For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொசு கடிக்குதா... மதுரை முத்துவின் இந்த காமெடி ஓகேவா?

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் லொள்ளுப்பா நிகழ்ச்5சியில் முத்து ஆதவன் இடை இடையே ஜோக் சொல்ல, பலரும் இந்த நிகழ்சசியில் கலந்துக்கறாங்க

நடுவர்களாக எவர் கிரீன் நடிகை மீனா, நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் ஜட்ஜ் பண்றாங்க.

நடிகை மீனா நகைச்சுவை நிகழ்ச்சியை மிகவும் ரசித்து சிரிப்பது பார்க்க நல்லாத்தான் இருக்கு.

madurai muthu idea to beat mosquitos

இதுல மதுரை முத்துவின் ஒரு காமெடி...கொசுக் கடிச்சா என்ன செய்யலாம்.. உடம்பு பூரா மிளகாய் தூள் தடவிக்கிட்டு படுத்துக்கணும்.

கொசு வந்து கடிக்கும்போது அதுக்கு காரமா இருக்கும்.உடனே தண்ணி குடிக்க ஓடும். அப்போ அது பின்னாலேயே போயி,கொசுவை அண்டாவுல தள்ளி விட்டுடணுமாம்.. கொசு செத்து போச்சுன்னா எப்படி கடிக்கும்... இது எப்படி இருக்கு?

எந்த மனுஷன் கட்டின பொண்டாட்டியை ஆயுள் முழுக்க சந்தோஷமா வச்சுக்கறானோ அவன் வாழ்க்கையில ஐம்பது சதவிகிதம் சந்தோஷமா இருப்பான்னு சொல்ல, மதுரை முத்து அப்போ ரெண்டு கல்யாணம் செய்துகிட்டு, நூறு சதவிகிதம் சந்தோஷமா இருக்கலாமேன்னு சொல்றார்..

முதலில் ஜன்னலுக்கு பின்னால பெண்கள் இருந்தாங்க.. இப்போ பெண்களுக்கு பின்னால ஜன்னல் இருக்கு. அதுக்கு ஒருத்தன் கதவு வச்சுட்டு போறான்.ஒ ருத்தன் பெயிண்ட் அடிச்சுட்டு போறான். இன்னொருத்தன் வந்து ஸ்க்ரீன் போட்டுட்டு வேணும்கறப்போ திறந்துக்கலாம்... வேணாம்னா மூடிக்கலாம்னு சொல்லிட்டு போறான்னு மதுரை முத்து சொல்றார்.

அதுல கலந்துக்கிட்ட கண்ட்ஸ்டெண்ட் சொல்றாங்க.. பெண்கள் ஜக்கெட் இல்லாம சுத்தினது அந்த காலம்.. ராக்கெட்டுல சுத்தறது இந்த காலம்னு ஒரு பன்ச்.

தமிழ்நாட்டுலதான் யார் செத்தாலும் மர்மமாவே இருக்கு...நம்ம நாட்டுலதான் உயிருக்காக போராடினாலும், உரிமைக்காக போராடினாலும் காணாம போயிடறாங்க...

நம்ம நாட்டுல ஓடி ஜெயிச்சாலும், ஓடி ஓடி உழைச்சாலும் ஒண்ணுமே தரமாட்டாங்க போன்ற கண்டெஸ்டண்ட் பன்ச் நல்லா இருந்தது.

இப்படி லொள்ளுப்பா நிகழ்ச்சி நல்ல கலகலப்பா இருக்கு..!

English summary
To tell joke between Muthu Adhavan Inter at Sun TV's lollupa many will attend this event
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X