For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு வாரம் கூட வீட்ல இருக்கோம் மோடிஜி... ஆனா இது மட்டும்...கொல்றாய்ங்கய்யா!!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவைரஸ் பரவாமல் கட்டுக்குள் இருக்க நாளை ஞாயிறு ஒரு நாள் மக்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று நம்ம பிரதமர் நரேந்திர மோடி பேசி இருக்கார்.

எல்லாம் சரிதான் என்று மக்கள் மோடியின் ஒவ்வொரு வார்த்தையும் மனசார ஏத்துக்கிட்டு, அன்று முழுவதும் வீட்டில் இருக்க தயாராகி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலிலும் நகைச்சுவையாளர்கள் தங்களின் குமுறலை கிரியேட்டிவிட்டியாக காண்பிக்க தவறுவதில்லை. இதோ பாருங்க விஜய் சூப்பர் சானலில் ஆன்னா ஊன்னா போடும் கும்கி, வேட்டை போன்ற படங்களை போட வேணாம்னு சொல்லுங்க என்று வடிவேலு கதறுவது போல் ஒரு மீம் போட்டு ரசிக்க வைத்து இருக்கிறார்கள்.

மக்கள் வீட்டில்

மக்கள் வீட்டில்

மக்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பது தொலைக்காட்சி சானல்களுக்கு குஷி என்றுதான் சொல்ல வேண்டும். ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பத்தான் வாய்ப்பில்லை என்றாலும், ஏற்கனேவே போட்டு போட்டு தேஞ்ச நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு என்று போட்டுத் தாக்கி விடுவார்கள்.

திரைப்படங்கள் ஒளிபரப்பு

திரைப்படங்கள் ஒளிபரப்பு

சன் டிவி போன்ற தொலைக்காட்சிகள் திரைப்படங்களை ஒளிபரப்பி மக்களின் ஒரு நாள் ஒப்பொழுதை மிகச் சுலபமாக எடுத்துக்கொள்ளும். சரி.. சன் டிவி படங்கள் போரடிக்குது என்று திருப்பினால்... எல்லா தொலைக்காட்சி சானல்களும் ஏற்கனவே பல முறை ஒளிபரப்பிய படங்களை போட்டு இன்னும் மக்களை நோகடிக்கும்.

தசாவதாரம் பில்லா

தசாவதாரம் பில்லா

கலைஞர் தொலைக்காட்சியில் ஆச்சு போச்சுன்னா உடனே உலக நாயகன் கமல் நடித்த தசாவதாரம்.. இல்லையா தல நடிச்ச பில்லா படம் என்று போட்டுத் தாக்கி விடுவார்கள். சான்ஸே இல்லைன்னா தளபதி நடிச்ச குருவி...என்னவோ அன்னிக்குத்தான் நாம அங்கே போயிருக்கலாம்.. இங்கே போயிருக்கலாம் இந்த ஒரு நாள் மிஸ் ஆயிருச்சேன்னு நாம் ஃ பீல் பண்ற அளவுக்கு நம்மை சானல்கள் கொண்டு வந்து விட்டுவிடும்.

விஜய் சூப்பர்

இந்த விதத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் .. ஒரு வாரத்துக்கு கூட நாங்க வீட்ல இருக்கோம்... விஜய் ஸ்டாரில் கும்கி வேட்டை போன்ற படங்களை மட்டும் போட வேண்டாம் என்று சொல்லுங்கள் மோடிஜி என்று நம்ம வடிவேலுவை விட்டு கதற வச்சு இருக்கார். வொய் பிளட்..சேம் பிளட்!

English summary
Our Prime Minister Narendra Modi on Sunday said that all people should be home tomorrow to control the spread of coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X