For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்க ஆபீஸ் ரசிகர்களா.. பிரண்ட்ஸும் பிடிக்குமா.. 2ம் போயே போச்சு.. அந்த இடத்துக்கு வருது சீன்பெல்ட்

Google Oneindia Tamil News

நியூயார்க்: நெட்பிளிக்ஸ் விரும்பிகளின் மனதைக் கொள்ளை கொண்ட இரு தொடர்கள் என்றால் அது ஃபிரண்ட்ஸ் மற்றும் தி ஆபீஸ் தொடர்கள்தான். இந்த இரண்டு வெப் சீரிஸ்களும் அமெரிக்க நெட் பிளிக்ஸ் நேயர்களை வசீகரித்தவை.

இப்போது இந்த இரு தொடர்களும் அடுத்தடுத்து நெட் பிளிக்ஸிலிருந்து விடை பெறப் போகின்றன. இதனால் இவர்களின் ரசிகர்கள் சேட் மூடுக்குப் போயுள்ளனர். ஆனால் அவர்களை மகிழ்விக்க நெட்பிளிக்ஸ் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளது.

உள்ள ரசிகர்களுக்கு

உள்ள ரசிகர்களுக்கு

இன்னொரு ஹிட் சீரிஸை தனது வலையில் வீழ்த்தியுள்ளது. அதுதான் சீன்பெல்ட் (Seinfeld).2021ம் ஆண்டு முதல் சீன்பெல்ட் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தையும் அது சோனி பிக்சர்ஸ் டெலிவிஷனுடன் அது போட்டுள்ளது.

180 எபிசோடுகள்

180 எபிசோடுகள்

மொத்தம் 180 எபிசோடுகள் கொண்டது சீன்பெல்ட். எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஹிட் தொடராகும் இது. முழுக்க முழுக்க காமெடி கலந்த அதிரடி தொடர். இளசுகளின் ஆதரவும் இந்த தொடருக்கு நிறையவே உண்டு. எனவே ஆபீஸ், ஃபிரண்ட்ஸ் கேப்பை இது பில் செய்யும் என்று நெட்பிளிக்ஸ் நம்புகிறது.

எலைன்ஜெர்ரி

எலைன்ஜெர்ரி

இதுகுறித்து கூறிய நெட்பிளிக்ஸ் சிசிஓ டெட் செரண்டாஸ் கூறுகையில், "நமது வீடுகளை அலங்கரிக்க வரப் போகிறார்கள் ஜெர்ரி, எலைன், ஜார்ஜ், கிராமர். இதற்காக காத்திருக்கிறோம்" என்று
தெரிவித்துள்ளார்.

இரு தொடர்கள்

இரு தொடர்கள்

2018ம் ஆண்டு நெட்பிளிக்ஸை அலங்கரித்த இரு தொடர்கள் ஃபிரண்ட்ஸ் மற்றும் தி ஆபீஸ். இதில் ஃபிரண்ட்ஸ் 2020ம் ஆண்டிலும், அதற்கு அடுத்த ஆண்டு தி ஆபீஸ் தொடரும் முடியப் போகிறது. அந்த இடத்தை சீன்பெல்ட் நிரப்புமா என்று தெரியவில்லை. ஆனால் ஓரளவுக்கு அதை சரி செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது.

அமேஸான் பிரைம்

அமேஸான் பிரைம்

ஆனால் இந்தியாவில் இந்தத் தொடர் இப்போது அமேஸான் பிரைம் வீடியோவில் கிடைக்கிறது என்பது நினைவிருக்கலாம். எனவே நம்மவர்கள் ஏற்கனவே சீன்பெல்ட் பார்த்து ரசித்துக் கொண்டுதான் உள்ளனர் என்பதால் நெட்பிளிக்ஸ் ரசிகர்களுக்குத்தான் இது புதுசாக இருக்கும். அமேஸான் ரசிகர்களுக்கு இது ஓல்டுதான். எதுல வந்தா என்னங்க.. கலகலன்னு சிரிக்க வச்சா போதும்.

English summary
The Netflix fan's two most intriguing series is The Friends and The Office. These two web series have charmed the American Netflix audience.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X