அந்த இடத்திற்கு வருவதற்கு பாவனிக்கு தகுதி இல்லை..நிரூப்பின் கருத்து.. காண்டாகும் ரசிகர்கள்
சென்னை: பாவனியை பற்றி ரசிகர்களின் கேள்விக்கு நிரூப் பேசியது ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தவரைக்கும் ஒற்றுமையாக இருந்த அவரா இப்படி பேசியிருக்கிறார் என்று பலர் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்து போன வாழ்க்கை...மீண்டும் திரும்ப ஏங்கும் பாவனி...ரசிகர்களின் ஆறுதல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப் அதற்கு முன்பு மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருந்தார். விளம்பரத் துறையிலும் இவர் தன்னுடைய வேலையை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு இவருடைய முன்னாள் காதலியான யாஷிகா மூலம் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னுடைய திறமையை நிலைநாட்ட வேண்டும் என்று நிரூப் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார்.

தனித்துவமான விளையாட்டு
பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்திலிருந்து ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் கடைசி வாரம் வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து வந்துள்ளார். கடைசியில் ஒரு சில வாரங்களில் இவருடைய விளையாட்டில் ஏற்பட்ட தடுமாற்றம் இவருக்கு ஏற்பட்ட குழப்பத்தால் ஏற்பட்டதாக இருந்தாலும், ஆரம்பத்திலிருந்து இவருடைய விளையாட்டு வித்தியாசமாக இருந்தது. யாரையும் சார்ந்து வாழாமல் இவர் தன்னுடைய விளையாட்டை தைரியமாகவும் தனித்து விளையாடி வந்து ரசிகர்களை கவர்ந்து வந்தது இந்த நிகழ்ச்சிக்கு முன்பு யாரென்றே தெரியாமல் இருந்த தற்போது பலருக்கும் பரிச்சயமாக மாறி இருக்கிறார்.

கடைசி கட்டத்தில் பாவனி
நிரூப்பை போலவே இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அறிமுகமாகி கடைசி நாள் வரைக்கும் இருந்த பாவனியை பற்றி சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். கடைசி 5 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த நிரூப் அவருடன் சக போட்டியாளராக மூன்றாவது இடத்தில் இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பாவனியை பற்றி கூறியுள்ளார். அதுவும் சமூக வலைத்தளத்தில் இவர் பேசிய வீடியோக்களுக்கு ரசிகர்கள் பலர் காண்டாகி எதிர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

நிரூப்பின் கருத்து
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த போட்டியாளர்கள் பலரும் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூகவலைதளத்தில் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது நிரூப் இடம் ஒரு ரசிகர் கடைசி ஐந்து இடங்களுக்குள் வருவதற்கு தகுதி இல்லாத போட்டியாளர் என்று யாரை நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் அப்படி இப்படி யோசித்து கடைசியில் தான் பாவனி என்று கூறியிருக்கிறார். பாவனிக்கு அந்த தகுதி இல்லை என்று கூறியிருக்கிறார். அவருக்கு பதிலாக அந்த இடத்தில் தாமரை வந்திருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதனால் பாவனியின் ரசிகர்கள் நிரூப்பிற்க்கு எதிராக கமெண்டுகளை எழுப்பி வருகின்றனர்.