For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாது...மூணு வருஷமா வீடு பூட்டி கிடக்கா?

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் வாடகை வீடு.. ராசி குறித்த விவாதம் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது. அப்போதுதான் ஒருத்தர் ராசியின்மை காரணமாக ஒரு வீடு 3 வருஷமா பூட்டியே கிடக்குதுன்னு சொன்னார்.

நம்மை வாழ வைக்கும் வீடு இப்படி இருக்க வேண்டும்... குடும்பத்தை சும்மா அப்டி தூக்கி நிறுத்த வேண்டும்...பணம் பெருக வேண்டும்..வீட்டில் நல்ல விஷயங்கள் அடிக்கடி நடந்துக்கிட்டே இருக்க வேண்டும்...பல கனவுகள்!

வீடு பற்றிய கனவு சொந்த வீடாக இருந்தால் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றில்லை. வாடகை வீட்டுக்கு போகும்போதும் இப்படி ஏகப்பட்ட கனவுகளுடன் வாடகை வீட்டுக்கு குடிபுகுபவர் ஏராளம்.

வீடு கட்டி விளங்கலை

வீடு கட்டி விளங்கலை

ஒருத்தர் புதுசா வீடு கட்டினார் சார். கட்டி முடிக்கறதுக்குள்ளே வீட்டு பெரியவர் இறந்தார். குடியேறியவுடன் அந்த வீட்டு அம்மா இறந்துட்டாங்க சார். அவங்களுக்கு ராசி இல்லைன்னு சொல்லி, வீட்டை வாடகைக்கு விட்டாங்க..அந்த வீட்டுக்கு வந்தவருக்கு கல்யாணம் ஆனது.

மணவாழ்க்கை அமையலை

மணவாழ்க்கை அமையலை

கல்யாணம் ஆனவருக்கு மண வாழ்க்கை சரியா அமையலை சார். ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க. இப்போ யாரும் அந்த வீட்டுக்கு குடி வராம வீடு 3 வருஷமா பூட்டியே கிடக்குது சார்னு சொன்னார் ஒருவர். வீடு எந்த அளவுக்கு பீதியை கிளப்பி விட்டு இருக்கு பாருங்க. அப்போ நம் வாழப் போகும் வீட்டை தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறதுதானே...!

வீட்டை நாம்தான்

வீட்டை நாம்தான்

வீடு நம்மை தேர்ந்தெடுக்காது சார்.. நாம்தான் நாம் வாழப்போகும் வீட்டைத் தேர்ந்தெடுக்கணும்.. அதே மாதிரி வீடு நம்மை நேசிக்காது.. நாம்தான் வீட்டை நேசிக்கணும் என்று சொன்னார் ஒரு பெண்மணி என் வீடு முட்டுச் சந்து வீடு சார்.. அந்த வீட்டுக்கு போனா நீ விளங்க மாட்டேன்னு சொன்னாங்க.

மழை பெய்தால்

மழை பெய்தால்

மழை பெய்தால் ஓட்டை தண்ணி ஒழுகும். பாத்திரத்தை வச்சுத்தான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம். ஆனால், அந்த வீடு எனக்கு ராசியான வீடு சார். நான் நல்லாத்தான் இருக்கேன்னு சொன்னார் ஒருவர். இப்படி வீடு குறித்த அனுபவங்களை பலரும் பகிர்ந்துக்கொண்டு இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியை வரும் ஞாயிறு அன்று பகல் 12 மணிக்கு பாருங்கள்.

English summary
The house that makes us live should be like this ... just to keep the family idle and raise the money .. Good things often happen at home ... many dreams!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X