For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Naam Iruvar Namakku Iruvar Serial: எந்த காலத்துல இருக்கீங்க கதாசிரியர் சார்?

Google Oneindia Tamil News

Recommended Video

    Naam Iruvar Nammakku Iruvar: மாயன் தேவி காதல் கதை

    சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஆனந்திக்கு அபார்ஷன் செய்ய ஆண் மருத்துவர் நியமிக்கறாங்க.

    இது தவறோ சரியோ...கதாசிரியர் எந்த காலத்துல இருக்கார்? எவ்ளோ பெரிய சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுப்பதை கூட பெண் மருத்துவ நிபுணர்கள் மட்டுமே செய்யும் காலம் இது.

    நார்மல் பிரசவத்துக்கே கூட சர்வ சாதாரணமாக பெண் மருத்துவர்கள் உலா வரும் காலத்தில், அபார்ஷனுக்கும் இப்படித்தான் நிலைமை.இப்போது போய் ஆண் மருத்துவர் அபார்ஷன் செய்கிறாராம்.

    கதையில் புதுமை

    கதையில் புதுமை

    கதையில புதுமை கொண்டு வாங்கன்னு சொன்னா, கார்த்திக் தன் பொண்டாட்டி ஆனந்திக்கு, மாயனுக்கு போட்டியா அபார்ஷன் பண்ண நினைக்கிறானாம். சரி.. இது உங்க கதைக்குத் தேவை.. அபார்ஷன் செய்ய ஒரு ஆண் டாக்டர்கிட்டே கூட்டிட்டு போறான் கார்த்திக். ஆனால் இப்போது தேடினாலும் ஆண் மருத்துவர்கள் அபார்ஷன் செய்ய கிடைக்க மாட்டார்கள் அது தெரியுமா? கட்டாயத்துக்குத்தான் கிடைப்பார்கள். வேணும்னா இந்த லேடி டாக்டரை பாருங்கள், அந்த லேடி டாக்டரை பாருங்கள் என்று பரிந்துரை செய்வார்கள்.

     எல்லா வசதியும்

    எல்லா வசதியும்

    மருத்துவத் துறையில் எல்லாருக்கும் எல்லா வசதியும் கிடைத்துவிட்ட காலம் இது. எந்த பெண்களும் இது போன்ற விஷயங்களுக்கு ஆண் மருத்துவர்களை நாடிச் செல்வதில்லை. அதுவும் அபார்ஷன் போன்ற விஷயங்களுக்கு ஆண் மருத்துவர்களை விட பெண் மருத்துவர்களிடம் மட்டுமே பாதுகாப்பாக உணர்கின்றனர்.

     எதுவும் தெரிஞ்சுக்கறது

    எதுவும் தெரிஞ்சுக்கறது

    எதுவும் தெரிஞ்சுக்கறது இல்லை.. நாட்டு நடப்போடு ஒத்துப் போறது இல்லை.நீங்களா நினைப்பதுதான் நாட்டு நடப்பு, நீங்களா எழுதறதும், ஷூட் செய்வதும்தான் மக்களின் அன்றாட வாழ்வியல் கதை.கொஞ்சமாச்சும் இறங்கி வந்து பாருங்க. இதெல்லாம் நடைமுறையில் இருக்கு.. இதெல்லாம் மக்கள் விரும்பம்னு தெரிஞ்சுக்கிட்டு கதை எழுதுங்க.

     வீட்டை கவனிச்சாலே

    வீட்டை கவனிச்சாலே

    வீட்டை கவனிச்சாலே போதுமே.. வீட்டு மனிதர்களை வேற்று மனிதர்களா பார்த்துக்கறது. மக்களை முட்டாளா நினைக்கறதா? எந்த பொண்ணு ஆண் மருத்துவர் கிட்டே இன்னிக்கு அபார்ஷன் பண்ண நிப்பாங்க? அழைச்சுக்கிட்டு போறதுதான் போறே.. ஒரு லேடி டாக்டர்கிட்டே கூட்டிட்டு போன்னு சொல்ல மாட்டாளா?

    லேடி டாக்டர்னு ஒரு வசதியை இந்த சமூகம் எதுக்குங்க குடுத்து இருக்கு? அதை கெடுத்து நீங்க மேல் டாக்டர்கிட்டே இதை செய்துக்கலாம்னு வழி காட்டறீங்களா?

    English summary
    We have two of Vijay TV's male Abortion. to appoint Anandi in the serial. Is this right or wrong ... at what time is the author? This is a time when only female medical professionals can even carry a baby with a large cesarean section. Normal delivery is a common practice among female doctors. The situation is similar to Abortion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X