For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Magarasi Serial: குழந்தையை தாண்டச் சொல்றாய்ங்களேப்பா... முந்தானை முடிச்சு சீனு!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் மகராசி சீரியலில் என்னடா இது பாரதிக்கு வந்த சோதனை என்பது போல, பாரதி அந்த வீட்டு மருமகள்தானா என்று குழந்தையை கீழே போட்டு தாண்ட சொல்றாங்க அந்த வீட்டு ஒல்லியான வில்லி.

மகராசி சீரியல் சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகுது. மகராசி சீரியலை ஆரம்பத்தில் ஆன்மீக விரும்பிகள் கூட பார்க்க ஆரம்பித்தனர்.

இப்போதும் இந்த சீரியல் ஆன்மீகவாதிகளின் சின்ன எதிர்பார்ப்பில் சென்று கொண்டு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆன்மீக வாதிகள் எதற்கு?

ஆன்மீக வாதிகள் எதற்கு?

மகராசி சீரியலை ஆன்மீக வாதிகள் எதற்கு பார்க்க ஆரம்பித்தார்கள் என்றால், சீரியல் ஆரம்பிக்கும் முன்னர் ப்ரோமோவில் ஹரித்துவாரில் கதை துவங்குவது போல காண்பித்தார்கள். ஆரம்ப சில எபிசோடுகளும் ஹரித்வாரின் அழகை எடுத்துக் காண்பிப்பதாகவே இருந்தது. உத்திரகன்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரில் கங்கை நதியின் நடுவில் பெரிய சிவன் சிலை அனைவருக்கும் பிடித்த ஒன்று. இந்த இடத்தை இன்னும் கூட அடிக்கடி காண்பித்து வருகிறார்கள்.

Barathi Kannamma Serial: வெண்பாவின் சித்து விளையாட்டு சித்தருக்கே தெரியலையா?Barathi Kannamma Serial: வெண்பாவின் சித்து விளையாட்டு சித்தருக்கே தெரியலையா?

இன்னும் ஃபிளாஷ் பேக்கில்

இன்னும் ஃபிளாஷ் பேக்கில்

இன்னும்கூட ஃபிளாஷ் பேக்கில் ஹரித்த்வாரை காண்பிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் பலர் எதிர்பார்த்து வருகின்றனர். இதை சீரியல் எடுப்பவர்கள் உணர்ந்துக்கொண்டு அவர்களின் ஆசையை நிறைவேற்றுவது போல ஹரித்துவார் காட்சிகளை நீட்டித்தால் நன்றாக இருக்கும். இப்போதெல்லாம் சீரியல்களில் வித்தியாசமான லொக்கேஷன்களை காண்பிப்பதைத்தான் விரும்புகிறார்கள். கதையில் அந்த மாதிரி வாய்ப்பு இருக்கும்போது அதை பயன்படுத்தி இந்த மாதிரி லொக்கேஷன்ஸ் காண்பிக்கலாமே!

ஒல்லியான வில்லி

ஒல்லியான வில்லி

மகராசியில் ஒல்லியான வில்லியாக பாரதிராஜா கிழக்குச் சீமையிலே படத்தில் அறிமுகப்படுத்திய நடிகையான அஷ்வினி நடிச்சு இருக்கார். இவர் அதிகம் பேசுவதும், தேள் கொடுக்கு போல வார்த்தைகளால் கொட்டுவதும் என்று நன்றாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு. இப்போது சின்னத் திரையிலும் விருது வாங்க போட்டி போட்டுக்கொண்டு ஆளாளுக்கு நடிக்காத துவங்கி இருக்கிறார்கள். அவார்ட் கேட்டகிரி வேறு வில்லி, இளம் வில்லி என்று பல வாய்ப்புக்களை தருகிறது.

குழந்தையை தாண்ட

குழந்தையை தாண்ட

ஹரித்துவாரில் இருந்து தமிழரசன் கையில் குழந்தையுடன் வரும்போது ரயிலைப் பிடிக்க ஓடிவந்த பாரதிக்கு கைக்கொடுக்கிறான். அவள் சிதம்பரம் வரை வந்துவிட, சிதம்பரத்தில் தமிழை அழைக்க வந்தவங்க, பாரதியை தமிழின் பொண்டாட்டின்னு நினைச்சுக்கறாங்க. ஆனால், பாரதி தமிழின் காணாமல் போன அண்ணன் புவியின் பொண்டாட்டின்னு தெரிய வருது.இந்த வீட்டு மருமகள்தான்னு ஒல்லியான வில்லி, குழந்தையை கீழே போட்டு தாண்டி நிரூபின்னு சொல்றாங்க. இதைத்தாங்க முந்தானை முடிச்சு சீனுன்னு சொன்னோம்.

English summary
If the spiritualists began to see the serial of Maharashi, the serial would have begun to appear in the Promo Haridwar. Some of the episodes of Aramabha were meant to highlight the beauty of Haridwar. A huge idol of Lord Shiva in the middle of the Ganga River in Haridwar, Uttarakhand. They are showing this place even more frequently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X