அனைவரையும் சிரிக்க வைப்பதற்காக பாண்டியன் ஸ்டோர் ஜீவா பட்ட கஷ்டம்..இது தெரியாம இப்படி எல்லாம் பேசலாமா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது இரண்டு நாட்களாக ரசிகர்களை கவர்ந்த சீனில், நடந்ததை பற்றி வெங்கட் மனந்திறந்து கூறியிருக்கிறார்.
சீரியல் ரசிகர்கள் வாய்விட்டு சிரிப்பதற்கு காரணமான இருந்த சீனில் தான் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தேன் என்பதை அனைவருக்கும் வீடியோ மூலமாக வெங்கட் விளக்கியுள்ளார்.
ரொம்ப வீக்கா இருக்காரே.. பெரிய ஆபத்து! ரஷ்ய போரில் மூக்கை நுழைத்த டிரம்ப்.. என்ன இப்படி சொல்கிறார்?

வேற லெவல் காமெடி சீன்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பல ரசிகர்களை கவர்ந்து விடுகிறது. அந்த வகையில் அதிகமான குடும்ப ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது இரண்டு மூன்று நாட்களாக ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. அதற்கு காரணம் அந்த சீரியலில் ஜீவா கேரக்டரில் நடித்து வந்த வெங்கட் செய்த குறும்பு தனம் தான். பலநாட்களாக இந்த சீரியலில் அழுகாச்சி சீன்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் அதற்கு மாற்றாக ஜீவாவின் அட்ராசிட்டி குறும்புகள் அனைவரையும் கவர்ந்திருந்தது.

கடை திறப்பு விழா
பாண்டியன் ஸ்டோர் சீரியல் அண்ணன் தம்பி குடும்ப ஒற்றுமையை மையமாகக்கொண்ட சீரியலாக இருந்தாலும் அண்ணன் தம்பி அனைவரும் பாண்டியன்ஸ்டோர் எனும் ஒரு மளிகைக் கடையை நம்பி தான் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவர்கள் தற்போது கடையை சூப்பர் மார்க்கெட்டாக மாற்றி இருந்தனர். இந்த நிலையில் சூப்பர் மார்க்கெட்டை திறப்பதற்கு பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. ஒரு சில வாரங்கள் தொடர்ந்து இந்த சீரியலில் அழுகாச்சி சீன்களை பார்த்து வந்த ரசிகர்களுக்கு போரடித்து வந்த நிலையில் ஒருவழியாக பிரச்சினைகளை எல்லாம் முடிந்து பாண்டியன் ஸ்டோர் சூப்பர் மார்க்கெட் கோலாகலமாக திறக்கப்பட்டது.

அனைவரையும் சிரிக்க வைத்த ஜீவா
எப்போதுமே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பங்ஷனுக்கு பஞ்சமில்லாமல் தான் இருந்து வரும். திருமணம், வளைகாப்பு, காதுகுத்து என்று ஒவ்வொரு சீசனுக்கு தகுந்த பங்க்ஷன் கொண்டாடப்பட்டு வருவது போல, தற்போது கடை திறப்பு விழாவும் பிரமண்டமாக கொண்டாடப்பட்டது. அதற்கு அடுத்துதான் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் சீரியலில் நடந்திருக்கிறது. இந்த சீரியலின் ஜீவாவாக நடித்துவரும் வெங்கட் குடித்துவிட்டு அண்ணன் தம்பி பாசங்களை பிழிவதைப் பார்த்து ரசிகர்கள் பலர் வாய்விட்டு சிரித்து வந்தனர். பொதுவாக அடுத்து என்ன நடக்குமோ?? யார் பிரச்சனை பண்ணுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த சீரியலில் இந்த ஜாலியான எபிசோடுகள் அனைவரையும் கவர்ந்திருந்தது.

எவ்வளவு வேலை பண்ண வேண்டியது இருக்கு
ஜீவா குடித்துவிட்டு நடித்த எபிசோடுகளை பார்த்த ரசிகர்கள் பலர் நிஜமாகவே நீங்கள் குடிப்பீர்களா??அப்படியே இருக்கிறது..என்று அவருக்கு கமெண்ட் அனுப்பி கொண்டிருந்தார்களாம். அதனால் அந்த சீனில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தேன் என்று அந்த வீடியோக்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் கண்கள் சிவப்பாக தெரிவதற்கு தன் கை விரல்களை வைத்து கண்களை கசக்கி இருக்கிறார். அதனால் அது சிவப்பாக மாறி இருக்கிறது. அதற்குப் பிறகு ஸ்பிரே மூலம் தன்னுடைய உடம்பு முழுக்க வேர்வை வந்தது போல செட்டிங் செய்து கொண்டுதான் அவர் அந்த மாதிரி நடித்திருக்கிறார். இவர் இவ்வளவு கஷ்டப்பட்டு நடித்த சீனை பார்த்து பலர் சந்தோஷப்பட்டாலும் தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று மனப்பூர்வமாக தனக்கு சப்போர்ட் கொடுத்து ரசிகர்களுக்கு வெங்கட் நன்றி கூறி இருக்கிறார்.