For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆத்தாடி பாவாடை காத்தாட... எல்கேஜி பாலாஜியின் மனசை அள்ளிய ராசா!

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி, இப்போது எல்.கே.ஜி பாலாஜின்னு சொன்னாதான் சுலபமாக ரீச் ஆகிறார். இவர் கலைஞர் டிவியின் சிறப்பு நேர்காணல், மற்றும் சன் டிவிடியின் சன் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அண்மையில் இவர் எழுத்தில் என்று சொல்வதை விட இவரது கோபத்தில் இவரே உருவாக்கின படம் எல்.கே.ஜி. சிறப்பான வெற்றிதான், அதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அமுங்கிக் கிடந்த கோபத்தை வெளிப்படுத்திய படம் இது.

அந்த கோபத்தை அவங்க அப்படி வெளிக்காட்டுவாங்க, இவங்க இப்படி வெளிக்காட்டுவாங்கன்னு நம்மில் பலரும் சும்மாவே இருந்தோம். அந்த அவங்க இவங்கள்ல ஒருத்தரா வெளிவந்தவர்தான் நடிகர் பாலாஜி.

என்ன அண்ணாச்சி.. இப்படி அரைகுறையா பேசிட்டு போனா எப்படி அண்ணாச்சி!என்ன அண்ணாச்சி.. இப்படி அரைகுறையா பேசிட்டு போனா எப்படி அண்ணாச்சி!

நாங்க சென்னையில

நாங்க சென்னையில

வாழ்க்கையில நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். எனக்கு கிடைச்சது சொற்ப சம்பளம்தான், அதுல அம்மா, கோவையிலன்னும், நானும் மனைவியும் சென்னையிலன்னும் வாழ்க்கை. சிக்கனமா வாழ்ந்துகிட்டு இருந்தோம்.

நடத்தினவங்க

நடத்தினவங்க

ஆர்.ஜேவாக இருந்தப்போ நான் கூப்பிட்டு வச்சு நிகழ்ச்சி நடத்தினவங்க எல்லாம் என்னைவிட பெரிய ஆளா வந்து நிக்கும்போது, என்னடா நாம அடுத்த அடி வைக்காம இருக்கோமேன்னு யோசனை வரும்.

கோபம் கொப்பளிப்பு

கோபம் கொப்பளிப்பு

இடையில் படங்கள் நடிச்சுக்கிட்டு இருந்தப்போ. ஓரளவு குடும்பத்தை சமாளிக்க முடிஞ்சுது. இப்படியே போயிடலாம், கொஞ்சம் சமூக அக்கறையும் எடுத்துக்கலாம்னு முடிவு செய்தப்போதான், சமீப கால அரசியல் நிகழ்வுகள் எனக்குள்ள கோபத்தை கொப்பளிக்க வச்சுது.

கடன்காரனாகிடுவ

கடன்காரனாகிடுவ

நண்பர்கள் கிட்ட எல்.கே.ஜி படத்தை எடுக்க போறேன்னு சொன்னப்ப, எப்படிடா முடியும், கடன்காரனாகிடுவன்னு சொன்னாங்க. ஆனா, என்னால காம்ப்ரமைஸ் ஆக முடியலை. துணிச்சலா இறங்கினேன். இப்போ ரொம்ப பணம் பார்க்கலைன்னாலும்,சந்தோஷத்துல இருக்கேன்னு சொன்னார்.

எவர் கிரீன்

எவர் கிரீன்

சந்தோஷமோ, துக்கமோ., சோகமோ இளையராஜா பாட்டுத்தான் முணுமுணுப்பேன். இன்னும் கூட அடிக்கடி முணுமுணுக்கும் பாட்டு பூவிலங்கு படத்துல முரளி சார் நடிச்ச "ஆத்தாடி பாவாடை காத்தாட.. காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட'" பாடலைத்தான்.

ரசிகர் மன்ற தலைவர்

ரசிகர் மன்ற தலைவர்

சன் சிங்கர் நிகழ்ச்சியில் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலை ஒரு சிறுமி பாட, அப்போது பாலாஜி, எனக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்கும். நெப்போலியன் சார் டான்ஸ் சூப்பரா ஆடி இருப்பார். அப்போ நான் நெப்போலியன் ரசிகர் மன்ற தலைவரா இருந்தேன். அதுக்கப்புறம் ராம்கி ரசிகர் மன்ற தலைவர் .. இப்போ.. என் ரசிகர் மன்ற என்று பாதியில் நிறுத்தி சிரித்தார்.

English summary
RJ Balaji, now LKG Balajin is easy to reach. She was a special interviewer for kalaignar TV, and participated in Sun TV's Super Singer show and shared many things.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X