For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டச்சிங்.. டச்சிங்.. சீரியஸ் சீரியலில் பிரதர் சென்டிமென்ட்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்ப வாழ்க்கையை யதார்த்தமா காமிக்கறது நல்லா இருக்கு.

கூடவே அண்ணன் தம்பிகள் சென்டிமென்ட் வேற.. கேட்டகணுமா இல்லத்தரசிகளின் மனம் கவர்வதற்கு. அண்ணன் தம்பி நாலு பேர்.இதுல மூணு பேருக்கு கல்யாணம் ஆயிருச்சு...

கடைசி பையன் காலேஜ் படிக்கறான். நடிகை சுஜிதா பெரிய அண்ணியா நடிச்சுருக்கறது நல்லா இருக்கு. விஜய் டிவி சீரியல்களில் ஸ்டார் காஸ்ட் ஒண்ணும் இருக்காது.

ஆனா, பாப்புலரான தலைப்பு வச்சு சீரியலை ஒரு குறிப்பிட்ட தரப்பினரிடம் கொண்டு சேர்த்துருவாங்க. ஆனா, பாண்டியன் ஸ்டோர்ஸ்னு பாப்புலர் பேர் இல்லாத நிலையிலும் எப்படி இந்த சீரியலை கரை சேர்த்து இருப்பாங்கன்னு பார்த்தா கதை பாப்புலர்.. இந்த சீரியல் படத்தோட சம்பந்தப்பட்ட கதைங்க.

Pandian stores teaches good family sentiments

மம்முட்டி மூத்த அண்ணன், முரளி, அபாஸ்னு அண்ணன் தம்பியா நடிச்ச படம் ஒண்ணு அப்பப்போ நினைவுக்கு வரும். இந்த ஃபார்முலாவை வச்சுத்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை மக்கள்கிட்ட கொண்டு சேர்த்து இருக்காங்க.

Pandian stores teaches good family sentiments

நிறைய சீன்கள் அன்பு, பாசம், ஒற்றுமை சார்ந்த காட்சிகளா இருக்கு. கடை ரொம்ப நஷ்டத்துல போய்கிட்டு இருக்கு. வீட்டில் கூட மளிகை சாமான் இல்லாத நிலை. வீட்டில் இருக்கும் மத்தவங்களுக்கு தெரியாம எதையோ சமைச்சு சமாளிக்கறா மூத்த மருமக தனம்.

Pandian stores teaches good family sentiments

இன்னிக்கு கொத்து இட்லி பண்ண போறேன்னு தனம் சொல்ல, ஆத்தாடி கொத்து இட்லி அது இதுன்னு அக்கா விஷப் பரீட்சையில் இறங்கிட்டாங்களே.. இனிமே உண்மையை சொல்லாம இருக்க முடியாதுன்னு மூணாவது மருமக முல்லை, கடையில மாமா கிட்ட சொல்லிடறா.

அதுக்குப் பிறகுதான் வீட்டுல அரிசி கூட இல்லைன்னு தெரியுது. பார்த்தா அன்னிக்கு ஞாயிற்று கிழமை. கறிஎடுக்கணும்னு கூட அண்ணனுக்கு மறந்து போகுது. கடைக்குட்டி தம்பி இன்னிக்கு நான் வெஜ் சமைக்கலையான்னு கேட்கறப்போதான் நினைவு வருது.

Pandian stores teaches good family sentiments

சட்டைப் பையில பார்த்தா காசு இல்லை. கொஞ்சம்தான் இருக்கு. ஒரு வாரத்துக்கு 3 கிலோ கரி எடுக்கற வீட்டுல 200 ரூபாய் எப்படி போதும்னு யோசிச்சுகிட்டு இருக்கார் அண்ணன்.

ரெண்டாவது தம்பி வந்து, அண்ணி இந்தாங்க அண்ணி..இதுல ஒரு கிலோ கறி இருக்கு.. சமைச்சுருங்கன்னு சொல்றான்.ஏதுடா உன்கிட்ட காசுன்னு அண்ணன் கேட்க, என் ஃபிரண்ட் ஒருத்தன் புதுசா கறிக்கடை தொறந்து இருக்கான். அவன் குடுத்தான் அண்ணேன்னு சொல்றான்.

Pandian stores teaches good family sentiments

எனக்கு தெரியாம உனக்கு யாருடா கறிக்கடை வச்சிருக்கற நண்பன்னு அண்ணன் கேட்டுகிட்டு இருக்கும்போதே, மூணாவது தம்பி வந்து அண்ணி இதுல ஒரு கிலோ மீன் இருக்கு. சமைங்க அண்ணின்னு சொல்றான். ஏதுடா காசுன்னு கேட்டப்போ, அன்னிக்கு ஆட்டோல போன்னு காசு குடுத்தீங்களே.. இதுக்கு எதுக்கு ஆட்டோவுல போகணும்னு நடந்தே போயிட்டேண்ணே..அந்த காசுதான் இதுன்னு சொல்றான்.

6 பேருக்கு இருக்குற ஒரு கிலோ கறியும், ஒரு கிலோ மீனும் எப்படி போதும்னு நினைச்ச தனம், சமைச்சு முடிச்சுட்டு, இன்னிக்கு பிரதோஷ நான் விரதம்னு சொல்லி கறி சாப்பிடலை. அண்ணன் எனக்கு வயிறு சரியில்லைன்னு வெறும் தயிர் சாதம் போதும்னு சாப்பிடறார்.

உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும்.. கிறிஸ்தவர்களுக்கு முதல்வர் ஈஸ்டர் வாழ்த்து உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும்.. கிறிஸ்தவர்களுக்கு முதல்வர் ஈஸ்டர் வாழ்த்து

ஒரு கூட்டு குடும்பம் எப்படி இருக்கணும்..அதில் மூத்தவர்களின் பங்களிப்பு எப்படி இருக்கணும்னு தெரிஞ்சுக்க இந்த காட்சிகள் உதவியா இருக்கு. பார்க்கவும் நல்லாருக்கு.

English summary
Vijay TV's Pandian Stores Serial Family Life is a real life showing
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X