• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Rasaathi Serial: பாண்டியனை மனசுல நினச்சவள் தலையில மாதவனை கட்டிடாய்ங்களே!

|

சென்னை: சன் டிவியின் ராசாத்தி சீரியலில் மேனா மினுக்கி மேனகா பாண்டியனைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்னு அழிச்சாட்டியமா எத்தனையோ கெட்ட காரியங்களை செய்தாள். பாண்டியன் ராசாத்தி லவ்வை பிரிக்க நினைச்சு.. அவனை மயக்க என்னென்னவோ செய்தும் கண்ட பலன் ஒன்னும் இல்லை.

சரி.. டிராமா குயினா மாறி டிராமா போட்டா.. பாருங்க அவ விரிச்ச வலையில் அவளே விழுந்துட்டா.இப்போ பாண்டியனை நினைச்ச அவளுக்கு மாதவனை கட்டி வச்சுட்டாய்ங்க. மேனகா போட்ட நாடகம் பலிக்கலை, இளவரசி சவுந்திரவல்லி போட்டத் திட்டம் பலிச்சுருச்சு.

வீட்டுக்குள்ளே தானே தீயை வச்சுக்கிட்டு ஐயோ அம்மான்னு அலறினா பின்னே நல்லதா நடக்கும். இப்போ பாருங்க கண்ணீர் விட்டு ஏமாற்றத்துல மேனகா நிக்கறா. இருந்தாலும், அவ கெட்ட புத்தி இன்னும் கேடு நினைக்குது...

பாண்டியன் ராசாத்தி

பாண்டியன் ராசாத்தி

ராசாத்தி சீரியலின் ஹைலைட்டே ராசாத்தி கதாபாத்திரம்தான். இவ குடும்ப பாசம் அதிகம் உள்ளவ. ஜமீன் குடும்பத்தில் பிறந்த ராசாத்தி, அண்ணன் பேச்சை தட்டக் கூடாதுன்னு அண்ணி சொல்றபடி எல்லாம் ஆடும் அண்ணனின் பேச்சை கேட்டே வீணாகிப் போகிறாள். இதனால் பாண்டியனுடன் நடக்க இருக்கும் இவளின் திருமணம் தள்ளித் தள்ளிப் போகிறது.

அண்ணி ஜெயிலுக்கு

அண்ணி ஜெயிலுக்கு

ஒரு வழியா சிந்தாமணி அண்ணி ராசாத்தியின் மூத்த அண்ணன் நடிகர் விஜயகுமாரை கொலை செய்துவிட்ட வழக்கில் ஜெயிலுக்கு போயிடறாங்க. இனிமே ராசாத்தி கல்யாணம்தான்னு நினைச்சால், முதலில் கோயில் திருவிழாவாம். அடுத்து ராசாத்தி கல்யாணமாம். இந்த சீரியல் ஆரம்பிச்சதே கோயில் திருவிழா மோதலில்தான். இப்போது கோயிலில் மற்றும் ஒரு திருவிழா.

பாம்பு மணி

பாம்பு மணி

பாம்பு மணி அடிச்சு கோயில் திருவிழாவை ராசாத்தி நடத்தலாம் என்று வாக்கு கொடுத்துருச்சு. முதலில் கோயில் திருவிழா அடுத்து ராசாத்தி பாண்டியன் கல்யாணம் என்று பெரியோர் முடிவெடுக்க, இந்த கல்யாணம் நடக்காது... கோயில் திருவிழா நடக்கட்டும்.. அதற்குள் நான் பாண்டியனை கரெக்ட் பன்றேன்னு சொல்லிட்டு, மேனகா செம்புள்ளி வீட்டுக்குள்ளே போயி தீகுச்சி வச்சு கொளுத்திட்டா.

காப்பாத்தினது மாதவன்

காப்பாத்தினது மாதவன்

ஐயோ அம்மா தீன்னு கத்தினா பாண்டியன் காப்பாத்த வருவான்.. நாம் அப்போ என்னை காப்பாத்தின பாண்டியன், என்னை முழுசுமா பார்த்துட்டான்.. இனிமே என்னை யாரு கல்யாணம் செய்துக்குவான்னு ஊரைக் கூட்டினா, பாண்டியன் கூட கல்யாணம் நடந்துரும் என்று கணக்குப் போட்ட மேனகாவின் கணக்கு பொய் கணக்கானது. காப்பாத்தினது பாண்டியன் இல்லை மாதவன்னு குய்யோ முய்யோன்னு ஊரைக் கூட்டிய பின்னர் தெரியுது.

இளவரசி சவுந்திரவல்லி

இளவரசி சவுந்திரவல்லி

இளவரசி சவுந்திரவல்லி ரொம்ப கூலா சரி மேனகா நீ அழாதே.. என் தம்பிக்கே உன்னை கல்யாணம் செய்து வைக்கறேன்னு தாலியை எடுத்துக்கிட்டு வந்து, மாதவா இதை மேனகா கழுத்தில் கட்டுன்னு சொல்றாங்க. விக்கித்துப் போன மேனகா.. என்னை காப்பாத்தினது பாண்டியன்னு சொல்ல, இல்லை மாதவன்னு சொல்றாங்க கூட்டத்தில் எல்லாரும். மேனகா நீங்க பொய் சொல்றீங்கன்னு கத்தறா. வேணும்னா உன் அண்ணனையே கட்டுப் பாரு.. அவர் வீடியோவே எடுத்து வச்சு இருக்கார்னு சொல்றான் பாண்டியன்.

வேற வழி?

வேற வழி?

வேற வழி இல்லாம மாதவன் தாலி கட்ட மேனகா சம்மதிக்கிறாள்... சரி மேனகா கேரக்ட்டயர் இனி திருந்திருச்சுப்பான்னு நினைச்சால், விளக்கேத்து மேனகா.. இந்த வீடு உன் வருகையால் இன்னும் வெளிச்சமாகட்டும்னு சவுந்திரவல்லி சொல்ல, அப்போ மைட் வாய்ஸ்.. நான் எப்போ இந்த வீட்டுக்குள்ளே வந்தேனோ அப்பவே இந்த வீடு இருட்டாயிருச்சு.. இன்னும் என்ன செய்யப்போறேன்னு பாருங்கன்னு சொல்றா.

ஸ்ஸ்.. அப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதுங்க!

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
The highlight of the rasati serial is the rasati character. They have a lot of family affection. Rasati, born in the family of the zamine family, her brother's speech should not be tarnished. Her marriage with Pandiyan has been postponed.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more