தாவணி போட்ட தீபாவளி வந்தது இன்ஸ்டாகிராமுக்கு...முதல் நாளில் மீரா ஜாஸ்மினுக்கு குவியும் ஆதரவு
சென்னை: முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள மீரா ஜாஸ்மினுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
வந்துட்டேன்னு சொல்லு...திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..என்று சொல்லும் டயலாக் மீரா ஜாஸ்மின் தற்போது வேற லெவல் செட் ஆகி உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த வாரம் ஞாயிறு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை? காரணம் இதுதான்.. முழு பின்னணி

இன்ஸ்டாகிராமில் இணைந்த மீரா ஜாஸ்மின்
வெள்ளித்திரையில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கும் மீராஜாஸ்மின் தற்போது சமூக வலைத்தளத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். முதல்முறையாக இவர் இன்ஸ்டாகிராமில் தற்போது இணைந்துள்ளார். இணைந்த முதல் நாளில் இவருக்கு 105 கே பாலோவர்ஸ் கிடைத்துள்ளனர். சினிமாக்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும்போது இவர் டிரடிஷனல் உடையிலும், மாடர்ன் உடையிலும் ரசிகர்களை கவர்ந்து வந்தார் .அதற்கு பிறகு சில நாட்களுக்கு சினிமாவிலிருந்து இவர் விலகி இருந்து தற்போது மீண்டும் ரசிகர்களின் முன்பு தோன்றி அதிசயம் கொடுத்திருக்கிறார்.

கண்களுக்கு அகப்படாத காரணம்
பொதுவாக நடிகைகள் என்றாலே ரசிகர்களின் கண் முன்பு அடிக்கடி வந்து கொண்டிருந்தால் தான் ரசிகர்கள் நினைவில் வைத்துக் கொள்வார்கள். இதை பலர் புரிந்து கொண்டுதான் வெள்ளித்திரையில் வாய்ப்பு இல்லை என்றாலும் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து தங்களை பிஸியாகவே வைத்து வருகிறார்கள். ஆனால் மீரா ஜாஸ்மின் திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்த சில காலங்கள் ரசிகர்களின் கண்களுக்கு அகப்படாமல் இருந்தார். உடல் எடை அதிகரித்து இவர் திடீரென்று மாற்றமடைந்தது இவர் உடைய தீவிரமான ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

இதுதான் வேற லெவல் மாற்றம்
தற்போது பல நாட்களுக்கு பிறகு இவருடைய போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இவருடைய லேட்டஸ்ட் கெட்டப் பார்த்து பல பேர் அடையாளம் தெரியாமல் சூம் செய்து பார்த்து வருகிறார்களாம். அந்த அளவிற்கு இளம் கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்கள் மாறி இருக்கிறது. உடல் எடையை குறைத்து மாடர்ன் உடையில் கன்னாபின்னாவென இவர் போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார். அந்த போட்டோக்களை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் மீண்டும் வந்துவிட்ட இவருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறார்கள்.

அதிகரிக்கும் லைக், கமெண்ட்கள்
இன்ஸ்டாகிராமில் இவர் கால் பதித்த நேரம் இவருக்கு தற்போது மீண்டும் சினிமாக்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று ரசிகர்கள் கருத்து கணிப்புகளை கூறியிருக்கின்றனர். இவருடைய லேட்டஸ்ட் கெட்டப் பார்த்ததும் பலர் வாயடைத்து போய் இருந்தாலும், தாவணி போட்ட தீபாவளி வந்தது இன்ஸ்டாகிராம்க்கு...வந்த முதல் நாளே ரசிகர்களின் மனதை அள்ளுகிறது... என்று கவிதைகளையும் பொழிந்து வருகிறார்கள். இவர் இன்ஸ்டாகிராமில் 2 போஸ்ட்கள் மட்டுமே போட்டிருக்கும் நிலையில் இவருக்கு லைக்கும் கமெண்டும் மட்டும் மலைபோல உயர்ந்து கொண்டே போகிறது.