For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Nayagi Serial: டிவி சீரியல்கள் பழமொழிகளையும் பொய்யாக்கி விடுகின்றன!

Google Oneindia Tamil News

சென்னை: டிவி சீரியல்கள் பழமொழிகளைக் கூட பொய்யாக்கி விடுகின்றன.

சன் டிவியின் நாயகி சீரியலில் அனன்யா கதாபாத்திரம் ஜெயிலுக்கு போயும் திருந்தவில்லை. காலம் கடந்தும் திருந்தவில்லை.

பார்த்தால், காலம் பதில் சொல்லும், காலம் பண்படுத்தும், சிறை தண்டனை திருத்தும் என்பதெல்லாம் பொய்யாகிப் போச்சு என்றுதானே அர்த்தம்?

 வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்குமிடம்...? வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்குமிடம்...?

திரு அப்பா

திரு அப்பா

அனன்யா , திருவின் அப்பா இருவருமே ஆனந்தியின் அப்பா சொத்தை கொள்ளையடித்து பணக்காரர் ஆனவர்கள்தான்.காலம் கடந்தும் கூட, உண்மை தெரிந்தும் கூட அவர்களுக்கு அந்த குற்ற உணர்ச்சி இல்லாததும், ஆனந்தியை இன்னும் வேலைக்காரி என்று சொல்வதும் நகைப்புக்கு உரியதாக இருக்கிறது.

உழைப்பில் உயர்ந்த

உழைப்பில் உயர்ந்த

உழைப்பில் உயர்ந்த ஆனந்தியை புதுப்பணக்காரி என்று கிண்டல் அடிப்பது, என் வீட்டு சமையல்காரி, வேலைக்காரியா இருந்தவதானே என்று நக்கல் அடிப்பது இதல்லாம் டூ மச் வசனங்கள். கொஞ்சம் கூடவா உறுத்தலா இருக்காது? இதை எல்லாம் தாண்டி ஒரு படி மேலே போய்விட்ட அனன்யா கதாபாத்திரம்...

திரு அனன்யா

திரு அனன்யா

அனன்யா திருவை காதலிச்சது, திரு ஆனந்தியை காதலிச்சது எல்லாமே ஓகேதான்...ஆனால், திரு கிடைக்கவில்லை என்றதும். அவன் உயிரணுக்களை அவனுக்குத் தெரியாமல் எடுத்து, பாதுகாத்து வைத்து தான் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொள்வது..

பெற்று வளர்ப்பது

பெற்று வளர்ப்பது

அந்த குழந்தையை சமூகத்துக்கு பயம் இன்றி பெற்று அப்பா அம்மாவிடம் வளர்க்க சொல்கிறாள். அந்த குழந்தையை பெற்றதற்காக ஜெயிலுக்கு போயும் திருந்தாமல் குழந்தையை வைத்து திருவை தான் அடைய நினைக்கிறாள். மீண்டும் போராட்டம் போராட்டம்.. எல்லாம் எதற்காக என்று பார்த்தால் இன்னொருத்தி புருஷன் ஆன திருவை அடைவதற்காகத்தான்.

இப்படித்தான் இருப்பாளா?

இப்படித்தான் இருப்பாளா?

ஒரு படித்த பெண் இப்படித்தான் இருப்பாளா? ஜெயில் தண்டனை என்பது அவ்வளவு எளிதானதா? அதை பெற்றும் ஒரு படித்த பெண் மீண்டும் குற்ற செயல்களில் தைரியமாக ஈடுபடுவாளா? காலம் பதில் சொல்லும், ஜெயில் தண்டனை மனிதர்களை பண்படுத்தும் இவைகளுக்கு மதிப்பில்லையா?

சமூகத்தில் பெண்களை சீரழிப்பது போன்ற இப்படிப்பட்ட கதைகளை தவிர்க்கலாமே!

English summary
TV serials even falsify proverbs. Ananya's character did not even go to jail in the TV serial of Sun TV. Not long after. Does it mean that the answer to the time, the enrichment of the time, and the amendment of the sentence is false?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X