• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

Pandian Stores Serial: அண்ணன் பேச மாட்டேங்குது டா.. கவலையில் ஜீவா!

|

சென்னை: தொலைக் காட்சி சானல்களில் வரிசையாக சீரியல் பார்ப்பது... அதில் நடக்கும் அக்கிரமங்களை பார்த்து டென்சன் ஆவது.. கூடவே அழுவது..எரிச்சலாவது என்று நவரசங்களையும் சீரியல் பார்ப்பவர்களின் முகத்தில் காணலாம்.

அதுவும் இந்த பிக் பாஸ் ஒளிபரப்பான போது.. அதை சீரியஸாக பார்க்கும் மக்களின் முகத்தைப் பார்க்கணுமே... தூரத்தில் டிவியைப்பார்க்காமலே கணித்துவிடலாம் பிக்பாஸ் வீட்டில் சண்டை என்று.

இப்படியாக போகும் சீரியல்கள் மத்தியில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எந்தவித டென்ஷனும் இல்லாமல் ஒரு நல்ல குடும்பத்தில் நாமும் வசிப்பது போன்ற உணர்வுடன் பயணிக்குது.

பட பாணியில்

பட பாணியில்

ஆனந்தம் பட பாணியில் ரொம்ப யதார்த்தமாக எந்த வித குடும்ப சண்டையும் இல்லாமல் பயணிக்குது. மூத்த அண்ணன் மம்முட்டி மாதிரி ரொம்ப அருமையானவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில். தம்பிகளை ஆளாக்கின இவரது மனைவி தனம் தனக்கு குழந்தை வேண்டும் என்று கூட நினைத்ததில்லை.

மீனா ஜீவா

மீனா ஜீவா

மூத்தவருக்கு அடுத்தவன் ஜீவா.இவன் பணக்கார வீட்டு பெண் மீனாவை காதலிச்சு கல்யாணம் செய்துக்கிட்டதால், இவன் கட்டிக்க வேண்டிய முறைப் பெண் முல்லையை இவனுக்கு இளையவன் கதிருக்கு கட்டி வச்சுடறாங்க. குடும்பத்தில் அவ்வப்போது குழப்பம், கலகம் ஏற்படுத்துபவள் மீனா மட்டும்தான்.அது கூட சிறுபிள்ளைத் தனமாகத்தான் இருக்கும்.

முல்லை கதிர்

முல்லை கதிர்

முல்லைக்கும், கதிருக்கும் ஏற்கனவே ஒத்துக்காது என்றாலும், நாட்கள் கழிந்ததில் ஒருவருக்கு ஒருவரைப் பிடித்துப் போகிறது. எல்லாரும் சேர்ந்து இன்னொரு கடை வைக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். அந்த கடைக்கு யார் பெயரை வைக்கலாம் என்று ஆனந்தம் பட கதை போலவே விவாதமும் வருகிறது.

பொய் ஜுரம்

பொய் ஜுரம்

திடீரென்று மீனா கடைக்கு பாக்கெட் போட போகக் கூடாது என்று ஜுரம் வந்தவள்போல நடிக்கிறாள். சரி, ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போறேன்னு தம்பி ஜீவா பொண்டாட்டி மீனாவை அழைச்சுக்கிட்டு போகும் போது, எனக்கு ஜுரம் இல்லைடா ஜீவா.கடைக்கு போக கூடாதுன்னு நன் போய் சொன்னேன்னு சொல்லிட்டு, ஊர் சுத்திட்டு ஐஸ் க்ரீம் சாப்பிட்டுட்டு வர்றாங்க.

பேசலைடா கதிர்

பேசலைடா கதிர்

கதிர் அண்ணன் ரெண்டு நாளா என் கூட முகம் குடுத்து பேசமாட்டேங்குதுடா.. உனக்கு எதுவும் தெரியுமான்னு கேட்கிறான் ஜீவா தம்பி கதிரிடம். நம்ம அண்ணன்தானே பேசாம எங்க போயிடப் போகுது விடுண்ணேன்னு சொல்றான். எப்பிடிடா விட முடியும்..மனசு சரியில்லைடா.. அண்ணன் பேசலேன்னா என்னவோ மாதிரி இருக்குடா.. உனக்கு தெரியும்..நீ சொல்லுன்னு கேட்கிறான் ஜீவா.

இருவரையும் பார்த்ததை

இருவரையும் பார்த்ததை

அண்ணன் நீங்க ரெண்டு பேரும் ஆஸ்பத்திரிக்குப் போகாம ஐஸ்கிரீம் சாப்பிட்டதை பார்த்துருச்சு.நீ பொய் சொல்றேன்னு வருத்தப்பட்டுச்சு.அதான் காரணம்னு கதிர் சொல்றான். இதற்காக வருத்தப்படும் ஜீவா, ஆமாம்டா.. மீனா கடைக்கு போகக் கூடாதுன்னு சும்மா ஜுரம் வந்த மாதிரி நடிச்சு இருக்கா. எனக்கே அப்புறம்தாண்டா தெரிஞ்சுதுன்னு ஜீவா வருத்தப்படறான்.

இப்படி ரொம்ப சாஃப்டான கதையா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதை இருக்குது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
When this Bigg Boss airs .. The look on the face of people who see it as serious ... In the distance can be imagined as a fight in the Bigpass house. Vijay TV's Pandian Stores serial is one of the most popular serials that we feel like living in a good family without any tension.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more