For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஸ்ட்ராபெர்ரி" பெண்ணின் உலக மகளிர் தின வாழ்த்துகள்!

Google Oneindia Tamil News

சென்னை: உலக பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லி இருக்கும் இந்த ஸ்ட்ராபெரி பொண்ணுதான் நம்ம நாயகி சீரியலில் நடிக்கும் சுமதி.

இந்த சுவீட்டியோட நிஜ பேரு அனு சாய் இலக்கியா. இந்த பேபி, சரி சீனியர் சுட்டின்னு வச்சுக்கலாம். நம்ம ஈரோடு பொண்ணுங்க. மண்வாசனை மாறாம பேசும்.. வேலைன்னு வந்திட்டா வெள்ளைக்காரி மாதிரிதான்.

நிறைய ஷோஸ், ஆங்கரிங், நிகழ்ச்சிகள் என்று எப்போதும் தன்னை பிசியாக வைத்திருக்க வேண்டும் என்று துடிப்புடன் செயல் படும் இம்மாதிரி பெண்களை காண்பது அரிது.

தலை உயர்ந்த பெண்கள்.. தினந்தோறும் அருமையான தகவல்கள்.. டிவியைக் கலக்கும் மகளிர்! தலை உயர்ந்த பெண்கள்.. தினந்தோறும் அருமையான தகவல்கள்.. டிவியைக் கலக்கும் மகளிர்!

நல்லா நடிக்கணும்

நல்லா நடிக்கணும்

சின்னத்திரை, பெரிய திரை என்று நடிப்பில் பெயர் சொல்லும்படி நல்ல ரோலில் நடிக்க வேண்டும். இப்போதே ஏழை, அநாதை இல்லங்களுக்கு சென்று தம்மால் முடிந்ததை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக செய்யும் இலக்கியா, அம்மாவை ராணி மாதிரி பார்த்துக்கணும் என்று ஓடிஓடி உழைக்கும் பெண்.

சூப்பர் இலக்கு

இன்னும் சிறிது காலத்தில் ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் தொடங்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் கடினமாக உழைத்து வருகிறார். என் நோக்கமே அதிகமா உழைக்கணும், நிறைய சம்பாதிச்சு, முடியாதவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் என்று கூறுகிறார்.

செம பிசி

செம பிசி

இவர் காலையில் எழுந்து ஷூட்டிங் போனால், இரவு படுப்பதற்குத்தான் வீட்டுக்கு வர வேண்டும். அந்த அளவுக்கு இந்த வயதில் நான் உழைக்க வேண்டும் என்கிறார்.

நாமும் சொல்வோம் வாழ்த்து

நாமும் சொல்வோம் வாழ்த்து

நமக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லும் இந்த அழகிய பெண்ணுக்கு, அதுவும் உழைக்கும் மகளிருக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால் எப்படி. மகளிர் தின வாழ்த்துக்கள் அனுசாய் இலக்கியா, நீங்களும் எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கணும்.

English summary
Nayagi actress Anu Sai Ilakiya has wished all the women on the occasion of International Women's day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X