For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொங்கலோ பொங்கல்... வேந்தர் டிவி, புதுயுகம் டிவியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்

வேந்தர் டிவி, புதுயுகம் டிவி, சத்தியம் தொலைக்காட்சிகளில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தை திருநாள் தமிழ் நாட்டில் போகி தொடங்கி காணும் பொங்கல் வரை நான்கு நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. தொலைக்காட்சிகளில் புத்தம் புதிய திரைப்படங்களும் ஒளிபரப்பாக உள்ளன.

வேந்தர் தொலைக்காட்சியில் கலைப்பொங்கல் கொண்டாடுகின்றனர். இந்த நிகழ்சியில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தமிழர்களின் பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நடத்திக்காட்டுகிறார்கள்.

அதோடு, பள்ளியில் உள்ள வகுப்புகளின் எண்ணிக்கைக்கேற்ப பொங்கல் பானைகளை வைத்து பொங்கலிட்டுள்ளனர்.

ருத்திரன்கோயில், திருக்கழுகுன்றம்

ருத்திரன்கோயில், திருக்கழுகுன்றம்

ருத்ரகோடீஸ்வரர் ஆலயம் பற்றி புதுயுகம் டிவியில் ஒளிபரப்பாகிறது. சுமார் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம். திருக்கழுகுன்றத்தின் முதன்மையான கோயில் இதுவே. கோடி உருத்திரர்கள் பாவம் தீர வழிபட இறைவன் கோடிலிங்கமாய் காட்சி அளித்த திருத்தலம். திருநந்திதேவர் கருடனின் ஆணவத்தை அடக்கி பூமியில் புதைய செய்த தலம். திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற கோயில் பற்றி அறிந்து கொள்ளலாம்.

பொங்கல் பாடல்கள்

பொங்கல் பாடல்கள்

பொங்கல் பண்டிகையன்று ஹிப் ஹாப் பாடல்களுடன் நம் பொங்கல் இருந்தால் எப்படி இருக்கும்! தமிழர்கள் பாரம்பரியம், இன்றைய நவீன பொங்கல் விழாக்கள் தமிழ் மொழியின் சிறப்பு என பல்வேறு தலைப்பின் கீழ் ஹிப்ஹாப் பாடல்களை பாடியுள்ளனர். ''டியூட்ஸின் மெட்ராஸ்'' குழுவினர். இந்நிகழ்ச்சி பொங்களல் அன்று காலை 10 மணிக்கு உங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

டிக் டிக் டிக்

டிக் டிக் டிக்

நமது சினிமா பிரபலங்களின் பட அனுபவங்களை கேட்பதில் நமக்கு எப்போதும் தனி ஆர்வம் இறுக்கும் அந்த வகையில் நமது புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் பொங்கல் அன்று விண்வெளி சம்பந்தமான முதல் தமிழ் திரைபடம் 'டிக் டிக் டிக்' படத்தின் நாயகி நிவேதா பெத்துராஜ் அவர்களின் பிரத்தியோக பேட்டி ஒளிபரப்பாக உள்ளது, டிக் டிக் டிக் படத்தின் அனுபவத்தையும் தனது சினிமா பயணத்தைப் பற்றியும் பகிர்ந்துகொள்ளும் 'வைரல் அழகி' நிகழ்ச்சி இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மதன் கார்க்கி

மதன் கார்க்கி

தமிழர்களின் திருவிழாவான பொங்கல் திருநாள் அன்று பாடல்களின் இளம் நாயகனான கவிஞர் மதன் கார்க்கி பங்குபெறும் சிறப்பு மார்னிங் கஃபே நிகழ்ச்சியில் எந்திரனில் தொடங்கி 2.O வரை அவர் பயணித்த சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது இந்நிகழ்ச்சியினை கண்மணி மற்றும் சுவாதிஷ்டா தொகுத்து வழங்குகின்றனர்.

பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்

பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பளியில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி கலகலப்பான கலைநிகழ்ச்சியாய் வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி ஞாயிறு மற்றும் திங்கள் இரவு 9 மணிக்கு மீண்டும் மறு ஒளிபரப்பாகிறது.

காவடியாட்டம்

காவடியாட்டம்

பள்ளி மாணவர்கள் பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், சிலம்பம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளை வண்ணமயமாய் நிகழ்த்தியிருக்கின்றனர்.

இயற்கை பட்டிமன்றம்

இயற்கை பட்டிமன்றம்

வேந்தர் டிவியில் தைத்திருநாளை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் ஞாயிறு காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. உரத்த சிந்தனையாளர் சபரிமாலா ஜெயகாந்தன் தலைமையில் சிறந்த பேச்சாளர்கள் இரு அணிகளாக பிரிந்து பேசும் இந்த பட்டிமன்றத்திற்கு "உழவர் வாழ்வியல் இனி மீளுமா..? வீழுமா..?" என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. உழவன் பெருமையை பறைசாற்றி, இயற்கையை வணங்கும் பொங்கல் திருநாளில் உழவர்களை மையமாக வைத்து நடத்தப்படுகிறது.

தை திருநாள் பட்டிமன்றம்

தை திருநாள் பட்டிமன்றம்

சத்தியம் தொலைக்காட்சி வழங்கும் பொங்கல் திருநாள் சிறப்பு பட்டிமன்றம். தமிழர்கள் "அறம் காத்து வாழ்கிறார்களா?" இல்லை "அறம் இழந்து வீழ்கிறார்களா?" என்ற தலைப்பில் ஒரு காரசாரமான பட்டிமன்றம். அறம் செய்ய விரும்பு என்று கூறினார் அவ்வை . அந்த அறத்தின் வழி நின்று இன்று தமிழன் வாழ்கிறானா? என்று கேள்வியோடு ஆரம்பிக்கும் இந்த பொங்கல் திருநாள் சிறப்பு பட்டிமன்றம் சிறந்த பேச்சாளர்களை கொண்டு உங்கள் இல்லம் தேடி வருகிறது. இந்த நிகழ்ச்சி வரும் 14ஆம் தேதி தை திருநாள் அன்று காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

தங்கர் பச்சன் பேட்டி

தங்கர் பச்சன் பேட்டி

திரை உழவன்". பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி. அழகி, தென்றல் , பள்ளிக்கூடம் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய மண் மணம் கமழும், மண் வாசனையை திரையில் உணர்வு பூர்வமாக மக்களுக்கு காண்பித்த இயக்குனர். மாறுபட்ட கதைகளம் அமைத்து தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிய வெற்றி இயக்குநர் தங்கர்பச்சனின் பொங்கல் அனுபவங்களை சத்தியம் தொலைக்காட்சியுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி. உழவர் திருநாளன்று 15 ஆம் தேதி திங்கள் காலை 10.30மணிக்கு சத்தியம் டிவியில் ஒளிபரப்பாகிறது.

English summary
Four SC Judges who met the Press today in Delhi were stunned after the media persons posed volley of questions on the Judges' allegations against the CJI and the SC administration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X