• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோட்டு போட்ட நாட்டாமைக்கு பிறந்தநாள் ... ரசிகர்கள் ,பிரபலங்கள் வாழ்த்து!

|

சென்னை: கோட்டு போட்ட நாட்டாமை.. அதாங்க நம்ம கோபிநாத்துக்கு இன்னிக்குப் பிறந்த நாள். வாழ்த்துகள் குவியுதாம். நாமளும் வாழ்த்தாலாமே பிரண்ட்ஸ்!

ரசிகர்களை பொறுத்தவரையில் சினிமாக்களில் கவர்ச்சி காட்டும் கதாநாயகிகளுக்கு இணையாக, திறமையாக செயல்படும் நடிகர்களுக்கும் ஆளுமை மிக்கவர்களுக்கும் ஒரு தனி மரியாதை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமான கோபிநாத் எல்லாருக்கும் தெரிந்த நபர்.

அவர் பேசும் விதமும் உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகளும் அவருக்கென்று தனியாக ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறது. சிறியவர்கள்

முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய காமெடியான கருத்துக்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய எழுச்சிமிக்க கருத்துக்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.

அர்ச்சனா பொண்ணு.. அந்த விஷயத்தில் அம்மாவையே மிஞ்சிடுவாங்க போலயே!

 1997ல் தொடங்கிய டிவி வாழ்க்கை

1997ல் தொடங்கிய டிவி வாழ்க்கை

இவர் 1997 இல் தனது டிவி நிகழ்ச்சிகளில் வாழ்க்கையை தொடங்கினார். ஜெயா டிவி ,ராஜ் டிவி ,என்டிடிவி என பல டிவிகளில் பணிபுரிந்திருக்கிறார். 2006 ஆம் ஆண்டில் நீயாநானா உடன் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்க ஆரம்பித்தபோது இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் இவரைத் தவிர வேறு ஒருவராலும் இவ்வளவு சிறப்பாக செய்து முடித்து இருக்க முடியாது அப்படிங்கிற மக்களிடம் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

 பன்முகத் திறமையாளர்

பன்முகத் திறமையாளர்

இவர் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமல்லாது எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விருந்தினர் ,பேச்சாளர் அப்படின்னு பன்முகத் திறமையை கொண்டு உள்ளார். இதற்கெல்லாம் மேலே இவர் ஒரு செல்லக் குழந்தையின் அப்பா. இதை தான் இவர் ரொம்ப பெருமையாக கருதுகிறார் ஆம். ஆமாங்க அவர் பெரிய கிப்ட்டா பாக்குறதே அவருடைய பொண்ண தானாம். துர்கா என்பவரை 2010 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வெண்பா என்ற அழகு தேவதை குழந்தையாக இருக்கிறது. அந்த குழந்தையுடன் கொஞ்சி விளையாடுவது கோபிநாத்தின் வரமாம்.

 பல புத்தகங்கள்

பல புத்தகங்கள்

கோபிநாத் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். தெருவெல்லாம் தேவதைகள் ,தயவு செய்து இந்த புத்தகத்தை வாங்காதீங்க ,நீயும் நானும், நேர் நேர் தேமா, கடவுச்சொல் ,நிமிர்ந்து நில், எல்லோருக்கும் வணக்கம், மண்ட பத்திரம் அப்படி பல புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார் .இதில் இந்த புத்தகத்தை வாங்காதீங்க எனும் ஆளுமை வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட நூல் இது தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்றுள்ளன.

 மக்களின் பாராட்டு

மக்களின் பாராட்டு

இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் .மக்கள் யார் பக்கம் ,சிகரம் தொட்ட மனிதர்கள் ,நடந்தது என்ன, என் தேசம் என் மக்கள் அப்படி பல நிகழ்ச்சிகளை வழங்கி இருக்கிறார் அதன் பிறகு 2016 இல் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சின்னத்திரையில் மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் 2009 ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்திருக்கிறார். வாமனன், தோனி், நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நீயா நானா கோபிநாத் ஆகவே நடித்திருக்கிறார் கடைசியாக வெளியான திருநாள் படத்தில் ஒரு போலீஸ் ஆகவும் நடித்திருக்கிறார்.

 டாப் 10 பிரமுகர்கள்

டாப் 10 பிரமுகர்கள்

2009ஆம் வருடம் ஆனந்த விகடன் வெளியிட்ட இந்தியாவின் தலைசிறந்த 10 நபர்களில் அப்துல் கலாம் ,கமலஹாசன் வரிசையில் கோபிநாதன் பெயரும் இடம் பெற்றிருந்தது. 2010 ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டி இவருக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. 2012ஆம் வருடம் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர் வழங்கிய இன்டர்நேஷனல் யூத் ஐகான் விருதையும் வாங்கியிருக்கிறார். இந்த லாக் டவுன் டைம்ல இவர் மகளுடன் இணைந்து லைவ் வீடியோ போட்டு இருக்கிறார். இது வைரலாக பரவிக் கொண்டு வருகிறது .மேலும் இவர் பிறந்தநாளுக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Neeya Naana fame Gopinath is celebrating his birth day today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more