பீச்சில் வச்சு நட்சத்திரா போட்ட போடு.. அடேங்கப்பா.. கிறங்குதே!
சென்னை: சீரியலில் அமைதியின் சொரூபமாக இருக்கும் யாரடி நீ மோகினி "வெண்ணிலா" நட்சத்திரா தற்போது இந்த புயலிலும் கடற்கரையில் ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
அவர் போட்டிருக்கும் வீடியோக்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. பல நடிகைகளை போலத்தான் இவரும் வெள்ளித்திரையில் காலை பதிக்கலாம் என்று வெள்ளித் திரையில் அறிமுகமானார்.
ஆனால் அங்கு அவரது நடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காததால் சின்னத்திரையில் அறிமுகமாகி இருக்கிறார்.

சினிமாவில் அறிமுகம்
இவர் முதன்முதலில் கிடா பூசாரி மகுடி எனும் ஒரு திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் . இந்த திரைப்படத்தில் மூலம் இவர் புகழின் உச்சிக்கு செல்லலாம் என்று நினைத்திருந்த வேளையில் அந்த அளவிற்கு அந்த படவாய்ப்பு இவருக்கு கை கொடுக்காததால் சீரியலின் பக்கம் தனது கவனத்தை செலுத்தி இருக்கிறார் .

ரசிகர்களின் வெண்ணிலா
ஆனால் திரைப்படத்தையும் தாண்டி தற்போது சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை வெண்ணிலாவாக பிடித்து விட்டார். சீரியலில் அறிமுகமானாலும் பல நடிகைகளும் போல்டான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் அமைதியும் சொரூபமாக முத்து மாமாவை சுற்றிவரும் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார் .

பாசமும் வில்லியும்
காதல் கணவர் மீது உயிரையே வைத்திருக்கும் வெண்ணிலா கேரக்டரில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இந்த சீரியலில் இவருடன் வில்லியாக நடிக்கும் ஸ்வேதா இவரது நெருங்கிய தோழி ஆனாலும் சீரியலில் இவர்கள் இருவரும் நடிப்பில் அவரவர் கேரக்டரில் பின்னிப் பெடல் எடுத்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஜீ தமிழில் நடிக்கும் நடிகைகள் அனைவரும் ஒரு குடும்பம் போல தான் வாழ்ந்துவரு கிறார்கள்.

தோழிகளின் கூட்டணி
அதன்படிதான் யாரடி நீ மோகினி நடிக்கும் இவர்கள் இருவரும் அதுபோல செம்பருத்தியில் நடிக்கும் சபானா அந்த சீரியலில் இருந்து ஐஸ்வர்யாவாக நடித்து விலகிப் போன ஜனனி பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்கும் ரேஷ்மா அதுமட்டுமில்லாமல் யாரடி நீ மோகினி சீரியலில் நடிக்கும் ஸ்ரீமதி அனைவருமே நெருங்கிய தோழிகள் இவர்கள் அனைவரும் கேர்ள்ஸ் பிளஸ்டியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

கூடிக் கூடி போட்டோஸ்
கிடைக்கும் நேரங்களில் இவர்கள் அனைவரும் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமை கதிகலங்க வைத்து விடுவார்கள். பெண்கள் கூட இந்த அளவிற்கு நெருங்கிய தோழிகளாக வலம் வர முடியுமா என்று பலரும் ஆச்சரியப்படும் வகையில் தான் இவர்கள் அனைவரும் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அடிக்கடி இவர்கள் செய்யும் சேட்டைகளையும் வீடியோக்களாக எடுத்து வெளிவிட்டு வருவார்கள்.

கடற்கரையில் ஜாலி
அந்த மாதிரி தற்போது நட்சத்திரா கடற்கரையில் ஜாலியாக அலைகளுக்கு நடுவில் துள்ளிக்குதித்து விளையாடுவதை அப்படியே வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் தட்டிவிட்டு இருக்கிறார். அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் கொஞ்சி கொஞ்சி ரசித்து வருகிறார்கள். சூப்பராக என்ஜாய் பண்றீங்களே என்றும் கலாய்த்துள்ளனர்.

பெஸ்டிங்க கூட
அதுமட்டுமல்லாமல் நீங்க மட்டும் இப்படி தனியா போய் இருக்க மாட்டீர்களே உங்க கூட சேர்ந்த உங்க பெஸ்டிக எங்கே என்று அவர்களையும் தேடி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் எப்படியும் ஒரு சில நாட்களுக்குள் ஒவ்வொரு வீடியோவும் போட்டோக்களாக ரிலீஸ் பண்ணி விடுங்க. அதற்கு மொத்தமாக எல்லாத்தையும் அப்லோட் பண்ணலாமே என்று கேட்டு வருகிறார்கள்.

எங்கே ஸ்வேதா
அதுமட்டுமல்லாமல் வயதான அவருடைய ரசிகர்கள் அந்த சீரியலில் கிளியை ஸ்வேதாவுக்கு பதிலாக நடிக்க வைத்து விட்டு ஸ்வேதா ஹனிமூனுக்கு போயாச்சா அந்த போட்டோக்களையும் அப்லோட் பண்ணுங்க என்று இவரிடம் கேட்டு வருகிறார்கள் . அதற்கு ரகசியங்களை வெளியில் சொல்லக் கூடாது என்று இன்னொரு ரசிகர் கமெண்ட் போட்டு இருக்கிறார்.