பாவனிக்கு பாயாசத்தை காட்டாத தாமரை...அடுத்த பஞ்சாயத்து தொடங்கியதா??
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் பாயாசம் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருமாறி வந்து கொண்டிருக்கிறது.
தாமரையின் கேரக்டர் உண்மைதானா என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வேதா இல்லம் தொடர்பாக அதிமுக மேல்முறையீடு – தீபாவுக்கு புதிய தலைவலி
சொல்வதையெல்லாம் தாமரை செய்வது கிடையாது என்று நெட்டிசன்கள் ஒரு பக்கமாக கலாய்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

சண்டைகளுக்கு பஞ்சமில்லை
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் தான் ஒவ்வொரு சீசனிலும் இருந்து வருகிறது. அதற்கு ஐந்தாவது சீசனும் சளைத்தது அல்ல என்று தற்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறது. எதை செய்தாலும் குற்றம் என்று ஒரு சில நேரங்களில் ஒரு சிலருடைய செயல்பாடுகள் இருந்து வருகிறது. தாங்களும் கருத்துக்களை தெரியப்படுத்த வேண்டும் என்று போட்டியாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு கருத்துகளை கொட்டி வருகிறார்கள்.

குழப்பத்தில் ரசிகர்கள்
ரசிகர்கள் ஒரு பக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரிவ்யூ கொடுத்துக் கொண்டிருக்கும் போது உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் இப்படித்தான் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்று நன்றாக புரிந்து கொண்டு விளையாட்டை தொடங்கியிருக்கின்றனர். அதுவும் தாமரையின் விளையாட்டு வேற லெவலில் இருந்து வருகிறது என்று அனைத்து தரப்பினரும் கூறிவருகின்றனர். ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது விளையாட்டை பற்றி தெரியாமல் திணறிய தாமரையா இது என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்களின் கேள்வி
பிக் பாஸ் வீட்டில் அதிகமாக வேலை செய்யும் ஒரு போட்டியாளராக தாமரைச்செல்வி இருந்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரசிகர்கள் கூறுவது போலவே அடிக்கடி தாமரைச்செல்வி தான் பிக் பாஸ் வீட்டில் சமையல் செய்வதும் பாத்திரங்களை கழுவுவது என பல வேலைகளை செய்து வருகிறார். தற்போது சமையலறையில் தாமரைச்செல்வி செய்த செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. என்ன இவரா இப்படி செய்து விட்டார் என்று பலர் தாமரையை பற்றிய கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

பாயாசத்திற்கு பஞ்சாயத்து
தாமரைச்செல்விக்கும் பாவனிக்கும் இருக்கும் பிரச்சனை பலருக்கும் தெரிந்ததுதான். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக முகத்தை திருப்பிக் கொண்டு இருந்தாலும் நேற்றைய எபிசோடில் தாமரைச்செல்வி பாயாசம் செய்துள்ளார். அதை அனைவருக்கும் தன் கையால் ஊற்றிக் கொடுத்து இருக்கிறார். ஆனால் அவர் பாவனியிடம் கேட்கவில்லை என்று பலரும் தாமரைச்செல்வியிடம் கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றனர். சாப்பாடு விஷயத்தில் யாரும் பட்டினியாக இருந்தால் தனக்கு பிடிக்காது என்று கூறிய அதே தாமரைச்செல்வியா இப்படி செய்வது என்று போட்டியாளர்களும் ரசிகர்களும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.