• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொய் சொல்லக் கூடாது.. வெள்ளை மனசுடன்.. ரசிகர்களை சுண்டி இழுத்த நிவிஷா!

Google Oneindia Tamil News

சென்னை: தன்னுடைய பெரிய வெள்ளை மனதினை கண்ணாடி உடையில் ரசிகர்களுக்காக காட்டி நிவிஷா போட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

அன்பை வழங்குவது மூலம் நீங்கள் எப்போதும் இதயத்தைப் பெறலாம் என புது தத்துவத்தை பேசி அன்பிற்கு இலக்கணமாக தன்னுடைய மனது வெள்ளை என கண்ணாடி உடை போட்டு பெரிய மனதை காட்டி ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளார் நிவிஷா.

"நான் ரொம்ப ரேர்".. என்னடா வசனமே புரியலை.. வசனமாடா முக்கியம்.. படத்தைப் பாருடா!

தற்போது ஊரடங்கு என்பதால் நடிகைகள் பலரும் சூட்டிங் எதுவும் இல்லாமல் வீட்டிலே இருப்பதால் எப்படி நேரத்தை போக்குவது என தெரியாமல் சிலர் ஆட்டம்போடும் சிலர் போட்டோஷூட் நடத்தியும் வருகின்றனர்.

சீரியலில் நடிக்கலை

சீரியலில் நடிக்கலை

ஆனால் இரண்டு வருடமாக சீரியலை விட்டு விலகி இருந்தாலும் தற்போதும் பார்த்து பார்த்து போட்டோ ஷூட் நடத்தி கொண்டிருக்கும் நிவிஷா தினமும் போஸ்ட் போட்டு வருவதால் அவருடைய ரசிகர்களுக்கு நன்றாக என்ஜாய் பண்ணி வருகின்றனர் .சீரியலை தாண்டியும் இவருக்கு சமூக வலைத்தளத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .

முதல் சீரியல்

முதல் சீரியல்

இவர் முதன்முதலில் அறிமுகமான தெய்வமகள் சீரியலுக்கு பிறகு இவருக்கு கிடைத்த வாய்ப்பு எல்லாமே நெகட்டிவ் ரோல் தான் .அதனால் இவரை சீரியல்களில் பார்த்து பல ரசிகர்கள் திட்டி தீர்த்து வந்தனர் .இது இவருக்கு பெரும் மன உளைச்சலாக இருந்திருக்கிறது .அதனால் இவர் இனி நெகட்டிவ் ரோலில் நடிக்க போவதில்லை என அடாவடியாக முடிவெடுத்து ஈரமான ரோஜாவே சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

கேரக்டர் செட் ஆகலை

கேரக்டர் செட் ஆகலை

முதலில் இந்த சீரியலில் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு என கூறி பின்பு நெகட்டிவ் ரோல் என தெரிந்ததும் அந்த கேரக்டர் தனக்கு செட் ஆகாது என வெளியேறிவிட்டார் .அதற்குப் பிறகும் இவருக்கு கிடைத்த வாய்ப்பு எல்லாமே நெகட்டிவ் ரோலில் வந்ததால் தற்போது இரண்டு வருடமாக சீரியலில் தலைகட்டாமல் இருக்கிறார். நடித்தால் நான் ஹீரோயினியாக நடிப்பேன் என காத்திருந்த இவருக்கு தற்போது இங்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கொரோனா பிரேக்

கொரோனா பிரேக்

அதற்கான ஷூட்டிங் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த கொரோனா மீண்டும் தலை தூக்கவே தற்போது வீட்டில் இருந்து வருகிறார். ஆனால் சீக்கிரத்தில் ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொல்லுவேன் என கூறியிருக்கிறார் .தற்போது இன்ஸ்டாகிராமில் ப்ராடைக்ட் ப்ரோமோஷன் மாடலிங் பண்ணிக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய ரசிகர்களுக்காக அடிக்கடி இன்ஸ்டா லைவில் வந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

லவ் புரபோஸ்

லவ் புரபோஸ்

கடைசியாக இவர் பேசிய லைவ்வில் பல ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு லவ் ப்ரொபோஸ் கொடுத்து வருகின்றனர் .ஆனால் அதற்கு சட்டை செய்யாமல் சிரித்தபடியே ரசிகர்களை அலையவிட்டு வருகிறார். அதுவும் இல்லாமல் ஒரு சில ரசிகர்கள் திருமணம் செய்து கொண்டு காலம் முழுக்க உங்களுக்கு சாப்பாடு போட ரெடி என கூறியிருக்கின்றனர் .

சோறு கிடைக்காது பாஸ்

சோறு கிடைக்காது பாஸ்

அதற்கு அவர் சிரித்தபடியே என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுக்கே வீட்டுல சாப்பாடு போட மாட்டாங்க என திருப்பி கலாய்த்திருக்கிறார். இவருடைய புசுபுசுவென இருக்கும் அழகை பார்த்து பலருக்கும் பிடித்து இருந்தாலும் இவர் தற்போது வீட்டில் ஒர்க்கவுட் செய்து பாடியை மெயின்டனன்ஸ் பண்ணி வருகிறாராம். இவருடைய அழகின் ரகசியத்தை பற்றி தான் பலரும் இவரிடம் கேட்டு வருகின்றனர் .

மேக்கப்பெல்லாம் இல்லை

மேக்கப்பெல்லாம் இல்லை


அதற்கு இவர் தான் பெரிய அளவில் மேக்கப் எதையும் முகத்திற்கு போடுவது இல்லை .கண்ட கண்ட கிரீம்களை யூஸ் பண்ணமாட்டேன் .ஒன்லி இயற்கை மருந்துகள் தான் அதுவும் கற்றாழை ஜெல் போன்ற இயற்கை பொருள்களை அடிக்கடி பயன்படுத்துவேன் .சூட்டிங் செல்லும்போது அந்த அளவிற்கு தன்னை கவனிக்க நேரமில்லை.

தொப்பையைக் குறைச்சுட்டேன்

தொப்பையைக் குறைச்சுட்டேன்

ஆனால் தற்போது வீட்டில் இருப்பதால் என்னை நான் நன்றாக கவனித்துக் கொள்கிறேன். இதற்கு முன்பு பெரிய தொப்பையோடு இருந்தேன் அது எனக்கே பார்க்க ஒரு மாதிரி இருந்ததால் தற்போது எக்சர்சைஸ் செய்து நன்றாக மெலிந்து விட்டேன் என கூறியிருக்கிறார். எப்படியோ நிவிஷா நல்லா இருந்தா எங்களுக்கும் ஓகேதான் என்று ரசிகர்களும் கொஞ்சி வருகின்றனர்.

English summary
Nivisha latest singing video goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X