• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Thenmozhi BA Serial: என்னாப்பா... முத்து பட சீனை அப்படியே சுட்டுட்டீங்களே.. இது நியாயமா?

|

சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் முத்து படத்தில் ஒரு லவ் லெட்டர் எல்லாரையும் தோட்டத்தில் கூட வச்சுருமே அது மாதிரி ஒரு சீன் வச்சு இருக்காய்ங்க. பார்க்கறப்போ இதை சொல்லாம இருக்க முடியுமா?

தேனுவை திசை திருப்ப அவள் புருஷன் அருள்வேலின் மாமா ஒரு லவ் லெட்டரை அருள் எழுதுன மாதிரி தேன்மொழியிடம் வீச, இது புருஷன் எழுதின லவ் லெட்டர்னு தேன்மொழி சந்தோஷத்தில் மிதக்கிறாள்.

அங்க சுத்தி இங்கே சுத்தி அந்த லெட்டர் எழுதியவன் கிட்டேயே வந்து சேருது. இதுவும் முத்து படத்தின் சீன்தான். தோட்டத்தில் வச்சு மூணு பேரை கையும் களவுமா பிடிக்கறாங்க மாமியார்.

 விழிச்சுகிட்ட தேன்மொழி

விழிச்சுகிட்ட தேன்மொழி

ஹீரோ சார் நம்மை காதலிக்கலேன்னா நாம இந்த வீட்டில் இனிமேல் இருக்க கூடாது. எதுக்கு மதர் இன் லா கிட்ட இவ்ளோ கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கணும். பேசாம நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம் என்கிற முடிவோடு, வீட்டுக்குள் வரும் தேனு ஃபாதர் இன் லாவைப் பார்த்து உண்மையை கேட்டுவிடுகிறாள்.ஹீரோ சார் என்னை லவ் பண்ணலேன்னு மதர் இன் லா சொன்னது உண்மையான்னு.

குழந்தை பிறப்பு இயல்பாய் நடக்கட்டும்.. அதுக்கு எதுக்கு பிளானிங்?

 தேன்மொழியை நம்ப வைக்க

தேன்மொழியை நம்ப வைக்க

தேன்மொழியை நம்ப வைக்க மாமனார் என்னென்னவோ சொல்லி அனுப்பி விடுகிறார். தேன்மொழி நம்பி போனாலும், அவளுக்கு எந்த விதத்திலும் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்று நினைத்த அந்த வீட்டு மாப்பிள்ளை அருள் தேனுவுக்கு லவ் லெட்டர் எழுதுவது போல எழுதி, இரவு 11 மணிக்கு தோட்டத்துக்கு வந்துவிடு. உன்னிடம் பேச வேண்டும் என்று லெட்டர் எழுதி தேனுவிடம் வீசிவிட்டு மறைந்து கொள்கிறார்.

 ஹீரோ சார் லெட்டர்

ஹீரோ சார் லெட்டர்

அந்த நேரத்தில் அருள்வேல் நடந்து போக, ஹீரோ சார்தான் லெட்டர் எழுதி இருக்கார். இன்னிக்கு விடிய விடிய அவர்கிட்டே பேசிடணும் என்று சந்தோஷமாக கூறிக்கொண்டே லெட்டரை தூக்கி வீச, அது மதர் இன் லா காலடியில் விழுந்துருது. ஓ.. யாருக்கும் தெரியாம ராத்திரி சந்திக்க பொறியான்னு கேட்டு, இரு உன்னை வச்சுக்கறேன்னு சொல்லி இவங்க அதைத்தூக்கிப் போட...

 லெட்டர் மருமகள் கையில்

லெட்டர் மருமகள் கையில்

அந்த லெட்டர் இன்னொரு மருமகள் காலில் விழுகிறது. அவள் எடுத்து படித்துவிட்டு நிமிர, அவள் புருஷன் அவளை கடந்து போக, அந்த லெட்டரை அவன்தான் எழுதினான் என்று அவளும் நம்பி விடுகிறாள். பொண்டாட்டி தூக்கிப் போட்ட கடிதத்தை அவள் தனக்கு எழுதி இருப்பதாக நினைத்து அவனும் மகிழ்கிறான். அவன் தூக்கிப் போட அந்த லெட்டர் அந்த வீட்டு பெண் காலில் விழுகிறது. அவள் படித்துவிட்டு நிமிர அவள் புருஷன் அந்த லெட்டரை எழுதினவன் கடந்து போகிறான்.

 இப்படியே ஆள் மாத்தி

இப்படியே ஆள் மாத்தி

இப்படியே ஆள் மாத்தி மாத்தி கடந்து போன அந்த லெட்டர் கதை எப்படி முத்து படத்தில் வேவு பார்க்கும்படி அமைகிறதோ.. அப்படித்தான் தேன்மொழி பிஏ சீரியலிலும் நடக்கிறது. இதில் ஒரு விஷயம், அதே முத்து படத்தின் பாடலான தில்லானா தில்லானா பாடலை பாடியபடியே தேன்மொழி தோட்டத்துக்கு வருகிறாள்.

எப்படியோ ஒரு எபிசோட் இப்படி கடந்து போனால் நல்லதுதானே சீரியல் எடுப்பவர்களுக்கு! பார்க்கற நமக்கு போரடிச்சா அவங்களுக்கு என்ன!

 
 
 
English summary
Vijay TV's thenmozhi BA serial pearl in the movie Love Letter all in the garden and even in the garden is like a scene. Is this possible?To divert honey, her husband Arulvel's uncle throws a love letter into a thenmozhi, which floats in the joy of the bride's love letter.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X