
மக்கள் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட மணிமேகலை...அந்த ஒரு வார்த்தைக்காக கோபத்தில் ரசிகர்கள்
சென்னை: மணிமேகலை தன்னுடைய கணவருடன் பெங்களூருக்கு சென்றிருக்கும் நேரத்தில் நடந்த செயல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மணிமேகலை சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக ரசிகர்கள் தற்போது அவருக்கு அதிகமாக அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்காக இன்று முதல் விண்ணப்பம் - வயது வரம்பு.. என்னென்ன தகுதிகள்

தொகுப்பாளராக அறிமுகம்
சின்னத்திரையில் தொகுப்பாளராக பலருக்குப் பரிச்சயமான மணிமேகலை தற்போது சமூக வலைதளத்தில் செய்த செயல் பலரையும் இவர் மீது அன்பு கோபம் பட வைத்து இருக்கிறது. இவர் மீது அதிகமான பாசத்தில் இருக்கும் ரசிகர்கள் கூட தற்போது மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் இப்படி ஒரு செயலை செய்யலாமா என்று பலர் இவரிடம் செல்லமாக சண்டையையும் தொடங்கியிருக்கிறார்கள் .

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் பலருக்கும் பரிச்சயமான மணிமேகலை சமூக வலைத்தளத்திலும் சளைத்தவரல்ல என்று ஆக்டிவாக இருந்துவருகிறார். அதுமட்டுமல்லாமல் யூடியூப் சேனல்களிலும் இவர் செய்யும் குறும்புகளையும், தன்னுடைய கணவருடன் வெளியே செல்லும் இடங்களில் நடக்கும் சேட்டைகளையும் பதிவிட்டு வருவது இவருடைய வாடிக்கையாக இருந்து வருகிறது. அதனால் அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள். அவருடைய கணவர் ஒரு டான்ஸ் மாஸ்டர் ஆக இருப்பதால் இருவரும் அவரவர் துறையில் பிஸியாகத்தான் இருந்து வருகின்றனர்.

வெளியிட்ட புது வீடியோ
மணிமேகலை என்ன தான் பிஸியாக இருந்தாலும் கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் கூட தன்னுடைய கணவருடன் அடிக்கடி வெளியே சென்று விடுவது வழக்கம் தான். அந்த மாதிரிதான் தற்போது பெங்களூர் சென்றிருக்கிறார். சென்ற இடத்தில் வழக்கம்போல ரீல்ஸ் வீடியோக்களையும், போட்டோக்களையும் மணிமேகலையும் அவருடைய கணவரும் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று இவர் கையில் ஜூஸ் டம்ளர் வைத்துக்கொண்டு மக்கள் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.

ரசிகர்கள் கோபத்திற்கான காரணம்
மக்கள் வெள்ளத்தில் மணிமேகலை மாட்டிக் கொண்டாலும் ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிக்காட்டும் விதமாக இந்த வீடியோவை ஷேர் செய்து, அதில் ஐ லவ் பெங்களூர் மக்கள் என்று இவர் டைப் செய்துள்ளார். இதுதான் தற்போது ரசிகர்களை இவர் மீது கோபப்பட வைத்துள்ளது. இவர் இப்படி சொன்னதும் அப்போ எங்க ஊருக்கு வாங்க என்று மதுரைக்காரங்க ஒருபக்கம் இவரிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும்போது, கேரளாக்காரர்கள் ஒருபக்கம் எங்க ஊருக்கு வந்து பாருங்க எங்க அன்பு தெரியும் என்று இவரிடம் சண்டை இழுத்து வருகிறார்கள். இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு ஊர்களிருந்தும் தங்கள் ஊருக்கு வந்து பாருங்கள் அப்போதுதான் எங்களுடைய அன்பு உங்களுக்கு தெரியும் என்று இவரை விருந்துக்கு அழைத்து வருகிறார்கள்.