For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Names in Serials: தூக்கு துரை மாதிரி தூக்கு செல்வியா?

Google Oneindia Tamil News

சென்னை: சேனல்களில் வரும் சீரியல்களில் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைப்பது என்பதில் இப்போது அதிக கவனம் செலுத்துகிறார்கள். நிலா, வெண்மதி போன்ற தமிழ் பெயர்கள் ஒரு புறம் கலக்கி வருகிறது..

இன்னொரு பக்கம் சீரியல்களில் வில்லியாக அல்லது பெரும் பணக்காரியாக நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு சகுந்தலா தேவி, நீலாம்பரி, சவுந்தர்யா ,அகிலாண்டேஸ்வரி, காளி அம்மா என்று அழைக்கும் போதே மிரள வைக்கும் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

இந்த நேரத்தில்தான் சன் டிவியின் நிலா சீரியலில், தூக்கு செல்வி என்று ஒரு கதாபாத்திரத்துக்கு பெயர் வைத்து இருக்கிறார்கள்.

தூக்கு செல்வி

தூக்கு செல்வி

நிலாவை கொல்ல வீரபத்ரன் மூலம் ஆள் அனுப்பி வைக்கிறாங்க நீலாம்பரி.அந்த ஆளின் பெயர்தான் தூக்கு செல்வி.ஆளைத் தூக்குவதனாலும், ஆளை கொலை செய்வதாலும் தூக்கு செல்வி என்று பெயர் வைத்து இருப்பார்கள் போலும். இதெல்லாம் பார்க்கும் போதும், கேட்கும் போதும் சில சீரியல்களின் மூலம் சுவாரஸ்யம் தொற்றிக் கொள்கிறது.

வெண்மதி நீலாம்பரி

வெண்மதி நீலாம்பரி

ஒரே வீட்டில் நீலாம்பரி அதிகாரமான பெயர் அக்காவுக்கு.வெண்மதி அமைதியான பெயர் தங்கைக்கு. இப்படி மாறுபட்டு பெயர் வைப்பது என்பது இப்போது சீரியல் எடுப்பவர்கள் பார்த்து பார்த்து வைக்கும் பெயராக இருக்கிறது. நீலாம்பரி என்றால் படையப்பா நீலாம்பரிதான். அதனால் ரசிகர்களால் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது.

விதி சகுந்தலா தேவி

விதி சகுந்தலா தேவி

மறைந்த நடிகை சுஜாதா நடித்து பெரும் புகழ் பெற்று, வசூலை வாரிக் குவித்த படம் விதி.பெரும் புகழ் பெற்ற லாயராக நடித்த சுஜாதாவின் பெயர் சகுந்தலா தேவி.இதே பெயரை அழகு சீரியலில் புகழ் பெற்ற லாயராக நடிக்கும் காயத்ரி ஜெயராமும் வைத்து இருக்கிறார்கள். சகுந்தலா தேவி என்றால் லாயர் என்று முத்திரை குத்தப்பட்ட பெயர் அது.

Sunday doubles programme: அடடே... ஞாயிறு பேக் டு பேக் தளபதி...ஞாயிறு டபுள்ஸ்!Sunday doubles programme: அடடே... ஞாயிறு பேக் டு பேக் தளபதி...ஞாயிறு டபுள்ஸ்!

சகுந்தலா தேவி மினிஸ்டர்

சகுந்தலா தேவி மினிஸ்டர்

லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில்.மினிஸ்டருக்கு சகுந்தலா தேவி என்று பெயர் வைத்து இருப்பதும் இந்த கம்பீரத்தை தன்மையை மனத்தில் கொண்டுதான் என்றும் புரிகிறது. இப்போது சீரியலில் வைக்கும் பெயரை வைத்தே கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துக் கொள்ளும் அளவுக்கு பெயர்கள் வைக்கப்படுகின்றன என்பது சீரியல்களுக்கு பிளஸ்தான்.

English summary
Channeling serials are now focusing on naming characters. Tamil names like Nila, Venmathi are mixed on the one hand ..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X