ள முடியவில்லை போலும். இந்த இழுவையை ஒரு மணி நேரத்தில் முடித்து வைத்து, பின்னர் சீரியல் கதையை வழக்கம் போல தொடரட்டும் என்று நினைத்த சன் டிவி வரும் வாரம் ஞாயிற்று கிழமை 9:30 மணி முதல் 10:30 மணி வரை சிறப்பு நேரத்தை ஒதுக்கித் தந்து இருக்கிறது.

 ஞாயிறுக்கு பிறகாவது

ஞாயிறுக்கு பிறகாவது

ஞாயிறு அன்று ஒதுக்கித்தர இருக்கும் அந்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகாவது ரோஜா சீரியல் அணு அஷ்வின் கல்யாணம், அணு செண்பகத்தம்மா பொண்ணு இல்லை, ரோஜாதான் செண்பகத்தம்மா பொண்ணு என்று உண்மையை சொல்லிவிட்டு, இழுவை இல்லாமல் சீரியலை கொண்டு போகுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

ஞாயிறு டபுள்ஸ்

ஞாயிறு டபுள்ஸ்

சன் டிவி வழக்கமா அந்த நேரத்தில் ஞாயிறு டபுள்ஸ் என்று அறிவித்து, இரு படத்தை ஒளிபரப்பி வரும். கடந்த முறை ராசாத்தி சீரியலுக்கு இப்படி நேரத்தை ஒதுக்கித் தந்தபோது, சன் டிவியின் அந்த நாளில் ஞாயிறு டபுள்ஸ் இல்லை. மாறாக சன் குடும்ப விருதுகள் விழாவை ஒளிபரப்பி மீதம் இருந்த ஒரு மணி நேரத்தை ராசாத்தி சீரியலின் சிறப்பு ஒளிபரப்புக்கு ஒதுக்கித்தந்தது.

English summary
Sun TV is giving away an hour of specials to Sun TV's Rose Serial on Sunday. Earlier, the same Sun TV set aside an hour for rasathi serial on Sunday.Sun TV has set aside an hour for the roja serial this coming Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X