For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

16 வயதினிலே கமல் வாய்ஸை.. திமிருக்காக பயன்படுத்தி கலக்கினேன்.. மயில்சாமி கலகல

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் லொள்ளுப்பா நிகழ்ச்சி ஞாயிறு தோறும் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகுது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு நடுவர்களாக நடிகை மீனா, நடிகர் மயில்சாமி வந்திருந்தனர்.

சில நாட்களுக்கு முன்புவரை நடிகை ரோஜா, நடிகர் மதன்பாப் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு நடுவர்களாக இருந்து வந்தனர். வழக்கம் போல ஆதவன், முத்து இவர்கள் காமெடியும் உண்டு.

 Mayilsamy shares interesting info on Kamal voice

டச்சிங்.. டச்சிங்.. சீரியஸ் சீரியலில் பிரதர் சென்டிமென்ட்ஸ்! டச்சிங்.. டச்சிங்.. சீரியஸ் சீரியலில் பிரதர் சென்டிமென்ட்ஸ்!

மயில்சாமி பேசும்போது, சண்டை காட்சிகளுக்கு விஜயகாந்த், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற பிரபல நடிகர்களுக்கு ஆ..ஊ...ம்ம்.. இந்தா வாங்கிக்க.. இதுபோல நடிகர்கள் பேசுவதற்கு நடிகர் மயில்சாமி குரல் கொடுப்பாராம்.

அப்போதெல்லாம் சண்டை காட்சிகளில் நடிகர்களின் குரல்களில் இது போல சப்தங்கள் வருவதுண்டு. இப்போது சண்டை காட்சிகளுக்கு நடுவில் வசனமாகவே அதாவது.. வாடா.. வாடான்னு கத்தறது.. இதுபோல நடிகர்களே பேசி விடுகிறார்கள்.

இப்போதும் சில சண்டை காட்சிகளுக்கு இதுபோல டப்பிங் தேவைப்படுவதும் உண்டாம். திமிரு படத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் போகும் வண்டியை தடுப்பது போன்ற ஒரு காட்சி. பைக் ஓட்டியவர் நிற்காமல் செல்ல, மாற்றுத் திறனாளியை வண்டி இழுத்து செல்லும்.

இந்த காட்சிக்கு மாற்றுத் திறனாளியின் குரலுக்கு டப்பிங் குடுக்க சொன்னாங்க. எனக்கு 16 வயதினிலே படத்தில், மயிலை பரட்டை கெடுக்க முயற்சிக்கும் சீனில், சப்பாணி கேரக்டரில் நடித்த கமல் சார், ரஜினி சார் மேல கலாய்த்த தூக்கிப் போட ஒரு மாதிரி கத்திக்கொண்டே கல்லை தூக்கிப் போடுவார்.

இந்த குரல் எனக்கு அத்துப்படி, அந்த காலத்துல பல முறை இந்த படத்தை நான் பார்த்திருக்கேன். அதே குரலை இங்கு நான் பயப்படுத்திக் கொண்டேன் என்கிற சுவாரஸ்யத் தகவலை கூறினார். மயில்சாமி சூப்பர் மிமிக்ரி கலைஞர். ஆனால், பொது இடங்களில் அவர் அவ்வளவாக பேசுவதில்லை.

English summary
Sun TV's Lollupa Show is broadcast on Sundays at Sundays. Actress Meena and actor Mailsamy had come up with special arrangements for this event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X