For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்ரா மாப்ளை கெழவி செம டிரெண்டிங்ல இருக்கு.. வர வர கெளப்புறாங்கய்யா!

Google Oneindia Tamil News

சென்னை: சில காலமாக வாட்ஸ் ஆப்பில் ஒரு சினிமா பட வசனம் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதாவது மூன்று எழுத்துக்களை வைத்து பேசப்பட்ட வசனம் அது. நாகேஷ், ரவிச்சந்திரன், மேஜர் சுந்தரராஜன், ஜெயலலிதா என பல லெஜன்டுகள் அந்த வசனத்தைப் பேசி கலக்கியிருப்பார்கள்... அது சரி இப்ப எதுக்கு அதுன்னுதானே கேட்கறீங்க. சொல்றோமே.

இந்த டயலாக்கை வைத்து பலரும் தாங்களாகவே வசனம் எழுதி வாட்ஸ் ஆப்பைக் கலக்கிக் கொண்டிருந்தனர். இப்போது அதை விஜய் டிவியின் ஒரு சீரியலிலும் புகுத்து அசத்தியுள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர் வசனம்தான். அதில் மாயன் பாட்டி பேசும் வசனத்தைத்தான் இன்றைய புரோமாவில் காட்டியுள்ளனர். அதில்தான் அந்த பாட்டி மூன்று எழுத்து வசனம் பேசியுள்ளார்.

 வார்த்தை பயம்

வார்த்தை பயம்

தேவி பெரிய சைஸ் கத்தியுடன் கூடத்தில் அமர்ந்திருக்கிறார். கண்ணில் கோபம் கலந்த பார்வை.. எதிரில் பாட்டி காலை நீட்டியபடி உட்கார்ந்திருக்கிறார். மாயனைப் பார்த்து தேவி கேட்கிறார்.. எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை எதுன்னு.. அது பயம் என்று சொல்கிறார். அவ்வளவுதான் கெழவி வாயைத் திறக்கிறார்.

Lakshmi Stores Serial: தாலியை கழட்டு... தாலியை கழட்டு.. இப்படி ஜவ்வா இழுத்தா எப்படிப்பா!Lakshmi Stores Serial: தாலியை கழட்டு... தாலியை கழட்டு.. இப்படி ஜவ்வா இழுத்தா எப்படிப்பா!

தோல்விங்கிற

தோல்விங்கிற

பயம்ங்கிற மூன்று எழுத்து வந்துருச்சுன்னா தோல்விங்கிற மூன்றெழுத்து நிரந்தரம். கோபம்ங்கிற மூன்றெழுத்தோட பேத்தி என்கிற மூன்றெழுத்து காத்திருக்கு. கத்திங்கிற மூன்றெழுத்தை எடுத்துக்கிட்ட காருங்கிற மூன்றெழுத்தில் கிளம்பிப் போங்கடா என்று கெழவி விரட்டுகிறார்.

விஷம்ங்கிற மூன்றெழுத்து

விஷம்ங்கிற மூன்றெழுத்து

அது எப்படி கார் 3 எழுத்து வரும் என்று ரைட்டு சந்தேகத்தைக் கிளப்ப அது கார் ஆங்கில வார்த்தை என்று பதிலடி வருகிறது. பிறகென்ன கடுப்பாகிப் போகிறார்கள். அப்ப கெழவிங்கிற மூன்றெழுத்துக்கு விஷம்ங்கிற மூன்றெழுத்தைக் கொடுத்து கொன்றவா என்று அனல் கேள்வி வருகிறது.

பளிச்சுன்னு பயன்படுத்தி

பளிச்சுன்னு பயன்படுத்தி

அடுத்து என்ன நடந்துச்சுன்னு நமக்குத் தெரிலயலபா.. இன்னிக்கு நைட் சீரியல் பார்த்தாதான் தெரியும்.. பரவாயில்லப்பா.. டிரெண்டிங்கில் எது வந்தாலும் இந்த சீரியல் வசனகர்த்தாக்களும், இயக்குநர்களும் விடுவதில்லை. பட்டென்று தூக்கி பளிச்சுன்னு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.. கொல்லாத வரை நல்லதுதான்.

English summary
For some time, a cinema movie version of WhatsApp has been trending. That is, the verse was spoken in three letters. Many legends like Nagesh, Ravichandran, Major Sundararajan, Jayalalithaa would have mixed that verse ... well that's what it is. Colrome.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X