For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Lock Down: வெறும் நியூஸ் சானல்தான்.. மத்த எல்லாமே மக்களுக்கு அலுத்துப் போச்சு!

Google Oneindia Tamil News

டெல்லி: கோவிட் 19 தொற்று லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்து இது நாள்வரை தொலைக்காட்சி பார்த்து வந்த மக்களுக்கு இப்போது அலுப்பு தட்டிவிட்டது என்று பார்க் நெல்சன் அறிக்கை தெரிவித்துள்ளது.

முதல் லாக்டவுன் காலத்தில் எப்படி பொழுதை கழிக்கப் போகிறோம் என்கிற பயத்தில், மக்கள் தாங்களாக முன் வந்து டிவி பார்ப்பது.. ஆன்டிராய்டு போனில் எதையாவது பார்ப்பது என்று முழுவதுமாக காலம் கழித்தனர்.

இதனால் ஓடிடி இயங்கு தளங்கள், தொலைக்காட்சிகளில் லாக்டவுன் ஆரம்ப சில நாட்களில் விளம்பரம் இல்லாமல் இருந்தது. ஆனால், அடுத்த ஓரிரு நாட்களில் வழக்கம் போல அத்தியாவசிய பொருட்களின் விளம்பரங்கள் அணிவகுக்க ஆரம்பித்தன என்றும் அந்த அறிக்கைத் தெரிவிக்கிறது.

சோப்பு க்ளீனிங்

சோப்பு க்ளீனிங்

சோப்பு தண்ணீர், தரை க்ளீனிங் பொருட்கள் விளம்பரம் என்று தலை தூக்க ஆரம்பித்து,. அடுத்தடுத்து அன்றாட அத்தியாவசிய சமையல் பொருட்களின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் குவிய ஆரம்பித்தன என்றும் அந்த அறிக்கைத் தெரிவிக்கிறது.

போகப்போக ஆர்வமில்லை

போகப்போக ஆர்வமில்லை

லாக்டவுன் காலம் நீட்டிக்க நீட்டிக்க மக்களுக்கு ஆன்டிராய்டு போனில் பிடித்தவற்றை பார்ப்பது.. தொலைக்கட்சிகளில் படங்களை, மறு ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பது என்பதில் ஆர்வம் வெகுவாக குறைந்துவிட்டதாம். இதனால், தொலைக்காட்சிகளுக்கு விளம்பரங்களை தருவதை விளம்பரதாரர்கள் கணிசமாக குறைத்து உள்ளனர் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

வாரத்துக்கு மொத்த விளம்பரம்

வாரத்துக்கு மொத்த விளம்பரம்

தொலைக்காட்சிகளில் இந்த நிகழ்ச்சிகளுக்கு அந்த நிகழ்ச்சிகளுக்கு என்று தனித் தனியாக இல்லாமல் வாரத்துக்கு இவ்வளவு விளம்பரங்கள் என்று மொத்த ரேட்டில் விளம்பரதாரர்கள் பேரம் பேசி தொலைக் காட்சிகளுக்கு விளம்பரங்களைத் தருகிறார்கள்.

வாரத்துக்கு வாரம்

வாரத்துக்கு வாரம்

இந்த லாக்டவுன் நேரத்தில் வாரத்துக்கு வாரம் என்று பார்வையாளர்கள் கூடிக்கொண்ட போவது செய்தி சானல்களுக்கு மட்டும்தான் என்று பார்க் நெல்சன் அறிக்கைத் தெரிவிக்கிறது. லாக்டவுன் ஆரம்ப காலத்தில் செய்தி சானல்களை பார்வையாளர்கள் அளவு ஒரேயடியாக எகிறின அளவுக்கு என்று இல்லாவிட்டாலும், வாராவாரம் செய்தி சானல்களை மட்டும் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

English summary
fearing how they would be entertained during the first Lockdown period, people would come up to themselves and watch tv.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X